அனைத்துலக சதுரங்க நாள்

அனைத்துலக சதுரங்க நாள் (International chess day) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.

அனைத்துலக சதுரங்க நாள்
International Chess Day
அனைத்துலக சதுரங்க நாள்
சதுரங்கம்
கடைபிடிப்போர்பல்வேறு நாடுகள்
நாள்20 சூலை
நிகழ்வுஆண்டு
முதல் முறை1966
தொடர்புடையனபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு, சதுரங்கம்

1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.

இந்நாளில் பல்வேறு சதுரங்கப் போட்டிகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டு 173 நாடுகளில் இந்நாளில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றதாக பிடே தலைவர் ஒரு நேர்காணலின் போது தெரிவித்தார்.

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் சூலை 20, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 181 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.

சதுரங்கம்

புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.

மூளைக்கு வேலைத்தரும் விளையாட்டு

சதுரங்கம் மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விளையாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுகிறது. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.

ஆட்டத்தின் எதிர்பார்க்கை

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார்.

சதுரங்கக் காய்கள்

சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

புகழ் பெற்ற சில வீரர்கள்

உலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

அனைத்துலக சதுரங்க நாள் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்புஅனைத்துலக சதுரங்க நாள் சதுரங்கம்அனைத்துலக சதுரங்க நாள் மூளைக்கு வேலைத்தரும் விளையாட்டுஅனைத்துலக சதுரங்க நாள் ஆட்டத்தின் எதிர்பார்க்கைஅனைத்துலக சதுரங்க நாள் சதுரங்கக் காய்கள்அனைத்துலக சதுரங்க நாள் புகழ் பெற்ற சில வீரர்கள்அனைத்துலக சதுரங்க நாள் மேற்கோள்கள்அனைத்துலக சதுரங்க நாள் புற இணைப்புகள்அனைத்துலக சதுரங்க நாள்சூலை 20பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்நரேந்திர மோதிகிரிமியா தன்னாட்சிக் குடியரசுநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகள்ளுஓம்வைரமுத்துகௌதம புத்தர்விந்துதங்கம் (திரைப்படம்)டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்குலுக்கல் பரிசுச் சீட்டுசிவன்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சடுகுடுமதுரைக் காஞ்சிசிதம்பரம் நடராசர் கோயில்யுகம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)உயிர்ப்பு ஞாயிறுஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்மாமல்லபுரம்நன்னீர்ஆனந்தம் விளையாடும் வீடுஅண்ணாமலையார் கோயில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்நெல்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்ஹதீஸ்தைப்பொங்கல்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஉவமையணிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியூதர்களின் வரலாறுசீவக சிந்தாமணிபெரிய வியாழன்வெந்தயம்அகத்தியமலைஇசுலாமிய வரலாறுஇராமலிங்க அடிகள்கருப்பை நார்த்திசுக் கட்டிபூக்கள் பட்டியல்டார்வினியவாதம்மட்பாண்டம்ஏலாதிகலாநிதி வீராசாமிகுடும்பம்சரத்குமார்பெரியபுராணம்எட்டுத்தொகைதமிழ் தேசம் (திரைப்படம்)இயேசுநீலகிரி மாவட்டம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)முடியரசன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)திண்டுக்கல் மக்களவைத் தொகுதிபிரெஞ்சுப் புரட்சிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019பூப்புனித நீராட்டு விழாஇந்திய தேசிய சின்னங்கள்மொரோக்கோகாயத்ரி மந்திரம்மாணிக்கவாசகர்புற்றுநோய்குறுந்தொகைஓ. பன்னீர்செல்வம்தமிழர் கலைகள்ரஜினி முருகன்திருவாரூர் தியாகராஜர் கோயில்தஞ்சாவூர்ஆடு ஜீவிதம்இராவண காவியம்108 வைணவத் திருத்தலங்கள்கட்டுவிரியன்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்தேவேந்திரகுல வேளாளர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்🡆 More