தடைக் கொள்கை

தடுத்தல் என்பது விக்கிப்பீடியாவைத் தொகுப்பதிலிருந்து பயனர்களை விக்கிப்பீடியா:நிர்வாகிகள் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்கும் முறையாகும்.

விக்கிப்பீடியாவின் கொள்கைகள், வழிகாட்டல்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் பயனர்கள், IP முகவரிகள் மற்றும் IP முகவரித் தொகுதிகளை திட்டவட்டமான அல்லது காலவரையற்ற நேரத்திற்கு, அனைத்து அல்லது பக்கங்களின் துணைக்குழுவினைத் தொகுக்க இயலாதவாறு தடை செய்யப்படலாம். தடுக்கப்பட்ட பயனர்கள் விக்கிப்பீடியாவில் எந்த கட்டுரை அல்லது பக்கத்தையும் திறக்கலாம், வாசிக்கலாம் அல்லது அணுகலாம். ஆனால் தொகுப்புகளை மேற்கொள்ள இயலாது. தடையின் போது ஒரு பயனர் அனைத்துப் பக்கங்களையும் தொகுக்க இயலாதவாறோ அல்லது குறிப்பிட்ட சில பக்கங்களைத் தொகுக்க இயலாதவாறோ அல்லது சில குறிப்பிட்ட பெயர்வெளிகளை அணுக இயலாதவாறோ தடுக்கப்படலாம் (உதாரணமாக: எவருடைய உரையாடல் பக்கத்தை மட்டும் தொகுக்க இயலாதவாறு தடைசெய்யப்படலாம்). விக்கிப்பீடியாவின் கொள்கைகள் ஆக்கப்பூர்வமற்ற தொகுப்புகளின் மூலம் பாதிக்கப்படும் போது தடை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு பயனர் தனது தடைக்காலம் முடிவடைந்த பிறகு வழக்கம்போல தொகுப்புகளை மேற்கொள்ளலாம்.

தடை என்பது தண்டனை அல்ல, மேற்கொண்டு ஆக்கப்பூர்வமற்ற தொகுத்தல் நடைபெறாதவாறு தடுப்பதாகும். தடையான பயனர் தான் தடைசெய்யப்பட்ட காரணத்தினைப் புரிந்துகொண்டு, தான் மேலும் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு முரணாக நடக்க மாட்டேன் என நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்து தடையினை நீக்கக் கோரலாம். எந்தவொரு பயனரும் விசமத் தொகுப்பு குறித்து தெரிவிக்கவோ, பயனர் கணக்கையோ, ஐபி முகவரியையோ தடுக்கக் கோரி நிர்வாகிகளை வேண்ட முடியும்.

நோக்கம் மற்றும் இலக்குகள்

தடை என்பது தண்டனையாக இருக்கக் கூடாது

பின்வரும் காரணங்களுக்காக தடை செய்யக்கூடாது,

  • பதிலடி கொடுக்க;
  • இகழ்வதற்காக;
  • தண்டிக்க; அல்லது
  • தற்போதைய நடத்தை பிரச்சினை இல்லை எனக் கருதும் சமயங்களில்.

தடை என்பது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • விக்கிப்பீடியாவின் கொள்கைகளை தொடர்ச்சியாக சேதப்படுத்தும் சமயங்களில் பாதுகாக்க
  • நாசவேலைகளைத் தடுக்க
  • விக்கிப்பீடியாவில் இணக்கமான தொகுத்தலை ஊக்குவிக்க

தடைக்கான பொதுவான காரணங்கள்

பின்வருவன தடைக்கான பொதுவான காரணங்களாகும்.

ஒரு பயனரை தடை செய்யலாமா என சந்தேகம் நேரும் சமயங்களில் அவர்களைத் தடை செய்வதற்குப் பதிலாக அவர்களிடம் தவறான தொகுப்பிற்கான காரணத்தை நிர்வாகிகள் கேட்கலாம், அல்லது மற்ற நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கலாம். நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் தகவல் இடுவதன் மூலம் மற்றவர்களின் கருத்தறிய வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு

  • தொடர்ச்சியான அல்லது கடுமையான தனிப்பட்ட தாக்குதல்கள்;
  • தனிப்பட்ட, தொழில்முறை அல்லது சட்டரீதியான அச்சுறுத்தல்கள் (விக்கிபீடியா தளத்திற்கு வெளியே இருந்தாலும்);
  • பயனர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்கள்;
  • குழந்தைகளின் பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடிய செயல்கள்;
  • மற்றவர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துதல் (தகவல் துல்லியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்);
  • தொடர்ச்சியான விக்கிப்பீடியா:பதிப்புரிமை மீறல்கள் ;
  • வாழும் நபர்களைப் பற்றிய அவதூறான தகவல்களின் தொடர்ச்சியான இடுகைகள்; அல்லது
  • ஒரு கணக்கு சமரசம் செய்யப்பட்டதாகத் தோன்றும் சமயங்களில் (அவசர நடவடிக்கையாக), அதாவது கணக்கைப் பதிவுசெய்த நபரைத் தவிர வேறு யாரோ கணக்கைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்புவதற்கு சில காரணங்கள்மிருக்கும் போது.

தடையினை நீக்கக் கோருதல்

தொகுப்பவர்கள், யாரேனும் தவறான முறையில் தடை செய்யப்பட்டிருந்தால் தங்களது உரையாடல் பக்கத்தில் விக்கிப்பீடியா:தடை மீதான மேல்முறையீடு எனும் வழிகாட்டல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நீக்கல் கோரிக்கை வைக்கலாம். உங்களது உரையாடல் பக்கமும் தடை செய்யப்பட்டிருப்பின் விக்கிப்பீடியா:தடை நீக்கல் நுழைவுச் சீட்டு அமைப்பு ‎எனும் பக்கத்தில் முறையிடலாம்.

Tags:

தடைக் கொள்கை நோக்கம் மற்றும் இலக்குகள்தடைக் கொள்கை தடைக்கான பொதுவான காரணங்கள்தடைக் கொள்கை தடையினை நீக்கக் கோருதல்தடைக் கொள்கைஉதவி:புகுபதிகைவிக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்விக்கிப்பீடியா:நிர்வாகிகள்விக்கிப்பீடியா:பயனர் அணுக்க நிலைகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)தமிழில் சிற்றிலக்கியங்கள்ம. கோ. இராமச்சந்திரன்மட்பாண்டம்புனித ஜார்ஜ் கோட்டைமத கஜ ராஜாபுணர்ச்சி (இலக்கணம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சி108 வைணவத் திருத்தலங்கள்தொலைக்காட்சிஅரண்மனை (திரைப்படம்)காடுஅண்ணாமலை குப்புசாமிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மலேரியாமுதற் பக்கம்சொல்தமிழ்நாடு காவல்துறைகடலோரக் கவிதைகள்கருத்தரிப்புகண்ணாடி விரியன்மீனம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஔவையார்பகவத் கீதைஜவகர்லால் நேருபுலிபாலின விகிதம்நுரையீரல் அழற்சிஇயற்கைஇராசேந்திர சோழன்மு. மேத்தாஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஆசாரக்கோவைபுற்றுநோய்இந்திய உச்ச நீதிமன்றம்பரணர், சங்ககாலம்மரகத நாணயம் (திரைப்படம்)குலசேகர ஆழ்வார்நிலாகாமராசர்மண்ணீரல்இந்திய தேசிய காங்கிரசுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்புறப்பொருள்தமிழ் மாதங்கள்காயத்ரி மந்திரம்இதயம்வாதுமைக் கொட்டைவண்ணார்காவிரி ஆறுஇயேசு காவியம்சென்னை சூப்பர் கிங்ஸ்நீர்நிலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஜெயம் ரவிவிருத்தாச்சலம்கரணம்பௌத்தம்அனுஷம் (பஞ்சாங்கம்)காளமேகம்சித்தர்கள் பட்டியல்கொடைக்கானல்சுற்றுச்சூழல் மாசுபாடுஆண்டு வட்டம் அட்டவணைஆழ்வார்கள்பள்ளிக்கூடம்செஞ்சிக் கோட்டைபனிக்குட நீர்வெண்குருதியணுகள்ளழகர் கோயில், மதுரைகேள்விஇந்து சமயம்சுற்றுலாஉலகம் சுற்றும் வாலிபன்சேரன் (திரைப்பட இயக்குநர்)அரிப்புத் தோலழற்சி🡆 More