பாரா ட இசூக்கா

பாரா ட இசூக்கா (Barra da Tijuca, பிரேசிலிய போர்த்துக்கீசம்: ) பிரேசிலின் இரியோ டி செனீரோவின் மேற்கு மண்டலத்தில் அத்திலாந்திக்குப் பெருங்கடலோரத்தில் உள்ள ஓர் புறநகர்ப் பகுதி (பாரா) ஆகும்.

இங்குள்ள கடற்கரைகள், ஏரிகள், ஆறுகளுக்காகவும் வாழ்முறைக்காகவும் பாரா புகழ்பெற்றது.

பாரா ட இசூக்கா
மாவட்டம்
பாரா ட இசூக்காவின் அகலப் பரப்புக் காட்சி
பாரா ட இசூக்காவின் அகலப் பரப்புக் காட்சி
நாடுபாரா ட இசூக்கா Brazil
மாநிலம்இரியோ டி செனீரோ (மாநிலம்)
நகராட்சி/நகரம்இரியோ டி செனீரோ
மண்டலம்மேற்கு மண்டலம்

இரியோ டி செனீரோவின் பரப்பில் 13% ஆகவும் நகர மக்கள்தொகையில் 4.7% ஆக இருந்தபோதும் நகர வரி வருமானத்தில் 30% இங்கிருந்து தான் வருகின்றது. பிரேசிலில் மிகவும் மேம்படுத்தப்பட்ட இடங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இப்பகுதியின் மனித மேம்பாட்டுச் சுட்டெண், 0.959, நாட்டிலேயே மிகவும் உயர்ந்ததாகும். இரியோவின் நகர மையம், தெற்கு மண்டலம் போலல்லாது பாரா ட இசூக்கா 30 ஆண்டுகளுக்குள்ளாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே பெரும் நிழற்சாலைகளுடன் தற்கால சீர்தரங்களின்படி கட்டமைக்கப்பட்டுள்ளது. நவீனத்துவம், நீடிப்புத் திறன், இயற்கை என இப்பகுதி இரியோ டி செனீரோவின் புத்தம்புதிய முகமாக விளங்குகின்றது. இந்நகரப் பகுதியின் திட்ட வடிவமைப்பை, பிரசிலியாவை வடிவமைத்த லூசியோ கோஸ்தா உருவாக்கியுள்ளார். நகரின் பெருந்திட்டத்தில் பல பூங்காக்கள், அங்காடி வளாகங்கள், அடுக்கக குடியிருப்புகள், பெரிய மாளிகைகள் இடம் பெற்றுள்ளன. பிரேசிலின் பொருளியல் வளர்ச்சியை அடுத்து பாராவில் 100,000க்கும் கூடுதலான புதிய குடிகள் இடம் பெயர்ந்துள்ளனர்; பல பெரிய நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இங்கு பவேலாக்கள் இல்லாமையால் இது இரியோவின் மிகவும் பாதுகாப்பான உயர்குடி நகர்ப்பகுதியாகவும் பண்பாட்டு, பொருளியல், நிர்வாக மையமாக விளங்குகின்றது. இங்கு பல புகழ்பெற்றவர்களும் காற்பந்து வீரர்களும் வசிக்கின்றனர்.

தென் அமெரிக்காவில் முதல்முறையாக நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பெரும்பாலான அரங்குகள் இங்கு அமைந்திருந்தன.

ஒளிப்படத் தொகுப்பு

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

en:Wikipedia:IPA for Portugueseஅத்திலாந்திக்குப் பெருங்கடல்இரியோ டி செனீரோபிரேசில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சீறாப் புராணம்காடுவெட்டி குருஅழகிய தமிழ்மகன்செக்ஸ் டேப்தமிழ்த் தேசியம்கங்கைகொண்ட சோழபுரம்மூலம் (நோய்)ஆதிமந்திஜெயம் ரவிபறவைமொழிபிள்ளையார்சங்கம் (முச்சங்கம்)மியா காலிஃபாவேற்றுமைத்தொகைநவரத்தினங்கள்சைவ சமயம்இராமலிங்க அடிகள்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தற்கொலை முறைகள்யுகம்ஐங்குறுநூறுபள்ளிக்கூடம்பெ. சுந்தரம் பிள்ளைமருதநாயகம்இல்லுமினாட்டிதங்கம்எயிட்சுஅறுபடைவீடுகள்தமிழக வெற்றிக் கழகம்உயர் இரத்த அழுத்தம்இந்திய ரிசர்வ் வங்கிஆப்பிள்ஆனைக்கொய்யாமழைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழ் மன்னர்களின் பட்டியல்அகத்தியர்அப்துல் ரகுமான்108 வைணவத் திருத்தலங்கள்திரிசாகோவிட்-19 பெருந்தொற்றுவடலூர்கொன்றை வேந்தன்குப்தப் பேரரசுமுன்னின்பம்பகவத் கீதைபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்ம. பொ. சிவஞானம்வேற்றுமையுருபுகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்மே நாள்கர்மாகார்ல் மார்க்சுஅன்புமணி ராமதாஸ்சீவக சிந்தாமணிகேள்விஇந்திய வரலாறுஇலட்சம்வெ. இறையன்புபாண்டியர்தரணிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பூனைகாமராசர்நாட்டு நலப்பணித் திட்டம்மயக்க மருந்துகொன்றைசச்சின் (திரைப்படம்)விசயகாந்துநெசவுத் தொழில்நுட்பம்டி. என். ஏ.திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மாசிபத்திரிமுடியரசன்முத்துராஜாசிவன்🡆 More