இங்கிலாந்தின் ஆறாம் எட்வேர்டு

எட்வேர்டு VI (12 அக்டோபர் 1537 - 6 சூலை 1553) இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளின் ஆறாவது மன்னர்.

இவர் 28 சனவரி 1547 ஆம் ஆண்டு முதல் தனது இறப்பு வரையிலும் மன்னராக இருந்தார். இவரின் 9 வது அகவையில் 20 பிப்ரவரி அன்று மன்னராக மகுடம் சூட்டப்பட்டது. இவரது தந்தை ஹென்றி VIII மற்றும் தாய் ஜானி செமோர். இவர் சீர்திருத்தச் திருச்சபை மரபுகளைப் பின்பற்றும் இங்கிலாந்தின் முதல் மன்னராக வளர்க்கப்பட்டார். இவரது ஆட்சிக் காலத்தில், அரசாங்கப் பணிகளை மன்னர் எட்வேர்டு உரிய வயதுக்கு வரும் வரையில் அரசப் பிரதிநிதிகள் கவனித்து வந்தனர். பிரதிநிதிகளின் சபையை முதலில் அவரது மாமா எட்வேர்டு செமோர், சோமர்செட்டின் முதலாவது டியுக் (1547-1549) கவனித்துக் கொண்டார். அடுத்தபடியாக ஜான் டுடிலி, வார்விக்கின் முதல் ஏர்ல் (1550-1553) (1551 ஆண்டின் நார்தம்பர்லேண்டின் டியுக்) பார்த்துக் கொண்டார்.

எட்வேர்டு VI
Formal portrait in the Elizabethan style of Edward in his early teens. He has a long pointed face with fine features, dark eyes and a small full mouth.
Portrait by circle of William Scrots, c. 1550
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து மன்னர்
(more ...)
ஆட்சிக்காலம்28 சனவரி 1547 – 6 சூலை 1553
முடிசூட்டுதல்20 பிப்ரவரி 1547
முன்னையவர்ஹென்றி VIII
பின்னையவர்Jane (disputed) or Mary I
அரசாட்சிப் பொறுப்பாளர்
See
  • The Duke of Somerset
    (1547–1549)
    The Duke of Northumberland
    (1549–1553)
பிறப்பு12 அக்டோபர் 1537
ஹம்டன் அரன்மனை, மிடில்செக்சு, இங்கிலாந்து
இறப்பு6 சூலை 1553 (வயது 15)
கீரின்விச் அரன்மனை, இங்கிலாந்து
புதைத்த இடம்8 ஆகத்து 1553
வெஸ்ட்மினிஸ்டர் அபே
மரபுதுடார்
தந்தைஹென்றி VIII
தாய்ஜானி செமோர்
மதம்சீர்திருத்தத் திருச்சபை
கையொப்பம்எட்வேர்டு VI's signature

எட்வேர்டு ஆட்சியில் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் சமூக அமைதியின்மை நீடித்திருந்தது. அதனால் கலவரங்கள் மற்றும் கலகங்கள் அதிகரித்திருந்தது. அதிக பொருட்சேதத்தை ஏற்படுத்திய ஸ்காட்லாந்துடனான போரில் முதலில் வெற்றி பெற்றாலும். ஸ்காட்லாந்திலிருந்து வீரர்களை போர் நிலைகளில் இருந்து திரும்பப் பெற்றதுடன் அமைதிக்காக வடக்கு பிரான்ஸில் உள்ள போலோன் சுர் மெர் நகரைப் பரிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. எட்வேர்டு மத விசயங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். இவரது ஆட்சியில், இங்கிலாந்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் அங்கீகாரம் பெற்ற சீர்திருத்தச் திருச்சபை சமுதாயமாக மாறியது. இவரது தந்தை, ஹென்றி VIII, தேவாலயத்திற்கும் ரோம் நகருக்கும் இடையே உள்ள தொடர்பை துண்டித்துவிட்டிருந்தாலும், கத்தோலிக்க கோட்பாட்டின் படி துறவு ஏற்பது அல்லது சடங்குகளை மறுதலிப்பதை ஹென்றி VIII அனுமதிக்கவில்லை. எட்வேர்டு ஆட்சியின் போது இங்கிலாந்தில் முதல் தடவையாக சீர்திருத்தச் திருச்சபை நிறுவப்பட்டது. மேலும் பல மதச் சீர்திருத்தங்கள் செய்தார். மதகுருக்கள் மற்றும் மதக்கூட்டங்கள் ஆகியவற்றை ஒழித்தார். மற்றும் ஆங்கிலத்தில் கட்டாய சேவை சுமத்தியது போன்றவகைகளையும் ஒழித்தார். இப்படி பல நடைமுறைகள் ஒழிக்கப்பட்டது.

பிப்ரவரி 1553 வது ஆண்டில், 15 வயதில் எட்வேர்டு நோயுற்றிருந்தார். அவரது நோய் முற்றியதையும் அதனால் தனது இறுதி நாட்கள் நெருங்கியதையும் கண்டறிந்த போது, தனது மறைவுக்குப் பிறகு, கத்தோலிக்க மதத்திற்கு நாடு திரும்புவதைத் தடுக்க அவர் மற்றும் அவரது அரசப் பிரதிநிதிகளின் சபை அடுத்த வாரிசுக்கானத் திட்டத்தை வரைந்தனர். அதன்படி எட்வேர்டு, தனது அடுத்த வாரிசாக மாமா மகளான சீமாட்டி ஜானி கிரேவை நியமித்தார். மேலும் தனது ஒருவழிச்சகோதரிகளான மேரி மற்றும் எலிசபத் ஆகியோரைத் தவிர்த்து விட்டார். ஆனால் எட்வேர்டின் இந்த முடிவு, அவர் இறந்த பின்னர் பெரும் விவாதத்திற்குள்ளானது. ஜானி ராணியாக வெறும் ஒன்பது நாட்களே இருந்தார். பின்னர் நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, மேரி பட்டத்து ராணியானார். இவரது ஆட்சியில், எட்வேர்டின் சீர்திருத்தச் திருச்சபை சம்பந்தமான அனைத்து சீர்திருத்தங்களையும் தலைகீழாக மாற்றினார். இது எவ்வாறாயினும், 1559 ஆம் ஆண்டில் எலிசபத்தின் மதத் தீர்மானத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

மேற்கோள்கள்

Tags:

அரசப் பிரதிநிதிசீர்திருத்தத் திருச்சபை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல்காப்பியம்கண்டம்தரணிபத்து தலதமிழர் பருவ காலங்கள்செயற்கை நுண்ணறிவுசிறுநீரகம்விஷால்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கருச்சிதைவுகர்மாஇந்தியாநீரிழிவு நோய்ஆசிரியர்பழனி முருகன் கோவில்இந்திய உச்ச நீதிமன்றம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்ஹரி (இயக்குநர்)திருமால்முதல் மரியாதைபிரேமம் (திரைப்படம்)மகேந்திரசிங் தோனிகருத்தடை உறைபித்தப்பைதிராவிட மொழிக் குடும்பம்திரிகடுகம்அறிவுசார் சொத்துரிமை நாள்சிங்கம் (திரைப்படம்)தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்மாத்திரை (தமிழ் இலக்கணம்)பெரியாழ்வார்ரோசுமேரிவிண்டோசு எக்சு. பி.இந்திய அரசியலமைப்புசைவத் திருமுறைகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)வைகைபாடாண் திணைஇசுலாமிய வரலாறுஜி. யு. போப்தமிழ்விடு தூதுஇரண்டாம் உலகப் போர்தனுசு (சோதிடம்)நிதிச் சேவைகள்தேசிக விநாயகம் பிள்ளைவட்டாட்சியர்கபிலர்ஆதிமந்திவெந்தயம்நரேந்திர மோதிதொல்லியல்திராவிடர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சீமான் (அரசியல்வாதி)நந்திக் கலம்பகம்சேரன் (திரைப்பட இயக்குநர்)திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஐங்குறுநூறுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ஜெயம் ரவிசுரதாதமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ் இலக்கணம்சுற்றுச்சூழல் பாதுகாப்புபரதநாட்டியம்நயன்தாராமுல்லைக்கலிமாசிபத்திரிஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் தலைவர்தாயுமானவர்இராமலிங்க அடிகள்பஞ்சாயத்து ராஜ் சட்டம்ஐம்பெருங் காப்பியங்கள்தங்க மகன் (1983 திரைப்படம்)மியா காலிஃபாஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)🡆 More