முக்தா கோட்சே: இந்திய நடிகர்

முக்தா வீரா கோட்சே ( Mugdha Veira Godse ) (பிறப்பு: ஜூலை 26, 1986) ஓர் இந்திய நடிகையும் மற்றும் வடிவழகியுமாவர்.

மதுர் பண்டார்கரின் 2008 திரைப்படமான பேஷன் என்ற திரைப்படத்தில் இவர் நடிகையாக அறிமுகமானார். மராத்தி பால் பட்டே புதே என்ற மராத்தி உண்மைநிலை நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமான தனி ஒருவன் படத்திலும் நடித்துள்ளார்.

முக்தா கோட்சே
முக்தா கோட்சே: ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில், திரைப்பட வாழ்க்கை, மேற்கோள்கள்
2018இல் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் முக்தா கோட்சே
பிறப்புமுக்தா வீரா கோட்சே
26 சூலை 1986 (1986-07-26) (அகவை 37)
புனே, மகாராட்டிரம், இந்தியா
பணிவடிவழகி, நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–தற்போது வரை

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்

முக்தா கோட்சே: ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில், திரைப்பட வாழ்க்கை, மேற்கோள்கள் 
ஒரு அழகிப் போட்டியில் முக்தா கோட்சே

முக்தா கோட்சே 26 ஜூலை 1986 அன்று புனேவில் ஒரு சிறிய நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். புனேவில் உள்ள நூதன் மராத்தி வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர்,தனது இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை புனேவில் உள்ள மராத்வாடா மித்ரா மண்டல் வணிகக் கல்லூரியில் முடித்தார். இவரது ஆரம்ப நாட்களில், முக்தா எண்ணெய் விற்று ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே சம்பாதித்தார். பின்னர் இவர் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார். மேலும், உள்ளூர் அழகுப் போட்டிகளில் பங்கேற்றார். 2002 இல், இவர் கிளாட்ராக்ஸ் மெகா மாடல் ஹன்ட் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வென்றார். 2004 ஆம் ஆண்டில், இந்தியாவின் மிகப்பெரிய வடிவழகிப் போட்டியான பெமினா மிஸ் இந்தியா என்பதில் முக்தா பங்கேற்றார்.அதில் இவர் அரையிறுதிக்கு வந்து மிஸ் பெர்பெக்ட் டென் பட்டத்தை வென்றார். பின்னர் மும்பை சென்று விளம்பரங்களில் தோன்றினார்.

சாருக் கானுடன் சேர்ந்து பாரதி ஏர்டெல் லிமிடெட் விளம்பரம் மற்றும் குளோஸ்-அப் பற்பசை விளம்பரம் ஆகியவற்றிலும் தோன்றியுள்ளார். பத்திரிகை விளம்பரங்கள், இசைக் காணொளிகள், விளம்பரங்கள் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச நடையழகு நிகழ்சிகளில் நடப்பது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். மதுர் பண்டார்கர் இயக்கியிருந்த ஃபேஷன் என்ற பாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் மற்றும் அர்பாஸ் கான் ஆகியோருடன் நடித்ருந்தார்.

சி லிமிட்டட் என்ற நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் ஆலண்டியா யோகர்ட் விளம்பரத்திலும் இவர் தோன்றினார். சந்தீப் மர்வாவா என்ற தொழிலதிபர் நடத்தி வரும் ஆசியத் திரைப்பட & தொலைக்காட்சி அகாதமியின் 8வது சர்வதேச திரைப்பட & தொலைக்காட்சி விருது சமீபத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.

திரைப்பட வாழ்க்கை

கோட்சே ஃபேஷன் (2008) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பிரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார் மற்றும் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான அப்சரா விருதை வென்றார்.

2009 ஆம் ஆண்டில், ஆல் தி பெஸ்ட் மற்றும் ஜெயில் ஆகிய இரண்டு படங்களில் முக்தா கோட்சே தோன்றினார். பாபி தியோலுக்கு இணையாக நடித்த ஹெல்ப், 13 ஆகஸ்ட் 2010 அன்று வெளியிடப்பட்டது. கலி கலி சோர் ஹை திரைப்படம் பிப்ரவரி 2012 இல் வெளியானது. வில் யூ மெரி மீ? மார்ச் 2012 இல் வெளியிடப்பட்டது. பவர் கப்பிள் உண்மைநிலை நிகழ்ச்சியில் கோட்சே மற்றும் இவரது காதலன் ராகுல் தேவ் இருவரும் கலந்து கொண்டனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

முக்தா கோட்சே ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்முக்தா கோட்சே திரைப்பட வாழ்க்கைமுக்தா கோட்சே மேற்கோள்கள்முக்தா கோட்சே வெளி இணைப்புகள்முக்தா கோட்சேஇந்திஉண்மைநிலை நிகழ்ச்சிதனி ஒருவன்தமிழ்வடிவழகர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மலையாளம்விண்ணைத்தாண்டி வருவாயாமருதம் (திணை)கல்வெட்டுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஆண்டு வட்டம் அட்டவணைதமிழிசை சௌந்தரராஜன்தொலைக்காட்சிசேரன் (திரைப்பட இயக்குநர்)சைவத் திருமுறைகள்மருதமலை முருகன் கோயில்முத்துராஜாஉலா (இலக்கியம்)நற்றிணைசுந்தரமூர்த்தி நாயனார்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பட்டினப் பாலைநான் அவனில்லை (2007 திரைப்படம்)பனிக்குட நீர்பொன்னுக்கு வீங்கிதமிழ்த் தேசியம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்சோழர்நான் வாழவைப்பேன்மாதேசுவரன் மலைசித்திரகுப்தர் கோயில்கூகுள்வீரமாமுனிவர்வினைச்சொல்புதுக்கவிதைஇந்தியத் தேர்தல் ஆணையம்திருமூலர்கருப்பைபள்ளர்மகேந்திரசிங் தோனிபருவ காலம்மென்பொருள்திருத்தணி முருகன் கோயில்யூடியூப்பெண்ணியம்அரண்மனை (திரைப்படம்)சிவபுராணம்நீர் மாசுபாடுஅறுவகைப் பெயர்ச்சொற்கள்நிலாஆவாரைஸ்ரீஆசாரக்கோவைதசாவதாரம் (இந்து சமயம்)சரத்குமார்கணியன் பூங்குன்றனார்கடவுள்வீட்டுக்கு வீடு வாசப்படிசி. விஜயதரணிதிருநாவுக்கரசு நாயனார்தளபதி (திரைப்படம்)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கருச்சிதைவுஅன்னை தெரேசாநன்னூல்இந்தியக் குடியரசுத் தலைவர்ஐம்பெருங் காப்பியங்கள்மறவர் (இனக் குழுமம்)பொது ஊழிமனோன்மணீயம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருவோணம் (பஞ்சாங்கம்)வாரணம் ஆயிரம் (திரைப்படம்)திருமந்திரம்பல்லவர்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇந்து சமயம்கரிகால் சோழன்மாமல்லபுரம்108 வைணவத் திருத்தலங்கள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)நுரையீரல் அழற்சி🡆 More