இரண்டாம் சோமேசுவரன்

இரண்டாம் சோமேசுவரன் (Somesvara II ஆட்சிக் காலம் 1068-1076 ) இவன் கதக் (தற்போதைய கதக் மாவட்டம்) சுற்றிய பகுதிகளை நிர்வகித்துவந்தான் அவனது தந்தை முதலாம் அமோகவர்சனின் (ஆகவமல்லன்) மரணத்திற்கு பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனானான்.

இரண்டாம் சோமேசுவரனுக்கு இவன் முதல் மகனாவான். இவனது தம்பியான விக்ரமாதித்தனிடமிருந்து இவனது பதவிக்கு அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்துவந்தது. இறுதியில் இரண்டாம் சோமேசுவரனிடம் இருந்து ஆறாம் விக்ரமாதித்தன் பதவியைக் கைப்பற்றினானன்.

சோழ படையெடுப்பு

ஆட்சிக்கு வந்த உடன் இரண்டாம் சோமேசுவரன் வீரராஜேந்திர சோழனின் படையெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது . சோழர் படைகள் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து குட்டி என்ற நகரத்தை (கர்நூல் மாவட்டம் )முற்றுகையிட்டனர். மேலும் கம்பில்லியைத் தாக்கினர். சாளுக்கிய பேரரசை காப்பதற்காக அவனது தம்பி விக்ரமாதித்தன் உதவாமல் சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற இதை வாய்ப்பாகக் கருதினான்.

விக்ரமாதிதனின் சந்தர்ப்பவாதம்

சோழ படையெடுப்பால் நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை விக்ரமாதித்தன் தனக்கு சாதகமாக பயன் படுத்த தகுந்த வாய்ப்பாகக்கிக் கொண்டான். விக்ரமாதித்தன் தனது ஆதரவாளர்களை திரட்டி, அவர்கள் உதவி மூலம் சோழ மன்னர் வீரராஜேந்திரனிடம் பேச்சுவார்த்தைகளை தொடங்கினான்.விக்ரமாதித்தன் வீரராஜேந்திரன் ஆகியோரின் கூட்டணி ஏற்பட்டது. இதன்மூலம் சாளுக்கிய நாட்டின் தெற்குப்பகுதி விக்ரமாதித்தன்வசம் வந்தது.

சாளுக்கிய உள்நாட்டுப் போர்

வீரராஜேந்திரசோழன் 1070 ல் இறந்தான். இதன் பின்னர் அரசியல் நிலைமை மாறியது. சோழனின் இறப்புக்குப்பின் அவன் மகன் அதிராஜேந்திர சோழன் சோழ அரியணைக்கு வந்தான். அதிராஜேந்திர சோழன் படுகொலை செய்யப்பட்டான். இதனால் உள்நாட்டுக் கலவரங்களும் குழப்பங்களும் ஏற்பட்டன. இறுதியில் கீழைச்சாளுக்கியரின் நெருங்கிய இரத்த உறவான முதலாம் குலோத்துங்க சோழன் சோழ அரியணைக்கு வந்தான். விக்ரமாதித்தன் முதலாம் குலோத்துங்கனுக்கு எதிரியாக இருந்ததால், இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கச் சோழனுடன் உடன்பாடு கொண்டு, விக்ரமாதித்தனைத் தாக்குவதற்கு தயாரானான்.

இரண்டாம் சோமேசுவரனுக்கு ஆதரவாக முதலாம் குலோத்துங்கன் விக்ரமாதித்தன் மீது 1075 இல் தாக்குதலைத் தொடங்கினான். இரண்டாம் சோமேசுவரன் விக்ரமாதித்தனை எதிர் புறமிருந்து தாக்கினான். இந்த உள்நாட்டுப்போரில் சோமேசுவரன் பெரும் தோல்வியைச் சந்தித்தான். ஆறாம் விக்ரமாதித்தன் சோமேசுவரனைக் கைதுசெய்து சிறையில் அடைத்து 1076இல் தன்னை முழு சாளுக்கிய நாட்டுக்கும் அரசனாக அறிவித்தான்.

மேற்கோள்

  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984).
  • Dr. Suryanath U. Kamat (2001). Concise History of Karnataka, MCC, Bangalore (Reprinted 2002).

Tags:

இரண்டாம் சோமேசுவரன் சோழ படையெடுப்புஇரண்டாம் சோமேசுவரன் விக்ரமாதிதனின் சந்தர்ப்பவாதம்இரண்டாம் சோமேசுவரன் சாளுக்கிய உள்நாட்டுப் போர்இரண்டாம் சோமேசுவரன் மேற்கோள்இரண்டாம் சோமேசுவரன்கதக் மாவட்டம்முதலாம் அமோகவர்சன்மேலைச் சாளுக்கியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஅவிட்டம் (பஞ்சாங்கம்)இயேசு காவியம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்உவமையணிதிரு. வி. கலியாணசுந்தரனார்மலைபடுகடாம்கட்டுவிரியன்ஞானபீட விருதுஐங்குறுநூறுபிரேசில்வி.ஐ.பி (திரைப்படம்)ஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2வேதம்முதலாம் இராஜராஜ சோழன்மோசேராதாரவிசிங்கப்பூர்இராபர்ட்டு கால்டுவெல்மொழிபெயர்ப்புடைட்டன் (துணைக்கோள்)மதுரைக் காஞ்சிஇந்திரா காந்திமியா காலிஃபாநீதிக் கட்சிதமிழ்ஒளிஊராட்சி ஒன்றியம்மொழிதெலுங்கு மொழிபதினெண்மேற்கணக்குபணவீக்கம்அரிப்புத் தோலழற்சிபோதி தருமன்சிவவாக்கியர்கல்விநனிசைவம்மூதுரைதமிழ் மாதங்கள்தமிழர் விளையாட்டுகள்சுற்றுச்சூழல்மஞ்சள் காமாலைமதீனாமார்ச்சு 29ரமலான்கே. மணிகண்டன்கடையெழு வள்ளல்கள்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)நவக்கிரகம்பகத் சிங்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சித்த மருத்துவம்மரகத நாணயம் (திரைப்படம்)இரச்சின் இரவீந்திராபாக்கித்தான்நெல்லிமொரோக்கோகுறுந்தொகைஎன்விடியாசுரதாமுரசொலி மாறன்திருநெல்வேலிபெரும் இன அழிப்புஆண்டாள்தேர்தல்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்வினோஜ் பி. செல்வம்நம்மாழ்வார் (ஆழ்வார்)தமிழர் பருவ காலங்கள்கள்ளர் (இனக் குழுமம்)சுடலை மாடன்சப்ஜா விதைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்யானைசட் யிபிடிமயில்இலட்சம்🡆 More