பொதுச் சட்டம்

muruganபொதுச் சட்டம் (common law), அல்லது வழக்குச் சட்டம் அல்லது முன்காட்டு) என்பது சட்டமன்றங்களால் இயற்றப்படாமலும் அரசாணைகளால் கட்டுப்படுத்தபடாதும் நீதிமன்றங்களின் அல்லது அவை போன்ற ஆணையங்களின் சட்டக் கருத்துக்கள் மற்றும் தீர்ப்புகளிலிருந்து நீதிபதிகள் வரையறுக்கும் சட்டம் ஆகும்.

ஓர் "பொது சட்ட அமைப்பு" என்பது பொதுச் சட்டத்திற்கும் முன்காட்டுக்கும் கூடுதலான மதிப்பு வழங்கும் சட்டபூர்வ முறைமையாகும், ஒரே சிக்கலுக்கு வெவ்வேறு நேரங்களில் இருவித தீர்வுகள் அமைவது நீதியல்ல என்ற கொள்கையின்படி இந்த முறைமை இயல்பாக வளர்ந்துள்ளது. முன்காட்டின் உரையே பொதுச் சட்டம் எனப்படுகிறது; இதுவே அனைத்து எதிர்கால தீர்ப்புகளையும் பிணைக்கிறது.

பொதுச் சட்ட நீதிமன்றங்களில் முந்தைய வழக்குகளில் எடுக்கப்பட்ட தீர்ப்புகள் கவனிக்கப்படுகின்றன. இதே போன்ற ஒரு சிக்கலுக்கானத் தீர்வு முன்பே வழங்கப்பட்டிருந்தால் அதே தீர்வை பின்பற்றுவது நீதிமன்றத்திற்கு கட்டாயமாகிறது. இருப்பினும் தற்போதைய பிணக்கு முந்தைய வழக்குகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபட்டிருப்பதாக நீதிமன்றம் கருதுமேயானால் (சட்ட வழக்காடலில் முதல் தாக்கம்) நீதிபதிகளுக்கு முன்காட்டியை நிறுவவும் பொதுச் சட்டம் இயற்றவும் ஆதிகாரமும் கடமையும் உண்டு. இதன்பிறகு இந்த தீர்ப்பு முன்காட்டியாக எதிர்கால நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.

பின்னணி

பொதுச் சட்டம் ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் குடியேற்றங்களாக இருந்த நாடுகளில், ஐக்கிய அமெரிக்கா உட்பட, கடைபிடிக்கப்படுகிறது. வேறு பல நாடுகள் குடியியல் சட்டம் எனப்படும் சட்டமன்றங்களால் ஆக்கப்பட்ட சட்டங்களே செல்லுபடியாகும் முறைமையை பின்பற்றுகின்றன. பொதுச் சட்ட நாடுகளில் குடியியல் சட்ட நாடுகளில் இருப்பதை விட நீதிமன்றங்களுக்கு கூடுதலாக அதிகாரம் கொண்டுள்ளன

இங்கிலாந்தில் நீதிமன்றங்கள் முடிவுகள் எடுக்க மரபு, வழக்கம் மற்றும் முன்காட்டு இவற்றின் துணையை நாடியதிலிருந்து பொதுச்சட்டம் உருவாகத் துவங்கியது. முன்காட்டு என்பது கடந்தகாலத்தில் வேறொரு நீதிமன்றம் எடுத்த முடிவாகும். முந்தைய நீதிமன்றங்களின் தீர்ப்புகளிலிருந்து மக்களுக்கு வியப்பளிக்காத, அதே நேரம் மற்ற சட்டங்களுக்குட்பட்ட, தீர்ப்பை அடைய பொதுச் சட்ட நீதிமன்றங்கள் முயலுகின்றன.

பொதுச் சட்ட நாடுகளில் வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் சட்டம் என்ன என்பதுடன் பிற நீதிமன்றங்கள் என்ன கூறியுள்ளன என்றும் ஆராய்கிறார்கள். ஒரு நீதிமன்றம் ஒரு வழக்கை முடிவு செய்கையில் தனது தீர்ப்பை வழங்குகிறது அல்லது சட்டம் குறித்தக் கருத்தை பதிகிறது. இந்தத் தீர்ப்பு அல்லது சட்டக்கருத்து அந்த நீதிமன்றம் எவ்வாறு தனது முடிவை எட்டியது என்பதை விளக்குகிறது. இந்த விளக்கமும் கருத்துமே பிற நீதிமன்றங்களுக்கு இதேபோன்ற வழக்குகளைத் தீர்மானிக்க வழிகாட்டுதலாக அமைகிறது. இந்த வழக்கு ஒரு முன்காட்டியை நிறுவுகிறது. முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வழக்கமாக கீழ் நீதிமன்றங்கள் இதேபோன்ற அல்லது ஒருமித்த ஒரு வழக்கை எவ்வாறு தீர்மானிக்க வேண்டும் என்பதை கூறுகின்றன. இந்த முன்காட்டுகள் கட்டாயமானவையாக கருதப்படுகின்றன. வழக்கின் தரவுகள் வேறுபட்டிருந்தாலும் இந்த முன்காட்டின் அலசல் வற்புறுத்தலாக கருதப்படுகிறது.

பொதுச் சட்ட நாடுகளில் முன்காட்டு பின்பற்றப்பட்டாலும் சட்டமன்றமாக்கிய சட்டம் முன்னுரிமை கொள்கிறது. ஒரு வழக்கில் இவை இரண்டும் வேறுபட்டால் நீதிமன்றங்கள் வழக்கமாக சட்டமன்ற சட்டத்தினையே பின்பற்றும்.

இன்றைய பொது சட்ட அமைப்புகள்

பொதுவான சட்டமானது அந்தந்த நடுக்களின் சட்ட அமைப்புகள் அடிப்படையில் அமையும்.மேலும் பெரும்பாலான நாடுகளில் சட்டங்கள் அந்தாத நாடுகளின் காலனி ஆதிக்கத்தில் வைத்திருந்த நாடுகளின் சட்டத்தை ஒத்திருகிறது.மேலும் சில நாடுகளின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிறிது வேறுபட்ட சட்டங்களையும் கொண்டுள்ளது.எடுத்துக்கட்டாக இந்தியாவில் பிரித்தானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் இருக்கும் சட்டமும் போர்ச்சுக்கீசிய காலனி ஆதிக்கத்தில் இருந்த கோவாவிலும் சட்டங்கள் வேறுபட்டிருக்கின்றது.எனினும் சில இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டத்தை ஒத்தும் அமைக்கப்பட்டிகின்றது.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து நாட்டில் பெரும்பாலும் சிவில் சட்டத்தை அடிப்படையாகவே கொண்டே அமைக்கப்பட்டிருக்கிறது.1707 ல் இங்கிலாந்து ஒன்றியத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு நீண்ட கால உடன்படிக்கை மூலம் சட்டவரையரை மூலம் ஏற்படுத்தப்பட்டது.இது இயற்கை நீதி மற்றும் நேர்மை கொள்கைகளை நியாயப்படுத்தி சட்டங்கள் உருவாக்கப்பட்டது.இந்த பன்மைவாத சட்ட அமைப்புகள் கியூபெக், லூசியானா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் இயங்குகின்றன.

அமெரிக்காவின் மாநிலங்களில் (1600)

நியூயார்க் (1600)

இம்மாகாணத்தில் டச்சு காலனித்துவ நாட்களில் ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை அடிப்படையாக கொண்டது.அதற்கு அடுத்து இங்கிலாந் காலனி ஆதிக்கத்தின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட சட்டங்களையும் ஒன்றிணைத்து பொதுவாக உருவாக்கப்பட்டது.

லூசியானா

இப்பகுதியில் முதலில் ரோமானிய சட்டங்களை அடிப்படையாக சட்டங்கள் நடைமுறையில் இருந்தது.அதன் பின்னர் பிரெஞ்சு குடியேற்றங்களால் 1804 1804 ல் லூசியானா கைப்பற்றபட்ட பின்னர் நெப்போலிய சட்டங்களை அடிப்படையாக கொண்டது.இங்கு பெண்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள் அதிகமாக கொடுக்கப்பட்டன

கலிபோர்னியா (1850)

கலிபோர்னியாவில் அமெரிக்க மாநில பொது சட்டத்தின் அடிப்படையிலான அமைப்பை கொண்டிருக்கிறது.19 ஆவது நூற்றாண்டின் ஆரம்பத்தில் இசுபானிய சட்டப்படி அமைந்திருந்தாலும் அதன் பின்னர் பொதுவான அமெரிக்க சட்டத்தின் படி மாற்றப்பட்டது

இந்தியா (19 ஆம் நூற்றாண்டு மற்றும் 1948)

இந்திய அரசியலமைப்பு 395 கட்டுரைகள் , 12 அட்டவணை , பல திருத்தங்களை மற்றும் 117.369 வார்த்தைகள் கொண்டஒரு நாட்டின் மிக நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்பாக உள்ளது. இந்திய சட்டம் பெரும்பாலும் பிரித்தானிய காலனித்துவ ஆங்கில பொது சட்டதை அடிப்படையாக கொண்டது . 1857 இல் ஏற்பட்ட கலகத்திற்கு அடுத்து இது இயற்றப்பட்டது.அதன் பின்னர் சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டின் மக்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது.இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சமயத்திற்கும் ஏற்ப மறு படுகின்றது.எனினும் கோவாவில் மட்டும் அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான உரிமைகளை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

மேலும் அறிய

வெளி இணைப்புகள்


Tags:

பொதுச் சட்டம் பின்னணிபொதுச் சட்டம் இன்றைய பொது சட்ட அமைப்புகள்பொதுச் சட்டம் மேற்கோள்கள்பொதுச் சட்டம் மேலும் அறியபொதுச் சட்டம் வெளி இணைப்புகள்பொதுச் சட்டம்சட்டம்நீதிமன்றம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வல்லினம் மிகும் இடங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துஅறுபது ஆண்டுகள்ஆண் தமிழ்ப் பெயர்கள்இசுலாமிய வரலாறுசிறுகதைபால்வினை நோய்கள்காம சூத்திரம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்வில்லங்க சான்றிதழ்நிணநீர்க்கணுபயில்வான் ரங்கநாதன்இந்திய மொழிகள்பொருநராற்றுப்படைநெகிழிஒட்டுண்ணி வாழ்வுகுலசேகர ஆழ்வார்பட்டினத்தார் (புலவர்)செவ்வாய் (கோள்)நயன்தாராதமிழர் கலைகள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)இயோசிநாடிகரிசலாங்கண்ணிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்டிரைகிளிசரைடுஇசுலாத்தின் புனித நூல்கள்வணிகம்வறுமைஇரசினிகாந்துதமிழ் இலக்கணம்கலிங்கத்துப்பரணிபிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்முதலுதவிவிளையாட்டுஇயேசு காவியம்நாளிதழ்கற்றது தமிழ்முதலாம் இராஜராஜ சோழன்பானுப்ரியா (நடிகை)ஊராட்சி ஒன்றியம்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்கயிலை மலைவிவேகானந்தர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்உஹத் யுத்தம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ரேஷ்மா பசுபுலேட்டிஆத்திசூடிகருப்பு நிலாபார்க்கவகுலம்நடுக்குவாதம்பாதரசம்சின்னம்மைஅம்பேத்கர்வாட்சப்ஐங்குறுநூறுதமிழ் எழுத்து முறைசுந்தரமூர்த்தி நாயனார்என்டர் த டிராகன்இடலை எண்ணெய்கபடிகாடுவெட்டி குருசமுதாய சேவை பதிவேடுமதராசபட்டினம் (திரைப்படம்)அல்லாஹ்வளைகாப்புகட்டுரைதமிழ்வளையாபதிதமிழ் ராக்கர்ஸ்பாட்டாளி மக்கள் கட்சிஇராமானுசர்நூஹ்பொன்னியின் செல்வன்புரோஜெஸ்டிரோன்தற்கொலைசுரைக்காய்🡆 More