அசாசின்களின் வரிசை

அசாசின்கள் என்பவர்கள் சியா இஸ்லாமைச் சேர்ந்த நிசாரி இசுமாயிலி பிரிவினர் ஆவர்.

இவர்கள் 1090 மற்றும் 1275 ஆண்டுகளுக்கு இடையில் பாரசீகம் மற்றும் சிரியாவின் மலைகளில் வாழ்ந்தனர். அந்த நேரத்தில் இவர்கள் கட்டுக்கோப்பான சூழ்ச்சி கொள்கையை தங்களது அரசுக்கு எதிரிகள் என்று கருதப்பட்ட, ஆரம்பத்தில் முசுலிம் மற்றும் பிறகு கிறித்தவ தலைவர்களை ரகசியமாக கொன்றதன் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் பின்பற்றினர்.

அசாசின்களின் வரிசை
ருத்கான் கோட்டை, அல்போர்சு மலைத்தொடர், ஈரான்

நவீன ஆங்கில வார்த்தையான அசாசினேசன் இந்த அசாசின்கள் பயன்படுத்திய தந்திரோபாயங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகும். நிசாரி இசுமாயிலி மதம் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. பாத்திமிட் கலீபகத்தின் அடுத்த ஆட்சியாளர் யார் என்ற குழப்பம் நிசாரி இபின் அல்-முசுதன்சிர் மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அல்-முசுதாலி ஆகியோர் இடையே ஏற்பட்ட நேரத்தில் இது உருவானது. இவர்களது காலத்தில் அரேபியர்களான இபின் அல்-கலனிசி மற்றும் அலி இபின் அல்-ஆதிர் மற்றும் பாரசீகரான அடா மாலிக்-சுவய்னி ஆகிய வரலாற்றாளர்கள் வாழ்ந்தனர். முதலிரண்டு வரலாற்றாளர்கள் அசாசின்களை படினியா என்று அழைத்தனர். இப்பெயரை இசுமாயிலிகள் கூட பரவலாக ஏற்றுக் கொண்டனர்.

வீழ்ச்சி மற்றும் அதற்குப் பிறகு

அசாசின்களின் வரிசை 
அலமுத் முற்றுகையிடப்படுவதன் ஒரு தோற்றம். அலமுத்தில் இருந்த அசாசின்களின் கடைசி பெரிய தலைவரான இமாம் ருக்ன் அல்-தின் குர்ஷா (1255–1256) ஒரு அழிவுகரமான முற்றுகைக்குப் பிறகு ஹுலாகு கானால் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அசாசின்கள் நன்றாகப் பதிவு செய்யப்பட்ட, மங்கோலியப் பேரரசின் குவாரசமியப் படையெடுப்பின்போது முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். மங்கோலிய தளபதி கித்புகாவிடம் ஒரு ஆணையானது கையில் வழங்கப்பட்டது. 1253 ஆம் ஆண்டு கித்புகா பல அசாசின் கோட்டைகளை தாக்க ஆரம்பித்தார். 1256 ஆம் ஆண்டு ஹுலாகு கான் அப்பகுதிக்கு முன்னேறினார். அவ்வருடத்தின் பிற்பகுதியில் அலமுத் கைப்பற்றப்பட்டது. லம்ப்சர் 1257 ஆம் ஆண்டு வீழ்ந்தது. 1260 ஆம் ஆண்டு மசையப் வீழ்ந்தது. அசாசின்கள் அலமுத்தை மீண்டும் கைப்பற்றி சில மாதங்களுக்கு தங்களது கட்டுப்பாட்டில் 1275 ஆம் ஆண்டு வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்டு அவர்களது அரசியல் சக்தியானது மீண்டும் எழாத வண்ணம் அழிந்துபோனது. இந்த நிகழ்வுகளுக்கு சிறிது காலத்திற்குப் பின்னர் ருக்ன் அல்-தின் குர்ஷா மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

சிரியாவில் அசாசின்கள் மற்ற முஸ்லிம் குழுக்களுடன் மங்கோலியர்களை எதிர்ப்பதற்காக இணைந்தனர். மம்லுக்குகள் மற்றும் பைபர்சுடன் இணைய முயற்சித்தனர். பைபர்ஸ் ஹாஸ்பிடலர்களுடன் 1266 ஆம் ஆண்டு இணைந்தார். அசாசின்களால் கொடுக்கப்பட்ட கப்பமானது நிறுத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதித்தார். ஒரு கட்டத்தில் பிராங்குகளுக்கு செலுத்தப்பட்ட கப்பமானது அங்கு செல்வதற்கு பதிலாக கெய்ரோவிற்கு வர ஆரம்பித்தது. பைபர்சின் சுயசரிதையை எழுதிய இபின் அப்த் அல்-ஜாகிர் 1260 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கூட இக்தாவில் இருந்த அசாசின்களின் நிலப்பகுதிகளை தனது தளபதிகளுக்கு பைபர்ஸ் வழங்கியதாக எழுதியுள்ளார். பைபர்ஸ் 1265 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இளவரசர்களிடமிருந்து அசாசின்கள் பெற்ற பரிசுகளுக்கு வரி விதிக்க ஆரம்பித்தார். பொதுவாக தெரிந்தவரை இப்பரிசுகள் பிரான்சின் ஒன்பதாம் லூயி, ஜெர்மனியின் முதலாம் ருடால்ப், காஸ்டிலேவின் பத்தாம் அல்போன்சோ மற்றும் ஏமனின் ரசூலிட் சுல்தான் அல்-முசாபர் யூசுப் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன. தனது சுல்தானகத்திற்கு ஆபத்து வரலாம் என்று அறிந்த பைபர்ஸ் 1270 ஆம் ஆண்டு அசாசின்களின் சிரிய பிரிவை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.

உசாத்துணை

Tags:

சியா இசுலாம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மழைநீர் சேகரிப்புமுதல் மரியாதைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிவீரப்பன்தமிழில் சிற்றிலக்கியங்கள்திருவோணம் (பஞ்சாங்கம்)இந்திய அரசியலமைப்புதொலைபேசிதேவயானி (நடிகை)புனித யோசேப்புஅதிமதுரம்பிள்ளைத்தமிழ்அரவான்ஆண்டுஆறுகஞ்சாபெருஞ்சீரகம்வைரமுத்துதமிழ் மாதங்கள்தண்டியலங்காரம்தொடை (யாப்பிலக்கணம்)மதராசபட்டினம் (திரைப்படம்)தைப்பொங்கல்மயக்கம் என்னமலையாளம்ராஜா ராணி (1956 திரைப்படம்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ரஜினி முருகன்சேக்கிழார்உலா (இலக்கியம்)இணையம்காந்தள்சிறுநீரகம்இரைச்சல்முக்கூடற் பள்ளுகுண்டலகேசிபொருளாதாரம்குடும்ப அட்டைஜெயம் ரவிபட்டினப் பாலைபரதநாட்டியம்முத்தொள்ளாயிரம்கழுகுபழமொழி நானூறுபாரதிய ஜனதா கட்சிநான் அவனில்லை (2007 திரைப்படம்)ஆய்வுஆல்கேள்விகம்பராமாயணத்தின் அமைப்புவேலுப்பிள்ளை பிரபாகரன்ஆசிரியர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)புதன் (கோள்)விபுலாநந்தர்இரண்டாம் உலகப் போர்கர்மாநேர்பாலீர்ப்பு பெண்அழகிய தமிழ்மகன்பரிதிமாற் கலைஞர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)பரிவர்த்தனை (திரைப்படம்)பறவைஅக்கிஇராசாராம் மோகன் ராய்கலாநிதி மாறன்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகேரளம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கன்னி (சோதிடம்)அன்னை தெரேசாகார்த்திக் (தமிழ் நடிகர்)சிறுபஞ்சமூலம்மனித உரிமைமரபுச்சொற்கள்🡆 More