குளோரியா மகபகல்-அர்ரொயோ

குளோரியா மகபகல்-அர்ரொயோ (Gloria Macapagal-Arroyo, பிறப்பு:ஏப்ரல் 5, 1947) பிலிப்பினோ அரசியல்வாதியும் 2001 முதல் 2010 வரை பிலிப்பீன்சின் 14வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவரும் ஆவார்.

1998 முதல் 2001 வரை பிலிப்பீன்சின் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார். 2010 முதல் பம்பங்காவின் இரண்டாவது தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார். கொரசோன் அக்கினோவிற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராக பொறுப்பாற்றியப் பெருமை இவருக்குண்டு. முன்னாள் குடியரசுத் தலைவரான டியோசுடடோ மகபகல்லின் புதல்வி ஆவார். முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பீன்சின் முதல் பெண் உதவிக் குடியரசுத் தலைவரும் இவரேயாவார்.

குளோரியா மகபல்-அர்ரொயோ
குளோரியா மகபகல்-அர்ரொயோ
14வது பிலிப்பீனியக் குடியரசுத்தலைவர்
பதவியில்
சனவரி 20, 2001 – சூன் 30, 2010
Vice Presidentதியோபிஸ்டொ குயிங்கோனா
நோளி டி காஸ்த்ரோ
முன்னையவர்ஜோசப் எஸ்திராடா
பின்னவர்பெனிக்னோ அக்கீனோ III
12வது பிலிப்பீனியத் துணைக் குடியரசுத் தலைவர்
பதவியில்
சூன் 30, 1998 – சனவரி 20, 2001
குடியரசுத் தலைவர்ஜோசப் எஸ்திராடா
முன்னையவர்ஜோசப் எஸ்திராடா
பின்னவர்தியோபிஸ்டொ குயிங்கோனா
தேசியப் பாதுகாப்பு அமைச்சர்
பொறுப்பு
பதவியில்
நவம்பர் 30, 2006 – பெப்ரவரி 1, 2007
முன்னையவர்அவெலினோ குருசு
பின்னவர்எர்மோஜீன் எப்தானெ
பதவியில்
செப்டம்பர் 1, 2003 – அக்டோபர் 2, 2003
முன்னையவர்அஞ்செலோ ரெயெசு
பின்னவர்எட்வர்டொ எர்மிடா
சமூகநலம் மற்றும் மேம்பாடு அமைச்சர்
பதவியில்
சூன் 30, 1998 – அக்டோபர் 12, 2000
குடியரசுத் தலைவர்ஜோசப் எஸ்திராடா
முன்னையவர்கொரசோன் அல்மா டி லியோன்
பின்னவர்டுல்செ சகுயிசாக்
பம்பங்கா தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சூன் 30, 2010
முன்னையவர்மிக்கி அர்ரொயோ
பிலிப்பீன்சு மேலவை (செனட்) உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 1992 – சூன் 30, 1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மரியா குளோரியா மகரெக் மகபகல்

ஏப்ரல் 5, 1947 (1947-04-05) (அகவை 77)
சான் யுவான், மணிலாப் பெருநகரம், பிலிப்பீன்சு
அரசியல் கட்சிஎல்டிபி (1998க்கு முன்பு)
காம்பி (1997–2009)
லகாசு–சிஎம்டி (1991) (1998–2009)
லகாசு-சிஎம்டி II (2009–நடப்பு)
துணைவர்ஒசே மிகுவல் அர்ரொயோ
பிள்ளைகள்மிக்கி அர்ரொயோ
எவாஞ்சிலினா லூர்து
டியொசுடாடோ
முன்னாள் கல்லூரிஜியார்ஜ்டவுண் பல்கலைக்கழகம்
அசம்ப்சன் கல்லூரி
அடெனியோ டி மணிலா பல்கலைக்கழகம்
பிலிப்பீன்சு பல்கலைக்கழகம், திலிமான்
கையெழுத்துகுளோரியா மகபகல்-அர்ரொயோ
இணையத்தளம்அலுவல் வலைத்தளம்

அர்ரொயோ அடெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியையாக இருந்தார்; அப்போது பெனிக்னோ அக்கீனோ III அவரது மாணாக்கர்களில் ஒருவராக இருந்தார். 1987இல் குடியரசுத் தலைவர் கொரசோன் அக்கினோ அழைப்பினால் அரசு நிர்வாகத்தில் சேவை துவங்கிய அர்ரொயோ வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் பணியாற்றினார். 1992 முதல் 1998 வரை பிலிப்பீனிய மேலவை (செனட்) உறுப்பினராக சேவையாற்றிய பின்னர் குடியரசுத் தலைவர் ஜோசப் எஸ்திராடாவின் கீழ் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்திராடா மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோது சமூக நலத்துறை மற்றும் மேம்பாட்டு அமைச்சராக இருந்த அர்ரொயோ தமது பதவி விட்டு விலகினார். குடியரசுத் தலைவருக்கு எதிரான அணியில் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடினார். 2001 எஸ்டா புரட்சியை அடுத்து எஸ்திராடா பதவி விலக நேரிட்டது; சனவரி 20, 2001 இல் தலைமை நீதிபதி அர்ரொயோவிற்கு குடியரசுத் தலைவராக பதவிப்பிரமாணம் செய்வித்தார். மே, 2004 இல் நடந்த சர்ச்சைமிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் முழு ஆறு ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; சூன் 30, 2004 இல் பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிலிப்பீன்சில் உயர்பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு கீழுள்ள அலுவல்நிலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்; முன்னதாக ஒசே பி. லாரல் என்ற குடியரசுத் தலைவர் இவ்வாறு செய்துள்ளார்.

நவம்பர் 18, 2011 அன்று தேர்தல் முறைகேடுகளுக்காக அர்ரொயோ கைது செய்யப்பட்டார். குவிசோன் நகரத்திலுள்ள மாவீரர்கள் நினைவு மருத்துவ மையத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார். சூலை 2012 இல் பிணையில் விடுதலையானார். அக்டோபர் 2012 இல் அரசு அதிஷ்ட இலாபச் சீட்டு நிதியில் $8.8 மில்லியன் முறைகேடு செய்ததாக மீண்டும் கைதானார்.

மேற்சான்றுகள்

Tags:

கொரசோன் அக்கினோபிலிப்பினோ மக்கள்பிலிப்பீன்சு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழில் சிற்றிலக்கியங்கள்பெண்உப்புச் சத்தியாகிரகம்காடுவெட்டி குருஈரோடு தமிழன்பன்முதற் பக்கம்இசுலாமிய நாட்காட்டிகருப்பைதமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்வாதுமைக் கொட்டைவேற்றுமையுருபுஅருணகிரிநாதர்கலாநிதி வீராசாமிதமிழ்நாடு சட்டப் பேரவைபட்டினப் பாலைபெரிய வியாழன்குறிஞ்சி (திணை)ஞானபீட விருதுநெல்லியாளம்இசுலாமிய வரலாறுநற்றிணைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்முடக்கு வாதம்ஸ்ருதி ராஜ்திருட்டுப்பயலே 2மருது பாண்டியர்அதிதி ராவ் ஹைதாரிவிநாயகர் அகவல்எடப்பாடி க. பழனிசாமிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)திருச்சிராப்பள்ளி2014 உலகக்கோப்பை காற்பந்துதிரிசாஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்எயிட்சுநோட்டா (இந்தியா)சுந்தரமூர்த்தி நாயனார்ம. பொ. சிவஞானம்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிமக்களவை (இந்தியா)அன்னை தெரேசாமூலிகைகள் பட்டியல்கோயம்புத்தூர்ஆடுவிண்டோசு எக்சு. பி.சிவகங்கை மக்களவைத் தொகுதிமாதேசுவரன் மலைமருத்துவம்தேவதூதர்இயேசுவின் சாவுகொன்றை வேந்தன்யோவான் (திருத்தூதர்)வைகோஇரசினிகாந்துசூல்பை நீர்க்கட்டிகேழ்வரகுதிருநெல்வேலிநபிஆரணி மக்களவைத் தொகுதிமயக்கம் என்னபோயர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ஆறுமுக நாவலர்உருசியாசங்க காலப் பெண்பாற் புலவர்கள்சினைப்பை நோய்க்குறிசப்ஜா விதைதிருக்குறள்உமாபதி சிவாசாரியர்வேதம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைசைவ சமயம்கொல்கொதாஇந்திய உச்ச நீதிமன்றம்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிபண்பாடுமூசா🡆 More