வெண்பா: ஒரு மரபுச் செய்யுள் வகை

வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும்.

தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். வெண்பாவினை வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முறற்கை என்றும் வழங்குவர். அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது.

இலக்கணம்

வெண்பாவின் பொது இலக்கணம்:

  • ஈற்றடி  முச்சீராய் ஏனைய அடிகள்  நாற்சீராய் வரும் .
  • இயற்சீர் ( மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா.
  • இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வாரா.
  • ஈற்றடியின்  ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள்  ஒன்றுகொண்டு முடியும்.
  • செப்பலோசை பெற்று வரும்
  • இரண்டடி முதல் 12 அடி வரை வரும்

குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள்

தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.

  • திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை.
  • நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது.
  • முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை.
  • நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
  • நீதி வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும்.
  • திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.
  • மூதுரை என்ற நூலில் முப்பது வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு வெண்பாக்களும் தனித்தனிக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இதில் நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் உள்ளன.
  • நல்வழி என்பது 40 நேரிசை வெண்பாக்களில் அறக்கருத்துக்களைக் கொண்ட நூலாகும்.

இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை.

வகைகள்

வேறு வகைப் பிரிவு

இந்த வேறு வகை வெண்பாக்களைக் குறிப்பிடும் இலக்கணப் பாடல்கள் இரண்டு தரப்பட்டுள்ளன.

வெண்பா (தழுவல்)

தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்

உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்துக் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம்.

நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன.

வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது.

    நேர்நேர் தேமா
    நிரைநேர் புளிமா
    நேர்நிரை கூவிளம்
    நிரைநிரை கருவிளம்
    நேர்நேர்நேர் தேமாங்காய்
    நேர்நேர்நிரை தேமாங்கனி
    நேர்நிரைநேர் கூவிளங்காய்
    நேர்நிரைநிரை கூவிளங்கனி
    நிரைநேர்நேர் புளிமாங்காய்
    நிரைநேர்நிரை புளிமாங்கனி
    நிரைநிரைநேர் கருவிளங்காய்
    நிரைநிரைநிரை கருவிளங்கனி

அசைகளின் தொடர் சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும்.

மேற்கோள் விளக்கம்

வெண்பாவுக்கான யாப்பிலக்கணம்

யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஓர் இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன:

  • சீர்களுக்கான நெறிகள்
    1. வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும்.
    2. மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது.
  • நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள்
    வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும்.
    1. இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.
    2. வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும்.

வெண்பா செப்பலோசை பெற்று வரும்.

வெண்பாவுக்கான மேலே தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:

    <வெண்பா> <அடி>{1,11}<ஈற்றடி>
    <அடி> <சீர்> <சீர்> <சீர்> <சீர்>
    <ஈற்றடி> <சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்>
    <சீர்> <ஈரசை> | <மூவசை>
    <ஈற்றுச்சீர்> <நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு>
    <ஈரசை> <தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்>
    <மூவசை> <தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்>
    <தேமா> <நேர்> <நேர்>
    <புளிமா> <நிரை> <நேர்>
    <கருவிளம்> <நிரை> <நிரை>
    <கூவிளம்> <நேர்> <நிரை>
    <தேமாங்காய்> <தேமா> <நேர்>
    <புளிமாங்காய்> <புளிமா> <நேர்>
    <கருவிளங்காய்> <கருவிளம்> <நேர்>
    <கூவிளங்காய்> <கூவிளம்> <நேர்>
    <நாள்> <நேர்>
    <மலர்> <நிரை>
    <காசு> <நேர்> <நேர்>
    <பிறப்பு> <நிரை> <நேர்>
    <நேர்> <குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று>
    <நிரை> <குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று>
    <குறில்> {குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
    <நெடில்> {நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து}
    <ஒற்று> {மெய்யெழுத்து}

தளைகளுக்கான இலக்கண நெறிகள்:

இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்) <வெண்பா>   →  |   → <தேமா>   → <கூவிளம்>   → <புளிமா>   → <கருவிளம்>   → <நாள்> | <காசு>  → <மலர்> | <பிறப்பு>  வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்)  → <தேமாங்காய்>   → <கூவிளங்காய்>   → <புளிமாங்காய்>   → <கருவிளங்காய்>  

எடுத்துக்காட்டு

ஒரு திருக்குறள்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.  

ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு:

"As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay. (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)." 
வெண்பா: இலக்கணம், குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள், வகைகள் 
யாப்பிலக்கணப் பத்தியில் தரப்பட்டுள்ள இலக்கண நெறிமுறைகளிற்கேற்ப எடுத்துக்காட்டு குறட்பாவிற்காக வரையப்பட்ட இலக்கண பகுப்பாய்வுப் படிநிலை (parse tree) வரைபடம் - குறிப்பு: 0 குறிலையும், 1 நெடிலையும், 2 ஒற்றையும் குறிக்கிறது
வெண்பா: இலக்கணம், குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள், வகைகள் 
எடுத்துக்காட்டுக் குறட்பாவின் தளை சார்ந்த நெறிமுறைகளுக்கான இலக்கண உருவகங்கள் (productions)

குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Tags:

வெண்பா இலக்கணம்வெண்பா குறிப்பிடத்தக்க நூல்கள்வெண்பா வகைகள்வெண்பா வேறு வகைப் பிரிவுவெண்பா தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள்வெண்பா மேற்கோள் விளக்கம்வெண்பா வுக்கான யாப்பிலக்கணம்வெண்பா எடுத்துக்காட்டுவெண்பா குறிப்புகளும் மேற்கோள்களும்வெண்பா வெளி இணைப்புகள்வெண்பாஅசை (யாப்பிலக்கணம்)அடி (யாப்பிலக்கணம்)ஆசிரியப்பாஇடம் சாரா இலக்கணம்ஒலிப்பியல்கலிப்பாசீர் (யாப்பிலக்கணம்)தமிழ்யாப்பிலக்கணம்வஞ்சிப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

விளம்பரம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்விஷ்ணுகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிடி. எம். செல்வகணபதிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்உயிர்மெய் எழுத்துகள்சிலிக்கான் கார்பைடுஐராவதேசுவரர் கோயில்இராமர்இந்திய தேசிய சின்னங்கள்கபிலர் (சங்ககாலம்)இந்திய தேசிய காங்கிரசுமலைபடுகடாம்வல்லினம் மிகும் இடங்கள்செம்மொழிஅ. கணேசமூர்த்திஇஸ்ரேல்கடலூர் மக்களவைத் தொகுதிஇயேசுவின் சாவுமொழிநாடாளுமன்றம்ஆரணி மக்களவைத் தொகுதிநான்மணிக்கடிகைபூரான்தைப்பொங்கல்விழுப்புரம் மக்களவைத் தொகுதிஆசிரியர்திருப்பூர் மக்களவைத் தொகுதிபழமொழி நானூறுபரிவர்த்தனை (திரைப்படம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்காம சூத்திரம்சிறுதானியம்உருசியாமரியாள் (இயேசுவின் தாய்)திதி, பஞ்சாங்கம்இளையராஜாஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மயக்கம் என்னபூலித்தேவன்குறுந்தொகைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பூப்புனித நீராட்டு விழாதமிழக மக்களவைத் தொகுதிகள்குலுக்கல் பரிசுச் சீட்டுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திரிகடுகம்திருமூலர்நேர்பாலீர்ப்பு பெண்தமிழ்த்தாய் வாழ்த்துயோவான் (திருத்தூதர்)நயன்தாராகோயில்விடுதலை பகுதி 1கருக்காலம்வட்டாட்சியர்யூதர்களின் வரலாறுஇந்திய அரசியல் கட்சிகள்சிலம்பம்குறிஞ்சிப் பாட்டுவெண்பாசூரரைப் போற்று (திரைப்படம்)அகத்தியர்பனைகுமரி அனந்தன்இந்திய மக்களவைத் தொகுதிகள்கண்டம்திருவண்ணாமலைதேவாரம்பிரேமலுமீரா சோப்ராதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்பாரதிதாசன்சீரடி சாயி பாபாவிலங்குஹஜ்சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)🡆 More