இரா. நடராசன்

ஆயிஷா நடராசன் (எ) இரா.

நடராசன் (Era Natarasan) 2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர் . இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆயிஷா சிறுகதை இவருடைய இரா. நடராசன் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும் தனிநூலாகவும் கிடைக்கிறது. எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.

இரா நடராசன்
Era Natarasan
இரா. நடராசன்
இரா. நடராசன்
தாய்மொழியில் பெயர்இரா நடராசன்
பிறப்பு8 திசம்பர் 1964 (1964-12-08) (அகவை 59)
இலால்குடி, Trichy, தமிழ்நாடு, India
படித்த கல்வி நிறுவனங்கள்சமால் முகமது கல்லூரி (1982–85)
பணிகுழந்தைகள் எழுத்தாளர்
பட்டம்தலைமையாசிரியர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (2014)
கையொப்பம்இரா. நடராசன்
வலைத்தளம்
eranatarasan.com

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பியல், கல்வியியல் மேலாண்மை, உளவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர் மற்றும் எழுத்தாளர். கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா,நடராசன் பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து புத்தகங்களுக்காவே வெளிவரும் 'புத்தகம் பேசுது' மாத இதழின் ஆசிரியர்.

சிறுகதைகள்

இவரின் சிறுகதைகள் உலகளாவிய வாசகர் கவனத்தை ஈர்த்தவை. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இக்கதைகளில் சில தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. உலகச் சிறுகதை தொகுதிகள் சிலவற்றில் இவரின் சில கதைகள் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுப் பன்னாட்டுப் பட விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளன.

இரா. நடராசன் 
2014 ஆம் ஆண்டு இரா. நடராசன் பால சாகித்திய அகாதமி விருது பெறுகிறார்

அங்கீகாரங்களும் விருதுகளும்

  • பால சாகித்திய அகாதமி விருது குழந்தைகள் இலக்கியத்தில் பங்களிப்பதற்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 23 மொழிக்கும் வழங்கப்படும். இவரது "விஞ்ஞான விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள்" படைப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
  • "கணிதத்தின் கதை' எனும் நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விருது வழங்கப்பட்டது.
  • இவரது ஆயிஷா எனும் குறுநாவல் (பள்ளிக்கூட சிறுமியின் துயரக்கதை) தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது.

புத்தகங்கள்

  • இரா. நடராசன் சிறுகதைகள்
  • ஆயிஷா
  • இது யாருடைய வகுப்பறை...?
  • ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை
  • 10 எளிய இயற்பியல் சோதனைகள்
  • 10 எளிய வேதியியல் சோதனைகள்
  • 10 எளிய உயிரியல் சோதனைகள்
  • ஒரு தோழனும் மூன்று நண்பர்களும்
  • கணிதத்தின் கதை
  • நம்பர் பூதம்
  • சீனிவாச ராமானுஜன் 125
  • விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்
  • கலிலியோ (நாடகம்)
  • பிரெடரிக் டக்ளஸ் - அமெரிக்கக் கறுப்பு அடிமையின் சுயசரிதை (மொழிபெயர்ப்பு)

இவை தவிர்த்து மேலும் பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேலும் காண்க

பால சாகித்திய அகாதமி விருதுகள்

சான்றுகள்:

Tags:

இரா. நடராசன் வாழ்க்கைக் குறிப்புஇரா. நடராசன் சிறுகதைகள்இரா. நடராசன் அங்கீகாரங்களும் விருதுகளும்இரா. நடராசன் புத்தகங்கள்இரா. நடராசன் மேலும் காண்கஇரா. நடராசன் சான்றுகள்:இரா. நடராசன்ஆயிஷா (நூல்)இரா. நடராசன் சிறுகதைகள்பால சாகித்திய அகாதமி விருதுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமுருகாற்றுப்படைசூல்பை நீர்க்கட்டிஇராமலிங்க அடிகள்செம்மொழிதிதி, பஞ்சாங்கம்குப்தப் பேரரசுபுரோஜெஸ்டிரோன்வெண்குருதியணுசித்த மருத்துவம்யுகம்கொடைக்கானல்சேலம்சிவனின் 108 திருநாமங்கள்குண்டூர் காரம்உலா (இலக்கியம்)கலாநிதி மாறன்சிறுநீரகம்கன்னியாகுமரி மாவட்டம்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)நெசவுத் தொழில்நுட்பம்இளையராஜாதிருவரங்கக் கலம்பகம்கல்விதேனீரச்சித்தா மகாலட்சுமிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இந்தியன் பிரீமியர் லீக்திருப்பாவைமணிமேகலை (காப்பியம்)இனியவை நாற்பதுபாண்டி கோயில்உவமையணிகேரளம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருப்பூர் குமரன்சப்தகன்னியர்மொழிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கா. ந. அண்ணாதுரைஸ்ரீலீலாவிண்ணைத்தாண்டி வருவாயாவணிகம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பகிர்வுசொல்முத்தரையர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்சைவ சமயம்வராகிகருப்பைமனித உரிமைநிணநீர்க்கணுதிருவையாறுஅங்குலம்நல்லெண்ணெய்செஞ்சிக் கோட்டைவிளையாட்டுஇந்தியப் பிரதமர்குற்றியலுகரம்சுந்தர காண்டம்திருநாவுக்கரசு நாயனார்பள்ளிக்கரணைதினகரன் (இந்தியா)பிரபஞ்சன்சீமான் (அரசியல்வாதி)கபிலர் (சங்ககாலம்)ரோகிணி (நட்சத்திரம்)கட்டபொம்மன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்மயில்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்வேலு நாச்சியார்கணையம்தமிழ்விடு தூதுவெந்தயம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகிருட்டிணன்🡆 More