தடை மீதான மேல்முறையீடு

 

அன்றாட நடவடிக்கைகளின் போது, விக்கிப்பீடியா நிர்வாகிகள், நாசவேலை மற்றும் பிற தகாத நடத்தைகளைக் குறைக்க அல்லது தடுக்க கணக்குகள் மற்றும் IP வரம்புகளைத் தடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தப் பக்கம் தடுக்கப்பட்ட பயனர்களுக்கு அவர்கள் ஏன் தடுக்கப்பட்டிருக்கலாம், மேலும் தடையை நீக்கக் கோருவது எப்படி என்பதை விளக்குகிறது.

நான் ஏன் தடைசெய்யப்பட்டேன்?

  • நீங்கள் உடனழிவினால் (collateral damage) தடைசெய்யப்பட்ட குற்றமற்ற பயனராக இருக்கலாம் நீங்கள் தற்செயலாக வேறு சில பயனர் தொகுதியால் பாதிக்கப்படுகிறீர்கள்.
  • மாறாக, உங்கள் கணக்கு அல்லது ஐபி விக்கிப்பீடியாவின் கொள்கைகளை கடுமையாக மீறியதற்கு (அல்லது கொள்கை மீறல் தொடர்புடையது) பொறுப்பாக இருந்ததாகத் தோன்றுவதால் தடுக்கப்பட்டிருக்கலாம்.

உங்கள் கணக்கு தவறுதலாக தடுக்கப்பட்டிருந்தால், சிக்கலை நிர்வாகிக்குத் தெரிவித்தவுடன், அது மிக விரைவாக தடை நீக்கப்படும். இல்லையெனில், மேல்முறையீட்டு செயல்முறை உள்ளது. உங்களது மேல்முறையீடு தொடர்பாக நிர்வாகிகள் மதிப்பாய்வு செய்வர். சில சந்தர்ப்பங்களில் தடுப்பதன் நோக்கம், அந்தச் சம்பவத்திலிருந்து பயனர் கற்றுக்கொள்வதையும், சிக்கல்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதையும் உறுதிசெய்வதாகும்.

பொதுவான கேள்விகள்

வினா 1:தடை என்றால் என்ன?

தடை என்பது ஒரு பயனர் கணக்கு, ஒரு IP முகவரி அல்லது IP முகவரிகளின் வரம்பை விக்கிப்பீடியாவை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தொகுப்பதனைத் தடுக்கிறது. தடுக்கப்பட்ட பயனர்கள் விக்கிப்பீடியாவில் எந்தக் கட்டுரையையும் அல்லது எந்தப் பக்கத்தையும் திறக்கலாம், வாசிக்கலாம் அல்லது அணுகலாம். ஆனால் தொகுப்புகளை மேற்கொள்ள இயலாது. தடையின் போது ஒரு பயனர் அனைத்துப் பக்கங்களையும் தொகுக்க இயலாதவாறோ அல்லது குறிப்பிட்ட சில பக்கங்களைத் தொகுக்க இயலாதவாறோ அல்லது சில குறிப்பிட்ட பெயர்வெளிகளை அணுக இயலாதவாறோ தடுக்கப்படலாம் (உதாரணமாக:எவருடைய உரையாடல் பக்கத்தை மட்டும் தொகுக்க இயலாதவாறு தடைசெய்யப்படலாம்). விக்கிப்பீடியாவின் கொள்கைகள் ஆக்கப்பூர்வமற்ற தொகுப்புகளின் மூலம் பாதிக்கப்படும் போது தடை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு பயனர் தனது தடைக்காலம் முடிவடைந்த பிறகு வழக்கம் போல தொகுப்புகளை மேற்கொள்ளலாம்.

2. என் தடை மீதான காரணத்தினை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

பதில்:விக்கிப்பீடியாவின் கொள்கைகளும் வழிகாட்டுதல்கள் பற்றிய புரிதல் இல்லாது அதனை நீங்கள் மீறியிருக்கலாம். உங்கள் தடைக்கான அறிவிப்பின் போது எந்த கொள்கை மீறலுக்காக நீங்கள் தடைசெய்யப்பட்டுள்ளீர்கள் என்பதை அதன் இணைப்புடன் நிர்வாகிகள் அறிவிப்பார்கள். அந்த இணைப்பைச் சொடுக்கி கவனமாக படித்து எந்த வகையில் நீங்கள் தவறான தொகுத்தலைச் செய்துள்ளீர்கள் என்பதனைப் புரிந்துகொள்ளலாம். அதனைப் படித்த பிறகும் புரியவில்லை எனில் தடை செய்த நிர்வாகிகளிடம் அதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். தடைநீக்கக் கோரிக்கையின் போது உதவி கேட்கவோ அல்லது கேள்விகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம். தடைக்கான காரணங்களை நீங்கள் புரிந்துகொண்ட பின்னரும், கோரிக்கையுடன் மேல்முறையீடு செய்யத் தயாராக இருக்கும் போதும் மட்டுமே விளக்கமளிக்கவும்.

வினா 3:தடையின் போது நான் புதியதாக ஒரு கணக்கை உருவாக்கி தடை நீக்கல் கோரிக்கையினை வைக்கலாமா? பெயரைக் குறிப்பிடாது அநோமதயத் தொகுப்புகளைச் செய்யலாமா?

விடை 3:

கூடாது. இந்த இரண்டில் எதையும் செய்யக் கூடாது. இதன் மூலம் தடைக் கொள்கையினை மீறியதாகக் கருதி மேலதிகத் தடைகளுக்கு உள்ளாகலாம். தடையான காலத்தில் உங்களது பழைய பயனர் பெயர் மற்றும் ஐபி முகவரியில் தான் நீக்கலுக்கான கோரிக்கையினை வைக்க வேண்டும். தடை நீக்கலுக்கான கோரிக்கையின்போது நீங்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவீர்கள். தடை நீக்கலின்போதான உங்களது விளக்கத்தின் போது இந்த விதி மீறல் நடந்ததற்கான காரணத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் நடைபெறாது என்பதை உளமாறக் கூற வேண்டியது அவசியமாகும்.

வினா 4: நான் தவறான தொகுப்புகள் ஏதும் செய்யவில்லையே! நான் ஏன் தடை செய்யப்பட்டேன். விளக்கம் கூறுங்கள்.

விடை 4: நீங்கள் பொதுவான பகிரப்பட்ட IP முகவரிகளை உள்ளடக்கிய ISP அல்லது வலை முடுக்கிகளைப் பயன்படுத்துகிறீர்களா? பொதுவான உதாரணங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள். இதில் ஒன்றைப் பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் உடனழிவினால் (collateral damage) தடைசெய்யப்பட்ட குற்றமற்ற பயனராக இருக்கலாம், நீங்கள் தற்செயலாக வேறு சில பயனர் தொகுதியால் பாதிக்கப்படுகிறீர்கள்

வினா 5:நான் எவ்வாறு தடை நீக்கல் கோரிக்கை வைப்பது?

விடை 5:

தடை நீக்கல் கோரிக்கை வைக்கப்படும்போது இந்தத் தடையில் ஈடுபடாத மற்ற நிர்வாகிகளால் இது குறித்த மீளாய்வு மற்றும் விவாதம் நடைபெறும். வழக்கமாக, உங்களது உரையாடல் பக்கத்தில் தடை நீக்கல் கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால், உங்களது உரையாடல் பக்கமும் தொகுக்க இயலாதவாறு தடைசெய்யப்பட்டால் நீங்கள் விக்கிப்பீடியா:தடை நீக்கல் நுழைவுச் சீட்டு அமைப்பு என்பதில் முறையிடலாம்.

தடைநீக்குவதற்கான பொதுவான தேவை என்னவென்றால், "நீங்கள் செய்தது இந்தத் தளத்திற்குப் பொருத்தமற்றது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா, மேலும் நீங்கள் அதை மீண்டும் செய்ய மாட்டீர்கள் என்று உங்களின் உறுதிமொழியைப் பெற முடியுமா?" என்ற கேள்விக்கு பதிலளிக்க இயலுமா என்பதுதான். தடை நீக்கல் காலத்திற்குப் பிறகும் முன்னர் செய்த அதே தவறுகளை மீண்டும் செய்தால் முன்பு தடை செய்யப்பட்ட காலத்தினை விட அதிகமான காலத்திற்குத் தடை செய்யப்படலாம்.

வினா 6:முடிவிலி நேரத் தடை என்றால் என்ன? அதை நீக்கக் கோருவது எப்படி?

விடை 6:முடிவிலி என்பது நிரந்தரத் தடை அல்ல. காலம் முடிவு செய்யப்படவில்லை என்பதேயாகும். எனவே நீங்களும் தடை நீக்கல் கோர்க்கையினை வைக்கலாம்.

தடை நீக்கல் கோரிக்கை

உங்களது உரையாடல் பக்கத்தில் தடை நீக்கல் கோரிக்கை வைக்க வேண்டும். ஆனால், உங்களது உரையாடல் பக்கமும் தொகுக்க இயலாதவாறு தடைசெய்யப்பட்டால் (தவறாகப் பேசுதல் போன்ற சமயங்களில்) நீங்கள் விக்கிப்பீடியா:தடை நீக்கல் நுழைவுச் சீட்டு அமைப்பு என்பதில் முறையிடலாம்.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஔவையார்உள்ளீடு/வெளியீடுரத்னம் (திரைப்படம்)காளமேகம்மயில்சேமிப்புஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்அக்கினி நட்சத்திரம்மாசாணியம்மன் கோயில்அணி இலக்கணம்பொருநராற்றுப்படைநவக்கிரகம்மதுரைக் காஞ்சிசீனிவாச இராமானுசன்அமலாக்க இயக்குனரகம்திதி, பஞ்சாங்கம்நான்மணிக்கடிகைஇரட்டைக்கிளவிபனைதிரு. வி. கலியாணசுந்தரனார்திருக்குறள்கண்டம்சித்திரைத் திருவிழாதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்குலசேகர ஆழ்வார்தமிழ் நீதி நூல்கள்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சிதம்பரம் நடராசர் கோயில்பறவைமஞ்சள் காமாலைதிருநங்கைஇந்திய தேசியக் கொடிவேற்றுமையுருபுஅரண்மனை (திரைப்படம்)விஸ்வகர்மா (சாதி)பிரேமம் (திரைப்படம்)தங்கராசு நடராசன்சிறுநீரகம்சாகித்திய அகாதமி விருதுதிருச்சிராப்பள்ளிஅம்பேத்கர்அறுபது ஆண்டுகள்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சுற்றுச்சூழல்பெரியபுராணம்இந்திய உச்ச நீதிமன்றம்கலிங்கத்துப்பரணிபஞ்சாங்கம்அன்னை தெரேசாபெரியாழ்வார்சிறுத்தைதமிழச்சி தங்கப்பாண்டியன்விசாகம் (பஞ்சாங்கம்)மீராபாய்நுரையீரல் அழற்சிஅகநானூறுஇந்து சமயம்பர்வத மலைந. பிச்சமூர்த்திசங்ககாலத் தமிழக நாணயவியல்இந்திரா காந்திமூலம் (நோய்)சயாம் மரண இரயில்பாதைஅறுபடைவீடுகள்வெட்சித் திணைமு. மேத்தாகுகேஷ்ராஜா ராணி (1956 திரைப்படம்)காமராசர்அதிமதுரம்இந்தியாவில் பாலினப் பாகுபாடுபுதுமைப்பித்தன்நீர் மாசுபாடுதிருமூலர்கலிப்பாஇரைச்சல்திராவிட மொழிக் குடும்பம்முன்னின்பம்🡆 More