கிட்டூர் சென்னம்மா

கிட்டூர் இராணி சென்னம்மா என்பவர் கிட்டூரின் இந்திய ராணி.

இந்திய நாட்டில் 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார்.

கிட்டூர் சென்னம்மா
ராணி சென்னம்மாவின் சிலை, பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில், பெல்காம் என்ற ராஜ்ஜியத்தில், கித்தூர் என்ற ஊரின் அரசரான முல்லசர்ஜா என்பவருடன் சென்னம்மாவுக்குத் திருமணம் நடந்தது. அவரது கணவர் 1816இல் இறந்து விட்டார். அவர்களது ஒரே மகனும் 1824இல் இறந்து விடவே, சென்னம்மா சிவலிங்கப்பா என்பவரைத் தன் மகனாக தத்து எடுத்துக் கொண்டு, அவருக்கே முடிசூட்டினார். ஆங்கிலேயர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆகவே, அவர்கள் சிவலிங்கப்பாவை நாடு கடத்த ஆணையிட்டார்கள். ராணி சென்னம்மா இந்த ஆணையை மதிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய போர் மூண்டது. ஆங்கிலேயர்களை மிகவும் துணிச்சலுடனும், தைரியத்துடனும், பெரும் ஆற்றலுடனும் எதிர்த்துப் போரிட்டாள், சென்னம்மா. ஆனால், அவர்களை எதிர்த்து அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல், அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பைல்ஹோங்கல் கோட்டையில் கைதியாக வைக்கப்பட்டாள். அங்கு 1829 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சென்னம்மாவின் மரணம் நேர்ந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த சென்னம்மா கர்நாடக மாநிலத்தில் ஒரு பெரும் வீராங்கனையாக இன்றும் போற்றப் படுகிறார்.

இதையும் பார்க்க‌

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

1778கிட்டூர் - கர்நாடகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நற்றிணைஉணவுகண்ணதாசன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)வராகிதிருமூலர்கேரளம்அந்தாதிமஞ்சும்மல் பாய்ஸ்சே குவேராமேலாண்மைஐந்திணைகளும் உரிப்பொருளும்திட்டம் இரண்டுதிரு. வி. கலியாணசுந்தரனார்திருவரங்கக் கலம்பகம்நிலக்கடலைஉலக சுகாதார அமைப்புமுகம்மது நபிதமிழ் மன்னர்களின் பட்டியல்ஜி. யு. போப்அயோத்தி தாசர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழக மக்களவைத் தொகுதிகள்முதலாம் உலகப் போர்தசாவதாரம் (இந்து சமயம்)நெசவுத் தொழில்நுட்பம்சைவ சமயம்திருச்சிராப்பள்ளிதைப்பொங்கல்கலித்தொகைமதீச பத்திரனவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வட்டாட்சியர்பித்தப்பைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்தண்டியலங்காரம்விண்டோசு எக்சு. பி.விருமாண்டிதன்னுடல் தாக்குநோய்அகத்திணைதமிழர் பண்பாடுவசுதைவ குடும்பகம்பிலிருபின்தமிழ்ப் புத்தாண்டுமுருகன்கிழவனும் கடலும்கொடுக்காய்ப்புளிகணம் (கணிதம்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபாசிசம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்நெல்கன்னி (சோதிடம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைநயினார் நாகேந்திரன்உப்புச் சத்தியாகிரகம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழர் நிலத்திணைகள்பறம்பு மலைஉலா (இலக்கியம்)ஓ காதல் கண்மணிதங்கராசு நடராசன்இந்திய தேசியக் கொடிமாதவிடாய்வேற்றுமையுருபுஇராபர்ட்டு கால்டுவெல்டிரைகிளிசரைடுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ர. பிரக்ஞானந்தாவிராட் கோலிநாயன்மார்வடிவேலு (நடிகர்)திரைப்படம்சீனிவாச இராமானுசன்ஆதலால் காதல் செய்வீர்குண்டலகேசி🡆 More