ஆபிரிக்க மெய்யியல்

ஆபிரிக்கச் சூழலில் உருவாகிய, ஆபிரிக்கர்களால் உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெய்யியல் ஆபிரிக்க மெய்யியல் ஆகும்.

மிக விரிந்த ஆப்பிரிக்க நிலப்பரப்பில் வசிக்கும் பல்வேறு இன, மொழி, சமய மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லது எடுத்தாளும் மெய்யியல் என்ற ஒன்று இல்லை. பல வகைப்பட்ட சிந்தனைகளை ஆபிரிக்க மெய்யியலில் உள்ளடக்குகின்றது.

ஆபிரிக்க மெய்யியல்
ஆப்பிரிக்கர்களின் இயல்பான இலக்கியத்தை, மெய்யியலை நோக்கிய சிந்தனையாளர்: நுகுகி வா தியங்கோ
ஆபிரிக்க மெய்யியல்
மார்ட்டின் லூதர் கிங்கின் 1963 "எனக்கு ஒரு கனவு இருக்கிறது" பேச்சு
ஆபிரிக்க மெய்யியல்
Desmond Tutu

வரலாறு

இன்று ஆப்பிரிக்கா என அறியப்படும் கண்டத்திலேயே பண்டைய எகிப்திய நாகரிகம் சிறப்புற்று இருந்தது. வட ஆபிரிக்காவில் இசுலாம் மிக விரைவாக பரவியது. எனினும் பெரும்பான்மை ஆபிரிக்கா இந்த நாகரிங்களிற்கு அப்பாலேயே வரலாற்றின் நீண்ட காலத்துக்கு இயங்கியது. பெரும்பான்மை ஆபிரிக்கா எழுத்து நுட்பத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், நுட்பங்கள் வாய்மொழி வழியாக, வழக்கங்கள் நடத்தைகள் வழியாக கற்கப்பட்டு வந்தன.

இன்று ஆப்பிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி இவ்வாறு வாய்மொழியாக வழங்கிவந்த சிந்தனைகள் ஆகும். இவை முதலில் ஐரோப்பியர்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டன. ஐரோப்பியர்கள் தமது மெய்யியல் முறையை வைத்து ஆபிரிக்க சிந்தனையைப் புரிந்து கொள்ள முற்பட்டார்கள். இதனால் இன்று ஆபிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் பெரும் பகுதி ஐரோப்பிய சிந்தனை சட்டத்தின் ஊடாக, ஐரோப்பிய மொழிகளின் ஊடாக எமக்கு கிடைக்கின்ற ஆக்கங்கள் ஆகும். எ.கா Placide Tempels, Lucien Lévy-Bruhl, Marcel Griaule ஆகியோருடைய ஆக்கங்கள்.

ஆபிரிக்க மெய்யியல் பற்றிய ஆபிரிக்கர்களின் ஆக்கங்கள் முதலில் ஐரோப்பிய கல்வி பெற்ற ஆபிரிக்கர்களாலேயே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் ஆக்கங்கள் ஐரோப்பியர்களுடன் கருத்து மோதலிலும், சமரசத்திலும் ஈடுபடுகின்றன. Kwasi Wiredu, Paulin J. Hountondji, Segun Gbadegesin, D. A. Masolo, Kwame Gyekye ஆகியோருடைய ஆக்கங்கள் இந்த நிலையைச் சார்ந்தவை.

1950 களில் 1960 களில் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. எனினும் இந்த நாட்டு பலகலைக்கழகங்களில் ஆபிரிக்க மெய்யியல் துறை அக்காலத்தில் தொடங்கப்படவில்லை.

மூலங்கள்

  • மூத்தோர், கதைசொல்லிகள், சமய குருமார்கள்
  • பழ மொழிகள்
  • நாட்டார் கதைகள்
  • அற வழக்குகள்
  • சடங்குகள்
  • வரலாற்று ஆவணங்கள்
  • நூல்கள்
  • தொல்பொருட்கள்

சிந்தனைப் பிரிவுகள்

ஆபிரிக்க மெய்யியல் என்ற ஒன்று உண்டா என்பதே ஆபிரிக்க மெய்யியலில் ஒரு முக்கிய கேள்வியாக இருக்கிறது. எழுதப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், மேற்கத்தைய மெய்யியலுக்கு ஒத்த முறையியல் இல்லாத நிலையில் இக் கேள்வி எழுகின்றது. வாய்மொழி ஆதாரங்கள், ஆபிரிக்கர்களின் சிந்தனைக் களங்களும் முறைகளும், தற்கால வளர்ச்சிகள் ஆகியவை ஆபிரிக்க மெய்யியல் ஒன்று உண்டு என்று சுட்டி நிற்கின்றன.

சிந்தனையாளர்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

  • Return to My Native Land By Aimé Césaire
  • An introduction to African philosophy By Samuel Oluoch Imbo
  • Tsenay Serequeberhan ed. 1991. African Philosophy: The Essential Readings. Paragon House.

வெளி இணைப்புகள்

Tags:

ஆபிரிக்க மெய்யியல் வரலாறுஆபிரிக்க மெய்யியல் மூலங்கள்ஆபிரிக்க மெய்யியல் சிந்தனைப் பிரிவுகள்ஆபிரிக்க மெய்யியல் சிந்தனையாளர்கள்ஆபிரிக்க மெய்யியல் இவற்றையும் பார்க்கஆபிரிக்க மெய்யியல் மேற்கோள்கள்ஆபிரிக்க மெய்யியல் உசாத்துணைகள்ஆபிரிக்க மெய்யியல் வெளி இணைப்புகள்ஆபிரிக்க மெய்யியல்ஆப்பிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறுசுவைசுற்றுச்சூழல்இரண்டாம் உலகப் போர்ரா. பி. சேதுப்பிள்ளைதாராபாரதிஅகநானூறுஇராவணன்கொங்கு வேளாளர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சித்திரைசிட்டுக்குருவிபரணி (இலக்கியம்)தமிழ்ப் புத்தாண்டுகம்பராமாயணத்தின் அமைப்புசங்ககாலத் தமிழக நாணயவியல்சீவக சிந்தாமணிமருதமலைகொல்லி மலையூடியூப்கன்னி (சோதிடம்)தமிழக மக்களவைத் தொகுதிகள்கடையெழு வள்ளல்கள்வாட்சப்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்குடலிறக்கம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்முதலாம் இராஜராஜ சோழன்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நரேந்திர மோதிசீமான் (அரசியல்வாதி)பொன்னுக்கு வீங்கிகணையம்சேக்கிழார்அருந்ததியர்ரெட் (2002 திரைப்படம்)கணியன் பூங்குன்றனார்நிலக்கடலைமுக்குலத்தோர்தங்கராசு நடராசன்காதல் கொண்டேன்திருமூலர்குண்டூர் காரம்எல் நீனோ-தெற்கத்திய அலைவுவிபுலாநந்தர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கார்த்திக் (தமிழ் நடிகர்)சிவன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்திரிகடுகம்சீரகம்கருக்காலம்மயங்கொலிச் சொற்கள்எலுமிச்சைதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழர் பண்பாடுபால கங்காதர திலகர்தமிழிசை சௌந்தரராஜன்தேசிய அடையாள அட்டை (இலங்கை)பைரவர்திருமால்சித்த மருத்துவம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சைவத் திருமுறைகள்கூகுள்சேரர்ஐயப்பன்சீறாப் புராணம்ஆண்டாள்விஜய் (நடிகர்)மயக்கம் என்னதிருக்குறள்கண்ணதாசன்ஏற்காடு🡆 More