அல் சபாப்

அல் சபாப் (Al-Shabaab, அரபு மொழி: حركة الشباب المجاهدين‎, எனும் குழு சோமாலியா நாட்டில் செயல்படும் ஜிகாத் இயக்கம் ஆகும்.

அல் சபாப் எனும் அரேபிய மொழிச் சொல்லுக்கு நல் இளைஞன் என்று பொருள். 2012 ஆம் ஆண்டில் இது அல் காயிதா என்ற தீவிரவாத அமைப்பில் இணைந்தது. இக்குழுவில் பல்வேறு நாட்டு இசுலாமிய இளைஞர்களும் சேர்ந்து ஜிகாத் எனும் புனிதப்போரில் ஈடுபட்டுள்ளனர். 2013 நிலவரப்படி, இக்குழுவினர் சோமாலியாவில் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறி விட்டாலும், நாட்டில் பல கிராமப் பகுதிகளில் கடுமையான இசுலாமியச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். அல் சபாப் இயக்கத்தில் 4,000 முதல் 9,000 போராளிகள் வரை உறுப்பினர்களாக உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அல்-சபாப் இயக்கத்தை, ஐக்கியஅமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் தடை செய்துள்ளது.

அல்-சபாப்
Al-Shabaab
الشباب
சோமாலிய உள்நாட்டுப் போர்
அல் சபாப்
போர்க்கொடி

அல் சபாப்
இயக்கக் கொடி
இயங்கிய காலம் 2006 முதல் இதுநாள் வரை
கொள்கை சுன்னி இசுலாம், இசுலாமியம்
ஜிகாதியம்
சூபிசத்தை எதிர்த்தல்
கடுமையான இசுலாமியச் சட்டம்
Takfir
தலைவர்கள்
செயற்பாட்டுப்
பகுதி
தெற்கு சோமாலியா
உகாண்டா
கென்யா
Strength 4,000–9,000 போராளிகள்
Part of அல் காயிதா
கூட்டு அல் சபாப் al-Qaeda
அல் சபாப் வெளிநாட்டு முஜாகிதீன்
எதிராளிகள் சோமாலியா சோமாலியா

ஆப்பிரிக்க ஒன்றியம்

அல் சபாப் Australia அல் சபாப் United States

தாக்குதல்கள்

கென்யா மீதான தாக்குதல்

23-09-2013 அன்று கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் எனப்படும் 4 மாடிக்கட்டிட வணிகவளாகத்திற்குள் புகுந்த சோமாலிய அல்-சபாப் தீவிரவாதிகள் கையெறிக்குண்டுகளை வீசி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பொதுமக்கள் 61 பேர், 5 தீவிரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் என மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இக்கட்டிடத்தில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 137 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.. ஏப்பிரல் 2, 2015 அன்று காரிசா பல்கலைக்கழகத்தில் நடத்திய தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் விக்கிச்செய்தி

சோமாலிய நாடாளுமன்றம் மீதான தாக்குதல்

23-05-2014 அன்று அல் ஷபாப் இயக்கத்தினர் சோமாலிய நாடாளுமன்றத்தினுள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சோமாலியாவில் நடவடிக்கைகள்

சோமாலியாவில் உள்ள கிஷ்மாயூ என்ற துறைமுகப் பகுதியையும் தெற்குப் பகுதியையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து அப்பகுதியில் தங்கள் அதிகாரத்தைச் செலுத்த தொடங்கி விட்டனர். அல்-ஷபாப் இயக்கத்திற்குகென்று தனி சட்டதிட்டங்கள் அடங்கிய தனியரசு, நீதிமன்றங்கள், தனிக்கொடி என்று அமைத்துள்ளனர்.

தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் திரைப்படம், நடன நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுகளைத் தடை செய்துள்ளனர். இந்த நிலையில் அலைபேசிகளில் பயன்படுத்தி வந்த ரிங் டோன்களுக்கு தடை விதித்துள்ளனர்.

தீவிரவாதிகளின் தடையை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. இசுலாமிய மதத்திற்கு எதிரான கொள்கைகளைக் குறிப்பாக இசை மற்றும் பாலியல் காணொளி காட்சிகளைக் காணத் தடை செய்துள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அல் சபாப் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அல் சபாப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அல் சபாப் தாக்குதல்கள்அல் சபாப் மேற்கோள்கள்அல் சபாப் வெளி இணைப்புகள்அல் சபாப்அரபு மொழிஅல் காயிதாஇசுலாம்இஸ்லாமியச் சட்ட முறைமைஐக்கிய அமெரிக்காஐக்கிய இராச்சியம்சோமாலியாஜிகாத்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆதி திராவிடர்வராகிபெரியாழ்வார்இடலை எண்ணெய்பாரிசேரர்மூதுரைசிங்கம்தனுஷ்கோடிதமிழ் நாடக வரலாறுவடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுவேளாளர்ஆகு பெயர்முதல் மரியாதைமாத்திரை (தமிழ் இலக்கணம்)ஐங்குறுநூறுவே. செந்தில்பாலாஜிஅன்புதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்பதுருப் போர்இடமகல் கருப்பை அகப்படலம்இளங்கோ கிருஷ்ணன்கருப்பசாமிபொன்னியின் செல்வன் 1சேவல் சண்டைமேகாலயாவிண்ணைத்தாண்டி வருவாயாபேரிடர் மேலாண்மைஈரோடு மாவட்டம்ஆப்பிள்வேதநாயகம் பிள்ளைவிருந்தோம்பல்தற்கொலை முறைகள்சிந்துவெளி நாகரிகம்இந்திய அரசியலமைப்புபஞ்சாங்கம்கர்மாஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்சிவகார்த்திகேயன்வேலு நாச்சியார்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுபஞ்சாயத்து ராஜ் சட்டம்இந்திய அரசியல் கட்சிகள்அன்றில்கருப்பைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கணையம்மதுரைக் காஞ்சிவிநாயக் தாமோதர் சாவர்க்கர்நிணநீர்க் குழியம்முருகன்எடுத்துக்காட்டு உவமையணியாதவர்கு. ப. ராஜகோபாலன்இளங்கோவடிகள்மரபுச்சொற்கள்திருப்பதிஇஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்அம்பேத்கர்விஸ்வகர்மா (சாதி)திருக்குறள்கருட புராணம்சுரதாசித்தர்கள் பட்டியல்இரட்டைக்கிளவிகொன்றைமாடுநாலாயிர திவ்வியப் பிரபந்தம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்அயோத்தி தாசர்தைப்பொங்கல்நாடார்தமிழர் பருவ காலங்கள்மாதவிடாய்பதினெண்மேற்கணக்குஇந்திய தேசியக் கொடிகடல்🡆 More