ஈரான் குறுதித்தான் மாகாணம்

குர்திஸ்தான் மாகாணம் (Kurdistan Province (பாரசீக மொழி: استان کردستان‎, Ostān-e Kordestān) என்பது ஈரானின் முப்பத்தோறு மாகாணங்களில் ஒன்று ஆகும்.

இந்த மாகாணமானது 28,817 km² பரப்பளவு கொண்டது. இந்த மாகாணத்தில் நான்கில் ஒரு பகுதியானது குர்துகள் வாழும் பகுதியை உள்ளடக்கியது. ஈரானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இது, ஈரானின் மண்டலம் 3இல் உள்ளது, இந்த மாகாணத்தின் மேற்கில் ஈராக்கும், வடக்கில் மேற்கு அசர்பைசான் மாகாணம், வடகிழக்கில் சஞ்சன் மாகாணம், கிழக்கே அமாதான் மாகாணம், தெற்கில் கெர்மான்ஷா மாகாணம் போன்றவை உள்ளன. குர்திஸ்தான் மாகாணத்தின் தலைநகர் சனந்தாஜ் (குர்தியம்: Sinne) நகரம் ஆகும். மாகாணத்தில் உள்ள பிற முக்கிய நகரங்களாக மரிவன், பானே, சக்ஸ்கீஸ், கொரேவ், பிர்ஷான்ஹர், பிஜார், கமயாரன், டெகோகோலன், தீவன்தேர், சர்வபாத் ஆகியவை உள்ளன.

குர்திஸ்தான் மாகாணம்
Kurdistan Province

استان کردستان
மாகாணம்
Map of Iran with Kurdistan Province highlighted
ஈரானில் குர்திஸ்தான் மாகாணத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 35°18′41″N 46°59′46″E / 35.3113°N 46.9960°E / 35.3113; 46.9960
நாடுஈரான் குறுதித்தான் மாகாணம் Iran
வட்டாரம்வட்டாரம் 3
தலைநகரம்சனந்தாஜ்
மாவட்டங்கள்10
அரசு
 • ஆளுநர்பஹம் மொராட்னியா
பரப்பளவு
 • மொத்தம்29,137 km2 (11,250 sq mi)
மக்கள்தொகை (2016)
 • மொத்தம்1,603,011
 • அடர்த்தி55/km2 (140/sq mi)
நேர வலயம்IRST (ஒசநே+03:30)
 • கோடை (பசேநே)IRST (ஒசநே+04:30)
முதன்மை மோழிகள்பாரசீகம் (அதாகாரப்பூர்வமாக)
உள்ளூர் மொழிகள்:
குர்தி
அசர்பைஜானி

நிலவியல்

ஈரான் குறுதித்தான் மாகாணம் 
சனந்தாஜ் நகரிலுள்ள சுதந்திர சதுக்கம்

குர்திஸ்தான் மாகாணம் ஒரு மலைப்பாங்கான பகுதியாகும், இது சனந்தாஜ் நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் மற்றும் மலைகளின் காரணமாக குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள பல ஆறுகள், ஏரிகள், பனிப்பாறைகள், குகைகள் போன்றவை மாகாணத்தை அழகாக்குகின்றன. இதன் விளைவாக, குர்திஸ்தான் மாகாணமானது எப்போதும் மலையேற்றம், பனிச்சறுக்கு, நீர் விளையாட்டு போன்றவற்றின் விரும்பிகளை ஈர்க்கும் இடமாக உள்ளது.

302 கிமீ நீளம் கொண்ட ஜாரினீ ஆறு இந்த மாகாணத்தின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். அதன் ஆற்றங்கரைகளானது பொழுதுபோக்குக்கான சிறந்த இடங்களாக உள்ளது, இந்த ஆறானது நீர் விளையாட்டுக்கான சிறந்த இடமாக உள்ளது. இந்த ஆறு வடக்கில் தோன்றி இறுதியில் உர்மியா ஏரியை வந்து சேர்கிறது. இந்த மாகாணத்தில் இன்னொரு முக்கியமான ஆறு சிர்வான் நதி ஆகும். அது மாகாணத்தில் நீண்ட தூரம் ஓடி, இறுதியில் ஈராக்கில் டைக்ரிஸ் ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரைகளானது மக்களைக் கவரக்கூடியதாக உள்ளது. இந்த மாகாணத்தில் பாயும் குறிப்பிடத்தக்க மற்றொரு ஆறு சிமினே நதியாகும். மாகாணத்தின் பாயும் பல ஆறுகளானது பெருமளவிலான நீர் உயிரினங்கள் மற்றும் பறவைகளின் சிறந்த வாழ்விடங்களாக உள்ளதைக் காணலாம்.

சாரிவர் ஏரியானது மாகாணத்தில் உள்ள மிக அழகான நீர்ப் பாதையாகும். இது உயரமான மலைகளின் அடிவாரத்தில் அழகாக காட்சிதரும் விதத்தில் அமைந்துள்ளது. இது ஒளி ஊடுருவும் நன்னீர் கொண்டதாக உள்ளது. இந்த ஏரியின் அதிகபட்ச ஆழம் 50 மீட்டராக உள்ளது. இதன் சராசரி ஆழமானது 3 மீட்டராக உள்ளது. இந்த ஏரியானது அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த ஏரியும் அதை ஒட்டிய மலைகள், காடுகள் ஆகியவை கண்ணைக்கவரும் அகலப்பரப்புக் காட்சியை அளிக்கின்றன. இந்த ஏரியானது, 5 கிமீ நீளமும், அதிகபட்சமாக 1.7 கிமீ அகலமும் கொண்டதாக, மரிவன் நகருக்கு மேற்கில் உள்ளது. சனந்தாஜ் நகரின் வடக்கில் உள்ள வனாதை ஏரியானது, மீன்பிடித்தல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான சிறந்த வாய்ப்புள்ள இடமாக உள்ளது.

குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள பல பயனுள்ள கனிம நீர் நீரூற்றுகளானது நன்மை அளிப்பதாக கருதப்படுகிறது. இவற்றில் மிகச்சிறந்தவையாக: கம்யானின் வடமேற்கில் உள்ள கோவாஸ், பிஜார் அருகே உள்ள அபேட்டல்க், குரோவ் வடக்கில் பாபா கோர்கர் ஆகியவை ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

அமாதான் மாகாணம்ஈராக்குஈரானின் மாகாணங்கள்ஈரான்குர்திய மொழிகெர்மான்ஷா மாகாணம்பாரசீக மொழிமேற்கு அசர்பைசான் மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அம்லோடிபின்வெற்றிமாறன்மகாபாரதம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பக்கவாதம்மாணிக்கவாசகர்ஊராட்சி ஒன்றியம்பாளையக்காரர்மருந்துப்போலிநெல்லிசனகராஜ்நாலடியார்இயற்கை வளம்ஏ. வி. எம். ராஜன்சாதிவிவேகானந்தர்மாதுளைபச்சைக்கிளி முத்துச்சரம்தற்கொலை முறைகள்கணினிபாரதிதாசன்மார்பகப் புற்றுநோய்விண்ணைத்தாண்டி வருவாயாவிநாயகர் அகவல்ஜிமெயில்இராமலிங்க அடிகள்அதியமான் நெடுமான் அஞ்சிசிலேடைஇந்திய விடுதலை இயக்கம்ஐம்பெருங் காப்பியங்கள்சிவனின் 108 திருநாமங்கள்பத்துப்பாட்டுநாச்சியார் திருமொழிநந்திக் கலம்பகம்தெலுங்கு மொழிபயில்வான் ரங்கநாதன்தமிழர் விளையாட்டுகள்பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்வாரிசுசுந்தர காண்டம்அழகிய தமிழ்மகன்இன்று நேற்று நாளைநிணநீர்க்கணுமுகலாயப் பேரரசுமருத்துவம்விபுலாநந்தர்தமிழ் இலக்கியம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பதினெண் கீழ்க்கணக்குதொகைச்சொல்தேவநேயப் பாவாணர்இந்திய தேசிய சின்னங்கள்மழைநீர் சேகரிப்புமக்களவை (இந்தியா)கல்லீரல்வேதம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்நான்மணிக்கடிகைசுந்தரமூர்த்தி நாயனார்புஷ்பலதாபறையர்நற்றிணைபராக் ஒபாமாவில்லுப்பாட்டுஇனியவை நாற்பதுபாண்டவர்மூலிகைகள் பட்டியல்கற்றது தமிழ்செம்மொழிஇளங்கோ கிருஷ்ணன்ஹூதுகாலிஸ்தான் இயக்கம்முருகன்தமிழ்நாடு சட்டப் பேரவைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஹாட் ஸ்டார்தனுஷ் (நடிகர்)விருத்தாச்சலம்🡆 More