வெண்கல கரிச்சான்

வெண்கல கரிச்சான் (டைகுருசு ஏனியசு) என்பது கரிச்சான் குழுவைச் சேர்ந்த ஒரு சிறிய இந்தோமலையா பறவை சிற்றினமாகும்.

இவை இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் காடுகளில் வசிக்கின்றன. காடு மேடுகளின் நிழலில் பறக்கும் பூச்சிகளை வான்வழியில் பிடித்து உண்ணுகின்றன. இவை இப்பகுதியில் உள்ள மற்ற கரிச்சான்களுடன் மிகவும் ஒத்துக் காணப்படுகின்றன. ஆனால் இவை சற்றே சிறியதாகவும், சரியான அளவில் பிளவுபட்ட வால் இறகினைக் கொண்டிருக்கும்.

Bronzed drongo
வெண்கல கரிச்சான்
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. aeneus
இருசொற் பெயரீடு
Dicrurus aeneus
வெயிலோட், 1817
வேறு பெயர்கள்

சப்தியா அனியே

விளக்கம்

இந்த கரிச்சான் இரட்டைவால் குருவியை விடச் சற்றே சிறியது. இதன் தலை, கழுத்து மற்றும் மார்பகத்தின் மீது வளைந்த தோற்ற உலோக பளபளப்பு காணப்படும். நாசிக்கும் கண்களுக்கும் இடைப்பட்ட பகுதி வெல்வெட் தன்மையுடன், காது உறைகள் மந்தமாகக் காணப்படும். வால் மெல்லியதாகவும், வெளிப்புற வால் இறகுகள் சற்றே வெளிப்புறமாகக் காணப்படும். முதிர்ச்சியடையாத வற்றின் இறகுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இளம் பறவையானது மந்தமாகவும், பழுப்பு நிறமாகவும் காணப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட சிற்றினம் இந்தியாவில் காணப்படுகிறது. இவை மலாய் தீபகற்பத்தின் வடக்கு பகுதி வரை பரவியுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து வரும் மாதிரிகள், பர்மாவின் மலாயென்சிசு மாதிரிகள் மார்போமெட்ரிக்சினை மிகவும் ஒத்திருக்கிறது. சீனா குவாங்சியென்சிசின் துணையினங்கள் ஏனியசுக்கு ஒத்ததாகக் கருதப்படுகின்றன . சிலாங்கூர் தெற்கிலிருந்து சுமத்ரா மற்றும் போர்னியோவில் துணையினம் மலயன்சிசு காணப்படுகிறது. தைவான் உள்பகுதியில் உள்ள மலைகள் பிரவுனியானசின் தாயகமாகும்.

பரவல்

வெண்கல கரிச்சான் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கு உத்தராஞ்சலில் இருந்து கிழக்கு நோக்கி இந்தோசீனா மற்றும் ஹீனான், மலாய் தீபகற்பம், சுமத்ரா மற்றும் வடக்கு போர்னியோ வரை கீழ் இமயமலையில் காணப்படுகிறது. இந்த சிற்றினம் பொதுவாக ஈரமான அகன்ற காடுகளில் காணப்படுகிறது. இந்த சிற்றினம் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது.

நடத்தை

இவை தனித்தனியாக அல்லது இரண்டு முதல் மூன்று பேர் கொண்ட குழுவாகவோ காணப்படும். வான்வழி பறந்து பூச்சிகளைத் தீவிரமாக வேட்டையாடி உண்ணுகின்றன. இவை சில சமயங்களில் உணவு தேடும் பிற சிற்றினங்களுடன் இணைந்து வேட்டையாடுகின்றன. இவை பிற பறவை சிற்றினங்களின் அழைப்புகளைப் பிரதிபலிப்பதில் மிகச் சிறந்தவை. இது பல கரிச்சான் சிற்றினங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு பண்பு ஆகும். இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் சூலை வரை. மூன்று அல்லது நான்கு இளஞ்சிவப்பு முதல் பழுப்பு நிற முட்டைகள் மரத்தின் கிளைப்பிரிவில் கட்டப்படும் கோப்பை வடிவக் கூடுகளில் இடுகின்றன. இதன் கூடுகள் சிலந்தி வலைகளால் மூடப்பட்டிருப்பதால் வெண்மையாகத் தோன்றும். இவை ஆக்குரோசமான அதே நேரம் அச்சமற்ற பறவைகள் ஆகும். சுமார் 24 செ.மீ. நீளமுடைய இப்பறவைகள் இவற்றின் கூடோ குஞ்சுகளோ அச்சுறுத்தப்படும் போது, அச்சுறுத்தும் விலங்கு இவற்றைவிடப் மிகப் பெரியதாக இருப்பினும் தாக்குவதற்குத் தயங்குவதில்லை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வெண்கல கரிச்சான் விளக்கம்வெண்கல கரிச்சான் பரவல்வெண்கல கரிச்சான் நடத்தைவெண்கல கரிச்சான் மேற்கோள்கள்வெண்கல கரிச்சான் வெளி இணைப்புகள்வெண்கல கரிச்சான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மோகன்தாசு கரம்சந்த் காந்திஐக்கிய நாடுகள் அவைஅயோத்தி தாசர்ஹர்திக் பாண்டியாமழைமக்களவை (இந்தியா)வட்டாட்சியர்இசைபரிபாடல்மண்ணீரல்முல்லை (திணை)பள்ளுசிறுநீரகம்நல்லியக்கோடன்ஊராட்சி ஒன்றியம்காற்றுஜெய்இந்திய தேசிய சின்னங்கள்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கேட்டை (பஞ்சாங்கம்)சிவன்வின்னர் (திரைப்படம்)திருவள்ளுவர்மூலிகைகள் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்கும்பகோணம்கஜினி (திரைப்படம்)1938 தமிழ்நாட்டு பெண்கள் மாநாடுமொன்ட்டானாசெங்குந்தர்பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)பெண் தமிழ்ப் பெயர்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்தண்டுபாள்யா (திரைப்படம்)முத்துலட்சுமி ரெட்டிஜோதிகாஉடற் பயிற்சியாழ்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்உள்ளம் கொள்ளை போகுதேதமிழ்நாடுசெக் மொழிதிருச்சிராப்பள்ளிதினத்தந்திபதினெண் கீழ்க்கணக்குமதுரை வீரன்மீனம்அதியமான்செம்மொழிபுலிநயன்தாரா திரைப்படங்கள்பழமொழிமணிமேகலை (காப்பியம்)பணவீக்கம்சைவத் திருமணச் சடங்குநாஞ்சில் வள்ளுவன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்மாமன் மகள் (1995 திரைப்படம்)பத்து தலஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஈரோடு தமிழன்பன்அக்கினி நட்சத்திரம்மண் பானைபுவி சூடாதலின் விளைவுகள்பெயரெச்சம்இந்திய உச்ச நீதிமன்றம்பதுவை நகர அந்தோனியார்உயிர்மெய் எழுத்துகள்இந்திரா காந்திதிருமுருகாற்றுப்படைசீவக சிந்தாமணிசேரர்முத்துராஜாபாடாண் திணைபகவத் கீதைகுற்றாலக் குறவஞ்சிமரகத நாணயம் (திரைப்படம்)பெரும்பாணாற்றுப்படை🡆 More