1994 மொகோக்சுங் படுகொலைகள்

1994 ஆம் ஆண்டு மொகோக்சுங் படுகொலை இது நகர மக்களால் அயாதியா மொகோக்சுங் என்றும் குறிப்பிடப்படுகிறது.

1994, திசம்பர், 27 அன்று 10 அசாம் ரைப்பிள்ஸ் மற்றும் இந்திய தரைப்படையின் 12 வது மராத்திய காலாட்படை ஆகியன நாகாலாந்தின் மொகோக்சுங்கில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதலில் துப்பாக்கிச்சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் பல அழிவுகள் ஏற்பட்டன. இதில் 89 கடைகள், 48 வீடுகள், 17 வாகனங்கள், 7 இருசக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாயின. மேலும் இதில் 7 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், மேலும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர். பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். ஒரு டசனுக்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.

நிகழ்வு

1994, திசம்பர், 27 அன்று காலை சுமார் 10:20 மணிக்கு 16 வது மராத்தா காலாட்படையின் (எம்எல்ஐ) ஒரு ரோந்து நாகாலாந்தின் மொகோக்சுங்கில் உள்ள போலீஸ் பாயிண்ட் அருகே சென்று கொண்டிருந்தது. மராத்தா காலாட்படையின் கூற்றின்படி, ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் அந்த துருப்புக்கள் சுடப்பட்டன. இதனால் ஒரு எம்எல்ஐ சிப்பாய் இறந்தார் எனப்பட்டது.

இதற்கு எதிர்வினையாக எம்எல்ஐ துப்பாக்கிச் சூடு நடத்தியது. மேலும் கம்பளி பந்துகள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களில் எரிபொருட்களை ஊற்றி, கடைகள், வீடுகள் மற்றும் பிற கட்டிடங்களுக்கு தீ வைக்கத் தொடங்கியது.

துப்பாக்கிச் சூடு தீவிரமடைந்ததால், நகரின் முக்கிய கடைவீதியிலும் அதைச் சுற்றியும் இருந்த பொதுமக்களை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளை பிரதான திறந்தவெளியை பகுதி நோக்கி நடத்தி சென்ன்றனர். அதேசமயம் ஆண்கள் திட்டமிட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

விசாரணை

சில தகவல்களின்படி, அதே நாளில் இந்திய ராணுவத் தளபதி சங்கர் ராய்சௌத்ரி அப்போது நாகாலாந்து முதல்வராக இருந்த எஸ். சி. ஜமீர் உடன் நாகாலாந்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து விவாதிக்க கோகிமாவுக்குச் சென்றதால், அவருக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கவும், மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காகவும், திட்டமிட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக அன்றைய தினம் காலை சுமார் 7:00 மணி முதல் நகரில் உள்ள அனைத்து தொலைபேசி இணைப்புகளும் மர்மமான முறையில் செயலிழந்ததால், இச்சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்ற அச்சம் ஏற்பட்டது.

மரபுவழி எச்சம்

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான அஸ்ஸாம் ரைபிள்சால் 2020 சனவரியில், மொகோக்சுங்கில் நகரின் மையத்தில் போர் நினைவுச்சின்னம் கட்டப்பட்டதற்கு எதிராக பல நாகா குடிமை சமூகங்களும் பல்வேறு நபர்களும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் காண்க

குறிப்புகள்

Tags:

1994 மொகோக்சுங் படுகொலைகள் நிகழ்வு1994 மொகோக்சுங் படுகொலைகள் விசாரணை1994 மொகோக்சுங் படுகொலைகள் மரபுவழி எச்சம்1994 மொகோக்சுங் படுகொலைகள் மேலும் காண்க1994 மொகோக்சுங் படுகொலைகள் குறிப்புகள்1994 மொகோக்சுங் படுகொலைகள்அசாம் ரைப்பிள்ஸ்இந்தியத் தரைப்படைநாகாலாந்துமோகோக்சுங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவன்ஹதீஸ்இந்திய விண்வெளி ஆய்வு மையம்இந்தியக் குடியரசுத் தலைவர்பெரியம்மைநேர்காணல்சீமான் (அரசியல்வாதி)எங்கேயும் காதல்இடமகல் கருப்பை அகப்படலம்உ. வே. சாமிநாதையர்யோகக் கலைநாட்டு நலப்பணித் திட்டம்காம சூத்திரம்கன்னியாகுமரி மாவட்டம்ஆண்டாள்அரசழிவு முதலாளித்துவம்பயில்வான் ரங்கநாதன்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்பராக் ஒபாமாதோட்டம்பவுனு பவுனுதான்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்என்டர் த டிராகன்கார்லசு புச்திமோன்எல். இராஜாஇந்தியாவில் இட ஒதுக்கீடுஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்சௌராட்டிரர்தற்கொலைஈ. வெ. இராமசாமிபுணர்ச்சி (இலக்கணம்)மனித நேயம்நயன்தாராகாடுவெட்டி குருவெள்ளியங்கிரி மலைசடங்குவாணிதாசன்கட்டுவிரியன்தொல். திருமாவளவன்ஹபிள் விண்வெளித் தொலைநோக்கிஇசுரயேலர்விளையாட்டுசங்க இலக்கியம்இட்லர்டங் சியாவுபிங்கபடிசெஞ்சிக் கோட்டைஅறம்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857மாலை நேரத்து மயக்கம்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்பிச்சைக்காரன் (திரைப்படம்)நீர்கள்ளுவிலங்குகடையெழு வள்ளல்கள்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்நாடுகணியன் பூங்குன்றனார்கரகாட்டம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்காதலும் கடந்து போகும்கெல்லி கெல்லிதிரிகடுகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மணிவண்ணன்முகம்மது நபிமூலிகைகள் பட்டியல்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நாளிதழ்சனகராஜ்திருவள்ளுவர் சிலைசே குவேராகர்நாடகப் போர்கள்பர்வத மலைகீழடி அகழாய்வு மையம்ஆங்கிலம்வேதநாயகம் பிள்ளை🡆 More