யூர்ட்

யூர்ட் (Yurt) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் மாற்றி அமைக்கத்தக்க ஒரு வகை உறையுள் (வீடு) ஆகும்.

இது நடு ஆசியா மற்றும் மங்கோலியாவில் உள்ள ஸ்டெப்பிப் புல்வெளிகளில் வாழும் நாடோடி மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.

யூர்ட்
Uzbek துர்க்கிஸ்தானில் உள்ள ஒரு யூர்ட். 1913 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட படம்.

சொற்பொருள்

யூர்ட் என்னும் சொல் தொடக்கத்தில் துர்க்கிக் மொழியிலிருந்து பெறப்பட்டது. அம்மொழியில் இச்சொல், தாய்நிலம் (homeland) என்ற தொனியில், குடியிருக்கும் இடம் (dwelling place) எனப் பொருள்படும். ரஷ்யாவில் இது யூர்ட்டா என அழைக்கப்பட்டது. ரஷ்ய மொழியிலிருந்து இச்சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.

அமைப்பு

மரத் தண்டுகளிலாலான வட்ட வடிவமான சட்டகத்தின் மேல், செம்மறி ஆட்டு உரோமத்திலிருந்து செய்யப்படும் ஒரு வகைத் துணியால் போர்த்தி இவ்வகை வீடுகளை அமைக்கிறார்கள். இவ்வினத்தவர் மேய்ப்பர்கள் ஆதலால் செம்மறி ஆடுகளின் உரோமம் இவர்களுக்கு இலகுவில் கிடைக்கத்தக்க ஒரு பொருளாகும். ஆனால், இதற்குத் தேவையான மரத்தை, இவர்கள் வாழும் மரங்களற்ற புல்வெளிகளில் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால், இவர்களின் வாழிடங்களுக்குக் கீழ்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள்.

வீட்டுக்கான சட்டகம், ஒன்று அல்லது இரண்டு சாளர அமைப்பு, கதவு நிலை, கூரைக்கான வளைகள், ஒரு முடி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில வகை யூர்ட் களில், முடியைத் தாங்குவதற்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையான தூண்களும் அமைந்திருப்பது உண்டு. சட்டகத்தின் மீது பல துண்டுகளாக இருக்கும் கம்பளி வகைத் துணியைப் போர்த்துவர். இதன் மேல் சில சமயங்களில், கிடைப்பதைப் பொறுத்து, கான்வஸ் துணியாலும் போர்த்தப்படும். கயிறுகளைப் பயன்படுத்திச் சட்டகத்தை உறுதியாக ஆக்குவர். அமைப்பு, மேலே போர்த்தப்பட்டுள்ள துணியின் பாரத்தால் நிலத்தில் உறுதியாக இருக்கிறது. தேவை ஏற்பட்டால், கூரையின் மையப்பகுதியில் இருந்து பாரமான வேறு பொருட்களைத் தொங்க விடுவதும் உண்டு. யூர்ட்டின் அளவு, நிறை, கூரை மரங்களின் அமைப்பு என்பன இடத்துக்கிடம் வேறுபடுவதையும் காணலாம்.

மேற்கோள்கள்

Tags:

நடு ஆசியாநாடோடிமங்கோலியாஸ்டெப்பிப் புல்வெளிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடழிப்புகருக்காலம்இலக்கியம்ஆற்றுப்படைதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முகம்மது நபிவிபுலாநந்தர்திருவள்ளுவர்குருதிச்சோகைஇந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்முத்தரையர்சிங்கம் (திரைப்படம்)வாசுகி (பாம்பு)மஞ்சும்மல் பாய்ஸ்சங்கம் (முச்சங்கம்)பருவ காலம்மதுரைக்காஞ்சிபஞ்சபூதத் தலங்கள்சிந்துவெளி நாகரிகம்திருமலை நாயக்கர் அரண்மனைசுபாஷ் சந்திர போஸ்சுவாதி (பஞ்சாங்கம்)முக்குலத்தோர்விசயகாந்துபெரியாழ்வார்பதிற்றுப்பத்துயானைமோகன்தாசு கரம்சந்த் காந்திமு. க. ஸ்டாலின்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சீர் (யாப்பிலக்கணம்)அரவான்மரகத நாணயம் (திரைப்படம்)செவ்வாய் (கோள்)உமறுப் புலவர்பட்டினப் பாலைநிணநீர்க் குழியம்சூரியக் குடும்பம்பெண்ணியம்கன்னியாகுமரி மாவட்டம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்விஸ்வகர்மா (சாதி)மயங்கொலிச் சொற்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இலங்கைபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்வேலுப்பிள்ளை பிரபாகரன்திருநாவுக்கரசு நாயனார்இந்தியப் பிரதமர்தூது (பாட்டியல்)தொல். திருமாவளவன்செக்ஸ் டேப்கமல்ஹாசன்முடியரசன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்வீரமாமுனிவர்சிட்டுக்குருவிஇந்தியாமக்களாட்சிசே குவேராஉயிர்மெய் எழுத்துகள்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்இந்திய நிதி ஆணையம்சார்பெழுத்துதிரைப்படம்பணவீக்கம்வெ. இறையன்புசெயற்கை மழைவரலாறுபஞ்சதந்திரம் (திரைப்படம்)சுயமரியாதை இயக்கம்தெலுங்கு மொழியூடியூப்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்வெந்து தணிந்தது காடுமின்னஞ்சல்🡆 More