வெள்ளியங்கிரி மலை

வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains) தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 40 கிமீ தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி கிழக்கு மேற்காக அமைந்துள்ளது.

இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இம்மலைக்கு கிழக்கே தொடர்ச்சியாக மருதமலை அமைந்துள்ளது.

வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை is located in தமிழ் நாடு
வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை
Location in Tamil Nadu
ஆள்கூறுகள்:10°59′20″N 76°41′14″E / 10.9888°N 76.6873°E / 10.9888; 76.6873
பெயர்
தமிழ்:வெள்ளியங்கிரி மலை
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவு:கோயம்புத்தூர்
ஏற்றம்:1,778 m (5,833 அடி)
கோயில் தகவல்கள்
மூலவர்:சிவன்
சிறப்பு திருவிழாக்கள்:தமிழ் மற்றும் தெலுங்கு வருட பிறப்பு, சித்ரா பௌர்ணமி, கார்த்திகை விளக்கீடு
வரலாறு
அமைத்தவர்:இயற்கையமைவு
இணையதளம்:[1]
வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை

வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் (தென்கயிலை), சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. இந்த அடிவாரப் பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு முடிகளைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். ஏழாவது மலையின் உச்சியில் சிறிய சுயம்பு சிவன் கோவில் உள்ளது. இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லப்படுகிறது. ஆனால், அனைவரும் இரவில் பயணத்தைத் தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். மலையேறும் பக்தர்கள் அதிகரிப்பதாலும் அவர்கள் பயன்படுத்தி தூக்கி வீசும் பொருட்களாலும் இம்மலையின் இயற்கைச் சூழல் சீர்கெட்டு வருகிறது. இயற்கையைச் சீரழிக்காமல் இறைவனை வணங்க பயணம் செய்வது நமது கடமையாகும். வெள்ளியங்கிரி மலையின் முகட்டிலிருந்து நோக்கினால் சிறுவாணி மலைக்கு மேற்கே கல்லடிக்கூடம் மலையிலிருந்து வடக்கு நோக்கி விழும் அழகிய முத்திக்குளம் அருவியை காணலாம். வெள்ளியங்கிரி மலையிலிருந்து பார்க்கும்போது முத்திக்குளம் அருவியில் ஆண்டு முழுவதும் நீர் வருவது தெரிந்ததால் தான் அங்கிருந்து நீர் கொண்டு வர சிறுவாணி அணைத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இங்கு பெண்கள், குழந்தைகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயில்

பேருந்து வசதி

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊர் வரை பேருந்து வசதி இருக்கிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

வெள்ளியங்கிரி மலை கோயில்வெள்ளியங்கிரி மலை பேருந்து வசதிவெள்ளியங்கிரி மலை இவற்றையும் பார்க்கவெள்ளியங்கிரி மலை மேற்கோள்கள்வெள்ளியங்கிரி மலைகிலோமீட்டர்கோயம்புத்தூர்தமிழ்நாடுமேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்எங்கேயும் காதல்சிவன்பிரேமலதா விஜயகாந்த்கணினிமுதுமலை தேசியப் பூங்காஇந்து சமயம்பரணி (இலக்கியம்)கணியன் பூங்குன்றனார்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சிவவாக்கியர்மாணிக்கம் தாகூர்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்நாலடியார்இந்திய தேசியக் கொடிசவ்வாது மலைநஞ்சுக்கொடி தகர்வுபேரிடர் மேலாண்மைஹதீஸ்அறுசுவைநாளந்தா பல்கலைக்கழகம்ஐராவதேசுவரர் கோயில்திருச்சிராப்பள்ளிதிருநாவுக்கரசு நாயனார்நன்னூல்வானிலைஇரண்டாம் உலகப் போர்உஹத் யுத்தம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)நாமக்கல் மக்களவைத் தொகுதிகரூர் மக்களவைத் தொகுதிஆதலால் காதல் செய்வீர்திராவிசு கெட்முத்துராஜாஇயேசுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்ஜெயகாந்தன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஏ. ஆர். ரகுமான்மக்களாட்சிஆறுமுக நாவலர்பத்துப்பாட்டுதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிதிதி, பஞ்சாங்கம்நவக்கிரகம்அ. கணேசமூர்த்திதமிழ்நாடு சட்டப் பேரவைஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்இடலை எண்ணெய்கொடைக்கானல்நவரத்தினங்கள்சிலிக்கான் கார்பைடுபொறியியல்அரண்மனை (திரைப்படம்)புறநானூறுகினி எலிஇரட்சணிய யாத்திரிகம்வினோஜ் பி. செல்வம்ஜி. யு. போப்இனியவை நாற்பதுவ. உ. சிதம்பரம்பிள்ளைநெல்பதிற்றுப்பத்துகோத்திரம்எட்டுத்தொகைநெடுநல்வாடைம. கோ. இராமச்சந்திரன்மெய்யெழுத்துகருப்பைஇயேசு பேசிய மொழிபெரும்பாணாற்றுப்படைகயிறுவயாகராசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)நெல்லியாளம்நான் அவனில்லை (2007 திரைப்படம்)உருசியா🡆 More