புனித தோமையார் மலை

பரங்கி மலை (St.

Thomas Mount) என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்த தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது சென்னை நகரின் வெளிப்புறத்தில் ஒரு சிறு மலை ஆகும். இம்மலை சென்னை நகரின் கிண்டி பகுதியில், சென்னை விமான நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது. இது புனித தாமஸ் மலை என்னும் பெயராலும் வழங்கப்பட்டு வருகிறது.

பரங்கிமலை
St. Thomas Mount
அருகாமையில் உள்ளது
மலையிலுள்ள புனித தோமையார் ஆலயம்
மலையிலுள்ள புனித தோமையார் ஆலயம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
வட்டம்தாம்பரம்
அரசு
 • நிர்வாகம்செ.பெ.வ.கு.
மொழிகள்
 • ஆட்சிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
திட்ட நிறுவனம்செ.பெ.வ.கு.

கிறித்தவ சமயத்தை முதன்முதல் இந்தியாவுக்குக் கொணர்ந்தவர் இயேசுவின் சீடரான புனித தோமா என்பதும், அவர் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு மறைச்சாட்சியாக இம்மலையில் உயிர்நீத்தார் என்பதும் மரபுவழிச் செய்தி. அதன் அடிப்படையில் இம்மலை புனித தோமையார் மலை என்னும் பெயர் பெற்றது.

போர்த்துகீசியரின் வருகையைத் தொடர்ந்து இம்மலைப் பகுதியில் பல கிறித்தவர்கள் குடியேறினர். 300 அடி உயரத்தில் உள்ள அம்மலைமீது போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் 1523-ஆம் ஆண்டில் அழகியதொரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்.

திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் 1986, பெப்ருவரி 5-ஆம் நாள் இம்மலைக் கோவிலைச் சந்தித்தார்.

புனித தோமையார் மலையின் அடிவாரத்தில் இந்திய இராணுவத்தின் அலுவலர் பயிற்சி அக்காதெமி (Officer Training Academy [OTA]) அமைந்துள்ளது. அங்கே தொடருந்து நிலையமும் இப்பெயருடன் விளங்குகிறது.

புனித தோமையார் மலையில் அமைந்த கோவில்

தோமையார் மலைமீது அமைந்த கோவில் குழந்தைப் பேறு எதிர்பார்க்கும் அன்னை மரியாவுக்கு (Our Lady of Expectation) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. புனித தோமா கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு உயிர்துறந்த இடத்தின்மீது இக்கோவிலைப் போர்த்துகீசியர் கட்டியெழுப்பினர் (ஆண்டு: 1523). கோவிலின் முதன்மைப் பீடத்தின் கீழ் அவ்விடம் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது. 1545 மலையடிவாரத்தின் வடக்குப் பக்கத்தில் உயர்ந்தெழுகின்ற கோபுர வாசல்கள் நான்கு உள்ளன. அவற்றின் அருகே ஒரு பெரிய சிலுவை உள்ளது. அதில் 1547 என்னும் ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சியைச் சென்றடைய 160 படிகள் கொண்ட படிக்கட்டு செதுக்கப்பட்டுள்ளது.

மலையில் ஏறிச் செல்லும்போது படிகளின் அருகே நெடுகிலும் இயேசுவின் துன்பங்களையும் சாவையும் சித்தரிக்கின்ற சிலுவைப் பாதை சுரூபங்கள் வைக்கப்பட்டுள்ளன. திருப்பயணியர் மேலே ஏறிச் செல்லும்போது சிலுவைப் பாதை வேண்டல் நிகழ்த்துவது வழக்கம்.

புனித தோமையார் மலை 
புனித தோமையார் மலையிலிருந்து சென்னை நகரத்தின் ஒட்டுமொத்தப் பார்வை

படத் தொகுப்பு

மலையின் அமைவிடம்

மேற்கோள்கள்

Tags:

புனித தோமையார் மலை யில் அமைந்த கோவில்புனித தோமையார் மலை படத் தொகுப்புபுனித தோமையார் மலை மலையின் அமைவிடம்புனித தோமையார் மலை மேற்கோள்கள்புனித தோமையார் மலைகிண்டிசெங்கல்பட்டு மாவட்டம்சென்னை விமான நிலையம்தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்தாம்பரம் வட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கேரளம்வாட்சப்மலேரியாஇரவுக்கு ஆயிரம் கண்கள்தமிழ் நாடக வரலாறுகருப்பை வாய்ஈழை நோய்காதலர் தினம் (திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைஆனைக்கொய்யாநிதியறிக்கைபாலை (திணை)முன்மார்பு குத்தல்தாயுமானவர்அழகிய தமிழ்மகன்பாண்டியர்பானுப்ரியா (நடிகை)நிணநீர்க்கணுமொழிகழுகுமலை வெட்டுவான் கோயில்திருப்போரூர் கந்தசாமி கோயில்கிருட்டிணன்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)பறவைமலேசியாபுவிதேவநேயப் பாவாணர்இந்திய குடியரசு தலைவரின் அதிகாரங்கள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பொன்னியின் செல்வன் 1தமிழர் விளையாட்டுகள்கு. ப. ராஜகோபாலன்கழுகுமலைஇளங்கோ கிருஷ்ணன்வேதம்எட்டுத்தொகை தொகுப்புபால் (இலக்கணம்)கர்நாடகப் போர்கள்உரைநடைஇமயமலைபட்டினத்தார் (புலவர்)மாதவிடாய்இந்தியாவின் பண்பாடுசீவக சிந்தாமணிபணவீக்கம்ஆதம் (இசுலாம்)வராகிவிளையாட்டுவரலாறுகே. அண்ணாமலைசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சமணம்கழுகுஇராசேந்திர சோழன்மக்களாட்சிமுப்பரிமாணத் திரைப்படம்நெல்லிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வெள்ளியங்கிரி மலைகுடும்பம்சிங்கப்பூர்கண்ணாடி விரியன்புறநானூறுமீனா (நடிகை)விருத்தாச்சலம்புனர்பூசம் (நட்சத்திரம்)நேர்காணல்நீதிக் கட்சிஇராவணன்ம. கோ. இராமச்சந்திரன்அபூபக்கர்இராம நவமியாப்பகூவாவீணைபஞ்சாபி மொழிஇலங்கை🡆 More