மாரியோ பார்க்காசு யோசா

மாரியோ பார்க்காசு யோசா (எசுப்பானிய ஒலிப்பு: , ஆங்கிலம்: Mario Vargas Llosa, பி.

மார்ச் 28, 1936) ஒரு பெருவிய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் இதழாளர். 2010ம் ஆண்டிற்கான இலக்கிய நோபெல் பரிசினை வென்றவர். யோசா, இலத்தீன் அமெரிக்காவின் (தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின்) முதன்மையான எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

மாரியோ பார்காசு யோசா
Mario Vargas Llosa
மாரியோ பார்க்காசு யோசா
பிறப்புஃகோர்கே மரியோ பெட்ரோ பார்க்காசு யோசா
மார்ச்சு 28, 1936 (1936-03-28) (அகவை 88)
அரேக்கிப்பா, பெரு
தேசியம்பெரு, எசுப்பானியா
கல்வி நிலையம்சான் மார்கோசு தேசியப் பல்கலைக்கழகம்
மாட்ரிட் காம்புளுடென்சு பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்2010 இலக்கிய நோபெல் பரிசு
துணைவர்ஃகூலியா உர்குவிடி (1955–1964)
பேட்ரீசியா யோசா (1965–தற்காலம் வரை)
பிள்ளைகள்ஆல்வேரோ
கொன்சாலோ
மார்கனா
கையொப்பம்
மாரியோ பார்க்காசு யோசா
இணையதளம்
http://www.mvargasllosa.com

எசுப்பானிய மொழியில் எழுதும் யோசா 1960களில் நாய்களின் நகரம் எனப் பொருள் படும் எசுப்பானிய மொழிப் புதினம் La ciudad y los perros (ல சியுடாடு இ லொசு பெர்ரொசு) என்பதை 1963 இல் எழுதினார். இது ஆங்கிலத்தில் தி டைம் ஆஃப் தி ஃகீரோ (The Time of the Hero) என அறியப்படுகின்றது. 1965 இல் பச்சை வீடு எனப்பொருள்படும் ல காசா பெர்டே (La Casa Verde, ஆங்கிலத்தில் தி கிரீன் ஃகவுசு The Green House) என்னும் புதினத்தை எழுதினார். பெரு நாட்டின் தனிவல்லாட்சியர் (சர்வாதிகாரி) மானுவேல் ஏ. ஓதிரியா (Manuel A. Odría) என்பாரின் ஆட்சியை அடிப்படையாக கொண்டு 1969 இல் வரைந்த கான்வர்சேசியோன் என் ல கத்தேடரல் (Conversación en la catedral) (ஆங்கிலத்தில் கன்வர்சேசன் இன் தி கத்தீடரல் Conversation in the Cathedral) என்னும் புதினம் போன்ற பற்பல எழுத்துகளின் வழி புகழ் எய்தினார். நகைச்சுவை புதினங்கள், துப்பறியும் புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், பரபரப்பூட்டும் அரசியல் புதினங்கள் என பலவகைப்பட்ட புனைவுப் படைப்புகளை எழுதியுள்ளார். இவரது பல படைப்புகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்ட லோசா 1990ம் ஆண்டு பெரு நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993ம் ஆண்டு எசுப்பானியா நாட்டுக் குடியுரிமையைப் பெற்ற இவர் தற்போது இலண்டன் (ஐக்கிய இராச்சியம்) நகரில் வசித்து வருகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இலத்தீன் அமெரிக்காஎசுப்பானியம்நோபெல் பரிசுபெரு

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்வசுதைவ குடும்பகம்சேக்கிழார்நிதிச் சேவைகள்சிறுத்தைசயாம் மரண இரயில்பாதைதொலைபேசிநம்மாழ்வார் (ஆழ்வார்)சுந்தர காண்டம்பாரிகல்விஇயற்கை வளம்திராவிட இயக்கம்இசுலாமிய வரலாறுபொன்னுக்கு வீங்கிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்வாணிதாசன்மருதமலைதமிழ்த் தேசியம்சப்தகன்னியர்மங்கலதேவி கண்ணகி கோவில்தேர்தல்தாவரம்முக்குலத்தோர்தசாவதாரம் (இந்து சமயம்)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இனியவை நாற்பதுதிருவாசகம்தமிழிசை சௌந்தரராஜன்அரிப்புத் தோலழற்சிதேவேந்திரகுல வேளாளர்இந்திய அரசியலமைப்புதமிழக மக்களவைத் தொகுதிகள்கிறிஸ்தவம்பாரதிதாசன்ஆயுள் தண்டனைபோக்குவரத்துநிணநீர்க் குழியம்செக் மொழிதன்யா இரவிச்சந்திரன்பழமுதிர்சோலை முருகன் கோயில்பூக்கள் பட்டியல்டி. என். ஏ.மலைபடுகடாம்கருச்சிதைவுசுற்றுலாகோவிட்-19 பெருந்தொற்றுமாசிபத்திரிகேரளம்வயாகராமுதுமொழிக்காஞ்சி (நூல்)வேற்றுமையுருபுசிவபெருமானின் பெயர் பட்டியல்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)அருந்ததியர்விநாயகர் அகவல்முதலாம் இராஜராஜ சோழன்கேள்விவேதம்அறிவுசார் சொத்துரிமை நாள்தமன்னா பாட்டியாவாட்சப்இமயமலைஇந்திய இரயில்வேகட்டுரைதமிழ்த்தாய் வாழ்த்துசைவத் திருமுறைகள்வெண்பாபயில்வான் ரங்கநாதன்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்சிவாஜி கணேசன்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கம்பராமாயணம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சித்திரைத் திருவிழாகள்ளுஇயேசுயானையின் தமிழ்ப்பெயர்கள்🡆 More