மேளம்

மேளம் (Melam) என்பது தமிழகம், கேரளா மற்றும் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பயன்படுத்தப்படும் தனித்துவமான ஒரு வகை தாள இசைக்கருவியாகும்.

மத்தளம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. மேளத்தை இசைக்கும் கலைஞர் மேளக்காரர் எனப்படுகிறார் . பண்டைய தமிழகத்தில் கோயில்களில் நடைபெறும் அனைத்து சிறப்பு நிகழ்வுகளுக்கும் மேள இசை பயன்படுத்தப்பட்டது. கோவில் மேளம், நையாண்டி மேளம் , உறுமி மேளம் போன்றவை சில வகை மேள இசை வகைகளாகும். திருமண விழாக்களில் கெட்டி மேளமும் , மரண சடங்குகளில் பறை இசையும் இசைக்கப்படுகிறது. கேரளாவில் இசைக்கப்படும் அனைத்து மேள இசைகளிலும் மிகவும் பாரம்பரியமானது பாண்டி மேளம் ஆகும். இது பொதுவாக கோவிலுக்கு வெளியே இசைக்கப்படுகிறது. பஞ்சரி மேளம் என்று அழைக்கப்படும் மற்றொரு வகை மேளம் பாண்டி மேளம் போன்றது என்றாலும் இது கோவிலுக்குள் இசைக்கப்படுகிறது.

வரலாறு

தமிழ் மக்கள் பயன்படுத்தும் இசைக் கருவிகளின் பட்டியலில் ஒன்றாக மேளம் காணப்படுகிறது. திருமுறை இப்பட்டியலை அளிக்கிறது .


மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத்

எட்டாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் பாடப்பட்ட நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள நாச்சியார் திருமொழி என்ற ஆண்டாள் பாசுரமே மேளம் என்பதாகவும் கூறப்படுகிறது .


மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

மத்தளம் இசைக்க, வரிசையாக நின்ற சங்குகள் ஊதப்பட, முத்துச்சரங்கள் தொங்கும் விதானத்தின் கீழ் நம் இறைவனும் உறவினருமான மதுசூதணன் என் கையை அவர் கைகளில் பற்றிக்கொள்வது போல கனா கண்டேனடி தோழி என்பது இப்பாடலின் பொருளாகும். '

இறைவன் கண்ண்ணுடன் தனக்குத் திருமணம் நடைபெறுவது போன்ற கனவு வந்ததை தலைவி தோழிக்கு விளக்குவதாக அமைந்துள்ளது இப்பாடல். திருமண மண்டபத்தின் அலங்காரம், ஊர்வலம்,, இசைக்கப்பட்ட இசைக்கருவிகள் போன்றவை பாடலில் விளக்கப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

உறுமி மேளம்கேரளாதமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் நெசவுக்கலைஅறிவியல்ஞானபீட விருதுவெண்குருதியணுமுடக்கு வாதம்நாயன்மார்கருப்பைசீவக சிந்தாமணிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்ஜன கண மனபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழக மக்களவைத் தொகுதிகள்இஸ்ரேல்மருதமலைஇட்லர்வானிலைமக்களாட்சிசு. வெங்கடேசன்குருதிச்சோகைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019திருவள்ளூர் மக்களவைத் தொகுதிவிஜயநகரப் பேரரசுவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நெல்வடிவேலு (நடிகர்)மூசாவைரமுத்துபுணர்ச்சி (இலக்கணம்)மீரா சோப்ராசுற்றுச்சூழல் பாதுகாப்புஅகத்தியமலைஇந்திபழனி முருகன் கோவில்பிள்ளையார்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திதி, பஞ்சாங்கம்தூத்துக்குடி மக்களவைத் தொகுதிமுதலாம் இராஜராஜ சோழன்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்வால்ட் டிஸ்னிஅரபு மொழிதமிழ்த்தாய் வாழ்த்துஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சுடலை மாடன்அறுபடைவீடுகள்நாமக்கல் மக்களவைத் தொகுதிசிவனின் 108 திருநாமங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்காடைக்கண்ணிநாடார்உருசியாஆறுமுக நாவலர்சிலம்பம்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சிவம் துபேஹிஜ்ரத்வல்லினம் மிகும் இடங்கள்பசுபதி பாண்டியன்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்தமிழ்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இரசினிகாந்து108 வைணவத் திருத்தலங்கள்சுக்ராச்சாரியார்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஇந்திய அரசியலமைப்புஹர்திக் பாண்டியாசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்மேழம் (இராசி)பெரும் இன அழிப்புஇயற்கை வளம்பஞ்சபூதத் தலங்கள்போயர்திருமுருகாற்றுப்படைமரபுச்சொற்கள்பூட்டுநீக்ரோ🡆 More