ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் (இறப்பு: சூலை 29, 2014) இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர்.

1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
பிறப்புமருதங்குளம், சிலாபம், இலங்கை
இறப்பு(2014-07-29)சூலை 29, 2014
சிலாபம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிஒலிபரப்பாளர்
பணியகம்இலங்கை வானொலி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
அறியப்படுவதுவானொலி அறிவிப்பாளர்
சமயம்இந்து
பெற்றோர்முத்தையா, பொன்னம்மாள்

வாழ்க்கைக் குறிப்பு

கனகரத்தினம் இலங்கையில் வடமேல் மாகாணத்தில் சிலாபம் அருகே உள்ள மருதங்குளம் என்ற ஊரில் முத்தையா, பொன்னம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடு அரசவம்சத்தை சேர்ந்தவர். கோட்டையை ஆண்ட காலியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரை பெயர். மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.

ஒலிபரப்புத் துறை

1960களின் ஆரம்பத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ஒரு அறிவிப்பாளராக சேர்ந்து கொண்டார். அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு, இதன் காரணமாக இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலிபரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். பொதிகைத் தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார். பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது ராஜகுரு சேனதிபதி என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள்

திரைப்படத் துறை

இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார்.

எழுதி வெளியிட்ட நூல்கள்

  • மனம் போன போக்கில் (1988)
  • மன்னருக்குக் கோபம் வந்தால்
  • கம்பரும் கவிஞரும்
  • என்தமிழ்

மறைவு

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 சூலை 29 இல் தனது 79வது அகவையில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் சிலாபத்தில் உள்ள காக்காப்பள்ளி என்ற ஊரில் எரியூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வாழ்க்கைக் குறிப்புராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் ஒலிபரப்புத் துறைராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் திரைப்படத் துறைராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதி வெளியிட்ட நூல்கள்ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் மறைவுராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் மேற்கோள்கள்ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் வெளி இணைப்புகள்ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்இலங்கைஇலங்கை வானொலிவடமேல் மாகாணம், இலங்கைவானொலி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மருது பாண்டியர்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இனியவை நாற்பதுகருத்தரிப்புதேனீஅவிட்டம் (பஞ்சாங்கம்)தொல்லியல்பிரீதி (யோகம்)சிறுபஞ்சமூலம்இந்திய தேசியக் கொடிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிபரணி (இலக்கியம்)உரிச்சொல்ஐராவதேசுவரர் கோயில்அகழ்வாய்வுசிவபெருமானின் பெயர் பட்டியல்ஏலாதிமாணிக்கம் தாகூர்வாழைப்பழம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024பத்துப்பாட்டுதிருமூலர்வைரமுத்துதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மு. க. ஸ்டாலின்உமறு இப்னு அல்-கத்தாப்மரகத நாணயம் (திரைப்படம்)பூலித்தேவன்கர்ணன் (மகாபாரதம்)வேற்றுமையுருபுநற்கருணை ஆராதனைபுதன் (கோள்)தமிழில் சிற்றிலக்கியங்கள்கொன்றை வேந்தன்அகத்தியமலைசென்னைமதுரைக் காஞ்சிமுத்துலட்சுமி ரெட்டிகணியன் பூங்குன்றனார்பர்வத மலைவெண்குருதியணுவிலங்குஇசுலாமிய நாட்காட்டிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்அரக்கோணம் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குதிரைவட்டார வளர்ச்சி அலுவலகம்திருமலை நாயக்கர்அகநானூறுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நெல்மண்ணீரல்அதிமதுரம்தஞ்சாவூர்தாயுமானவர்சேலம் மக்களவைத் தொகுதிவானொலிஉயிர்மெய் எழுத்துகள்திருமந்திரம்நீர் மாசுபாடுபனைசு. வெங்கடேசன்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்தொல்காப்பியம்சேரர்பிள்ளைத்தமிழ்இந்திய ரூபாய்வினையெச்சம்துரைமுருகன்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசுடலை மாடன்தட்டம்மைஅருந்ததியர்தமிழ் இலக்கியம்சுற்றுச்சூழல்🡆 More