ஜஹானாரா பேகம்

ஜஹானாரா பேகம் ( Jahanara Begum, 23 மார்ச் 1614 – 16 செப்டம்பர் 1681) என்பவர் ஒரு முகலாய இளவரசியாவார்.

இவர் மொகலாய மன்னர் ஷாஜகானுக்கும் மும்தாஜ்க்கும் மூத்த மகளாக பிறந்தவர் ஆவார். இவர் நல்ல படிப்பாளியாகவும், சூபி ஞானநெறியை பின்பற்றுபவராகவும், கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவராகவும் இருந்தார். இவர் அரசு நிர்வாகத்தில் தனது தந்தை ஷாஜகானுக்கு உறுதுணையாக உதவிபுரிந்தார். ஷாஜகான் நாட்டின் முதல் பெண்மணி என்ற் அந்தஸ்தை ஜஹானாரா பேகத்திற்கு வழங்கினார். 1631 ஜூன் 17ல் மும்தாஜ் மறைந்தபோது அவருக்கு வயது 38. ஜஹானாரா பேகத்திற்கு வயது 17. மனைவியை இழந்த தந்தைக்கு ஆறுதலாக இருந்தார். இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

ஜஹானாரா பேகம்
இளவரசி ஜெகானரா பேகமின் ஓவியம்


தனது சகோதரர் தாராவின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். 1644 மார்ச் 29 ல் தாரா -நாதிரா பானு திருமணத்தை முன்னின்று நடத்தினார். திருமண ஏற்பாடுகளின் போது எதிர்பாராவிதமாக இவர் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. ஷாஜஹானாபாத் (பழைய டெல்லி ) உருவாக்கப்பட்டபோது அதில் முக்கியப் பங்காற்றினார். அவரது வடிவமைப்பில் உருவாக்கப்பட்டதுதான் தற்போதைய சாந்தினி சௌக் பகுதி. 1658ல் ஷாஜகான் உடல் நலிவுற்றபோது அவரது மகன்களிடையே பதவிப்போராட்டம் தொடங்கியது. ஜஹானாரா பேகம் தாராவை ஆதரித்தார். ஆனால் போட்டியில் வெற்றி பெற்றவர் ஔரங்கசீப். சிறையில் அடைக்கப்பட்ட தனது தந்தை ஷாஜகானுக்கு ஆறுதலாக இருந்தார் ஜஹானாரா பேகம். நாட்டின் முதல் பெண்மணி என்ற் அந்தஸ்தை மீண்டும் ஜஹானாரா பேகத்திற்கு வழங்கினார் ஔரங்கசீப். ஆனால் அதை பெரிதாக கருதாமல் தனது தந்தையின் நினைவாகவே வாழ்ந்து 1681ல் மறைந்தார் ஜஹானாரா பேகம்.

மேற்கோள்கள்

Tags:

முகலாயப் பேரரசுமும்தாசு மகால்ஷாஜகான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)யாவரும் நலம்தயாநிதி மாறன்இந்திய தேசிய சின்னங்கள்பொறியியல்குருஓம்விநாயகர் அகவல்நாலடியார்பூப்புனித நீராட்டு விழாகம்பர்தண்டியலங்காரம்கம்பராமாயணம்அக்பர்மரகத நாணயம் (திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்அங்குலம்கான்கோர்டுதைராய்டு சுரப்புக் குறைவிளம்பரம்மலையாளம்வேதநாயகம் பிள்ளைஇந்தியக் குடியரசுத் தலைவர்சீறாப் புராணம்கலாநிதி வீராசாமிமார்ச்சு 29இயேசுவின் சாவுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்தோனேசியாஅபுல் கலாம் ஆசாத்என்விடியாகீர்த்தி சுரேஷ்பிரித்விராஜ் சுகுமாரன்திருக்குறள்இனியவை நாற்பதுதி டோர்ஸ்பிரபுதேவாரமலான் நோன்புஎங்கேயும் காதல்சைலன்ஸ் (2016 திரைப்படம்)இரட்டைக்கிளவிஇரவு விடுதிவடிவேலு (நடிகர்)தங்கம் (திரைப்படம்)வேளாண்மைஇந்திய தேசியக் கொடிசெக் மொழிசிறுபஞ்சமூலம்இந்திசுற்றுச்சூழல் பாதுகாப்புகொல்கத்தா நைட் ரைடர்ஸ்கணையம்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்தமிழிசை சௌந்தரராஜன்எடப்பாடி க. பழனிசாமிதிருவண்ணாமலைஇரண்டாம் உலகப் போர்இந்திய ரிசர்வ் வங்கிதேனி மக்களவைத் தொகுதிபாவலரேறு பெருஞ்சித்திரனார்குருத்து ஞாயிறுமுதுமலை தேசியப் பூங்காஎலுமிச்சைபௌத்தம்விருத்தாச்சலம்இராமலிங்க அடிகள்கருப்பைகுமரகுருபரர்சென்னைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)முல்லை (திணை)மயில்தொல்காப்பியம்கண்டம்ஹர்திக் பாண்டியா🡆 More