இறுக்கி

இறுக்கி அல்லது சுருக்கி (sphincter) என்பது உடலில் காணப்படும் குழலியை அல்லது உடற்பாதையை அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றி அமைந்துள்ள வட்டத் தசைகளிலான ஒரு அமைப்பாகும், இயல்பான உடற்செயற்பாட்டு நிலையின் போது இவை உடற்பாதையைச் சுருங்கி விரியச் செய்கின்றன.

மாந்த உடலில் 50க்கும் மேற்பட்ட இறுக்கிகள் உள்ளன; இவற்றில் சில நுண்ணோக்கி மூலமே நோக்கலாம், குறிப்பாக மயிர்த்துளைக்குழாய்முன் இறுக்கிகள்.

தொழில்

இறுக்கிகள் உடற்பாதையில் ஒருபகுதியில் இருந்து மற்றைய பகுதிக்கு நீர்மங்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன; உதாரணமாக, கீழ் உணவுக்குழாய் இறுக்கி உணவையும் நீரையும் இரைப்பைக்குள் செல்லவிடுகின்றது, இது உணவு உட்கொள்ளும் நேரத்திலேயே விரிவடைகின்றது. உணவு உட்கொள்ளலிலும் பார்வையிலும் அன்றாடம் இறுக்கிகள் செயற்படுகின்றன. உணவு விழுங்கப்படும் சமயத்தில் மூச்சுக்குழல்வாய்மூடி வாதனாளியை மூடுவதனால் உணவானது மூச்சுக்குழாயை அடைவதில்லை, இது நுரையீரலுக்குள் நீர்மங்களோ பிறபொருட்களோ நுழைவதைத் தடுக்கின்றது.

வகைப்பாடு

இறுக்கிகள் உடற்கூற்றியல் இறுக்கி, செயற்பாட்டு இறுக்கி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • உடற்கூற்றியல் இறுக்கியில் சிறப்பாக அதனைச்சுற்றி வட்டமாக தசைப்படலம் காணப்படும், இறுக்கத்தில் இதுவே உதவுகின்றது.
  • செயற்பாட்டு இறுக்கிக்கு அதனைச் சுற்றவர தசைப்படலம் இருப்பதில்லை, இயல்பாக உள்ள தசையைப் பயன்படுத்தி அவை சுருங்குகின்றன.

இறுக்கிகள் இச்சையுடன் அல்லது இச்சையின்றி (தன்னிச்சையாக) இயங்கக்கூடியவை.

  • இச்சை இறுக்கிகள் மெய்யிய நரம்பு மண்டலம் மூலம் இயங்குகின்றன.
  • தன்னிச்சை இறுக்கிகள் தன்னாட்சி நரம்பு மண்டலம் மூலம் தூண்டப்படுகின்றன.

உடலில் காணப்படும் சில இறுக்கிகள்

இறுக்கி 
கடைச்சிறுகுடல்-குருட்டுக்குடல் தடுப்பிதழும் இறுக்கியும்
  • விழிப்பாவை இறுக்கி, அல்லது விழிப்பாவை சுருக்குத்தசை கண்ணில் கதிராளியில் காணப்படுகின்றது.
  • கட்குழி சுற்றுத்தசை கண்ணைச் சுற்றிக் காணப்படும்; கண் இமைகளை மூடுகின்றது.
  • வாய்க்குழி சுற்றுத்தசை, வாயைச் சுற்றி அமைந்துள்ளது.
  • மேல் உணவுக்குழாய் இறுக்கி (மேற்கள இறுக்கி)
  • கீழ் உணவுக்குழாய் இறுக்கி (கீழ்க்கள இறுக்கி)
  • புறவாயில் இறுக்கி இரைப்பையின் முடிவிடத்தில் அமைந்துள்ளது.
  • ஓடியின் இறுக்கி முன்சிறுகுடலில் அமைந்துள்ளது; கல்லீரல், கணையத்தில் இருந்து சுரக்கப்படும் நீர்மங்களைக் கட்டுப்படுத்துகின்றது.
  • சிறுநீர் இறக்குக் குழாய் இறுக்கி, சிறுநீர் வெளியேறுதலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.
  • குதத்தில் உட்குத இறுக்கி, வெளிக்குத இறுக்கி என இரண்டு இறுக்கிகள் உள்ளன, இவை மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவற்றுள் உட்குத இறுக்கி ஒரு தன்னிச்சை இறுக்கியாகும், ஆனால் வெளிக்குத இறுக்கி இச்சையானது.

உசாத்துணைகள்

Tags:

இறுக்கி தொழில்இறுக்கி வகைப்பாடுஇறுக்கி உடலில் காணப்படும் சில கள்இறுக்கி உசாத்துணைகள்இறுக்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔரங்கசீப்சுந்தரமூர்த்தி நாயனார்பரணி (இலக்கியம்)மனோன்மணீயம்ஐந்திணை எழுபதுஅங்குலம்நன்னன்நவக்கிரகம்பூலித்தேவன்சிவம் துபேபட்டினப்பாலைதளபதி (திரைப்படம்)மத கஜ ராஜாபனிக்குட நீர்இந்திய அரசியல் கட்சிகள்பக்தி இலக்கியம்தூது (பாட்டியல்)சுந்தர் பிச்சைஇந்திய தேசியக் கொடிஅகத்திணைதாவரம்கள்ளுகளவழி நாற்பதுஉணவுஉதகமண்டலம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்காடுவெட்டி குருபாவலரேறு பெருஞ்சித்திரனார்கிராம சபைக் கூட்டம்திருமங்கையாழ்வார்அக்கினி நட்சத்திரம்வே. செந்தில்பாலாஜிகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கூத்தாண்டவர் திருவிழாஇந்திய அரசுரோசுமேரிபழமொழிஇலங்கையின் வரலாறுபெட்டிகடல்கங்கைகொண்ட சோழபுரம்மு. மேத்தாமுடியரசன்வராகிதிருமலை (திரைப்படம்)கம்பர்வேற்றுமைத்தொகைஇந்திய நாடாளுமன்றம்நம்ம வீட்டு பிள்ளைஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்உமறுப் புலவர்கா. ந. அண்ணாதுரைபுங்கைருதுராஜ் கெயிக்வாட்சிலம்பரசன்கம்பராமாயணம்கொங்கு வேளாளர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுசாதிபுதுமைப்பித்தன்ஐஞ்சிறு காப்பியங்கள்அட்சய திருதியைஇலக்கியம்யாவரும் நலம்தமிழ் படம் 2 (திரைப்படம்)மரபுச்சொற்கள்கண்டி மணிக்கூட்டுக் கோபுரம்நாயன்மார் பட்டியல்சின்னத்தாயிதமிழ்க் கல்வெட்டுகள்காடுதமிழ் மாதங்கள்அத்தி (தாவரம்)ஆசிரியர்அன்னம்சாகிரா கல்லூரி, கொழும்புஔவையார்தமிழ் இலக்கண நூல்கள்🡆 More