பாதரசI சல்பேட்டு

பாதரச(I) சல்பேட் (Mercury(I) sulfate), பொதுவாக மெர்குரஸ் சல்பேட் என அழைக்கப்படுகிறது, இது Hg2 SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும் .

பாதரச(I) சல்பேட் என்பது ஒரு உலோக கலவை, இது வெள்ளை, வெளிர் மஞ்சள் அல்லது பழுப்புநிறத்துாள் போன்ற உலோகச் சேர்மம் ஆகும். இது ஹைட்ரஜன் அணுக்கள் இரண்டையும் பாதரசம்(I) உடன் இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் உருவாகும் கந்தக அமிலத்தின் உலோக உப்பு ஆகும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது; சுவாசத்தின் போது உள்ளிழுக்கப்பட்டாலோ, உட்கொண்டாலோ அல்லது தோலால் உறிஞ்சப்பட்டாலோ அது மரணத்தை விளைவிக்கும் அளவு ஆபத்தானது.

பாதரச(I) சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாதரச(I) சல்பேட்டு
வேறு பெயர்கள்
மெர்க்குரஸ் சல்பேட்டு
இனங்காட்டிகள்
7783-36-0 பாதரசI சல்பேட்டுY
ChemSpider 22951 பாதரசI சல்பேட்டுN
EC number 231-993-0
InChI
  • InChI=1S/2Hg.H2O4S/c;;1-5(2,3)4/h;;(H2,1,2,3,4)/q2*+1;/p-2 பாதரசI சல்பேட்டுN
    Key: MINVSWONZWKMDC-UHFFFAOYSA-L பாதரசI சல்பேட்டுN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24545
SMILES
  • [O-]S(=O)(=O)[O-].[Hg+].[Hg+]
பண்புகள்
Hg2SO4
வாய்ப்பாட்டு எடை 497.24 கி/மோல்
தோற்றம் வெண்மை கலந்த மஞ்சள் படிகங்கள்
அடர்த்தி 7.56 கி/செமீm3
0.051 கி/100 மிலி (25 °செல்சியசு)
0.09 கி/100 மிலி (100 °செல்சியசு)
கரைதிறன் நைட்ரிக் அமிலத்தில் கரையும்,நீரில் கரையாது, சூடான கந்தக அமிலத்தில் கரையும்.
−123.0·10−6 cm3/mol
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
ஒற்றைச்சாய்வு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
-743.1 kJ·mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
200.7 J·mol−1·K−1
வெப்பக் கொண்மை, C 132 J·mol−1·K−1
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பாதரச(I) புளோரைடு
பாதரச(I) குளோரைடு
பாதரச(I) புரோமைடு
பாதரச(I) அயோடைடு
ஏனைய நேர் மின்அயனிகள் பாதரச(II) சல்பேட்டு
காட்மியம் சல்பேட்டு
தாலியம்(I) சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 பாதரசI சல்பேட்டுN verify (இதுபாதரசI சல்பேட்டுY/பாதரசI சல்பேட்டுN?)
Infobox references

அமைப்பு

பாதரச(!) சல்பேட்டின் படிக அமைப்பு Hg22+ ஆன இரட்டை மணி வடிவத்தையும் மற்றும் SO42− எதிரயனிகளால் முதன்மை அடிப்படை அலகுகளாலும் ஆனது. Hg22+ இரட்டை மணி நான்கு ஆக்ஸிஜன் அணுக்களில் Hg₋O தூரம் 2.23 முதல் 2.93Å வரையான துாரத்தில் சூழப்பட்டுள்ளது, அதே நேரத்தில் Hg-Hg அணுக்களிடை தூரம் சுமார் 2.500Å ஆகும். பாதரசம் (I) சல்பேட்டு பாதரச அணுக்களை 2.500Å என்ற பிணைப்பு நீளத்துடன் இரட்டைகளாக அமைத்து வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலோக அணு இரட்டையர்கள் ஒரு அலகு கலத்தில் ஒரு அச்சுக்கு இணையாக அமைந்திருக்கும். பாதரச அணு இரட்டைகளானவை எல்லையற்ற சங்கிலியான SO 4 - Hg - Hg - SO 4 - Hg - Hg - என்பதன் பகுதியை உருவாக்குகின்றன. Hg - Hg - O பிணைப்பு கோணமானது 165° ± 1 ஆகும். இந்தச் சங்கிலி அலகு கலத்தை குறுக்காக கடக்கிறது. பாதரச சல்பேட்டின் அமைப்பானது பலவீனமான Hg-O இடைவினைகளால் இணைப்பில் வைக்கப்பட்டுள்ளது. SO4 ஒற்றை எதிரயனியாக செயல்படாது, மாறாக பாதரச உலோகத்துடன் அணைவுப் பிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு

பாதரசம்(I) சல்பேட்டு தயாரிப்பதற்கான ஒரு வழியானது, பாதரசம் (I) நைட்ரேட்டின் அமிலக் கரைசலை 1 முதல் 6 கந்தக அமிலக் கரைசலுடன் கலப்பது ஆகும்.

    Hg 2 (NO 3 ) 2 + H 2 SO 4 → Hg 2 SO 4 + 2 HNO 3

அடர் கந்தக அமிலத்துடன் அதிகப்படியான பாதரசத்தை வினைபுரியச் செய்வதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம்:

    2 Hg + 2 H 2 SO 4 → Hg 2 SO 4 + 2 H 2 O + SO 2

மின் வேதியியல் கலங்களில் பயன்பாடு

பாதரச(I) சல்பேட் பெரும்பாலும் மின் வேதியியல் கலங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது முதன்முதலில் மின்வேதியியல் கலங்களில் லாடிமர் கிளார்க்கால் 1872 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்னர் 1911 ஆம் ஆண்டில் இது ஜார்ஜ் அகஸ்டஸ் ஹுலெட் தயாரித்த வெஸ்டன் கலங்களில் மாற்றாக பயன்படுத்தப்பட்டது. 100° செல்சியசிற்கு மேல் அதிக வெப்பநிலையில் இது வெள்ளி சல்பேட்டுடன் ஒரு நல்ல மின்முனையாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; பாதரச(I) சல்பேட்டு உயர் வெப்பநிலைகளில் சிதைவடைவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சிதைவுச் செயல்முறை வெப்பங்கொள் வினையாகும். இது 335 முதல் 500 வரையிலான வெப்பநிலையில் நிகழ்கிறது. பாதரச(I) சல்பேட்டு திட்ட மின்கலங்களைச் சாத்தியப்படுத்தும் அளவிற்கான தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. இது மிகக்குறைவான அளவு கரைதிறனையே (லிட்டருக்கு ஒரு கிராம் என்ற அளவிலேயே) கொண்டிருப்பதாலும், அதாவது எதிர்மின்முனையிலிருந்து பரவுவது அதிகமாக இல்லாமல் இருப்பதாலும், பாதரச மின்முனையில் ஒரு பெரிய ஆற்றலைக் கொடுப்பதற்கு இது போதுமானதாக இருக்கிறது. பாதரச(I) சல்பேட் மின்வாய்கள் குளோரைடு அற்ற மின்கலன்கள் தேவைப்படும் நேர்வில் பயன்படுத்தப்படுகின்றன. இது குறிப்பாக, காரீய-அமில மின்கலங்கள் பயன்படுத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்புகள்

Tags:

பாதரசI சல்பேட்டு அமைப்புபாதரசI சல்பேட்டு தயாரிப்புபாதரசI சல்பேட்டு மின் வேதியியல் கலங்களில் பயன்பாடுபாதரசI சல்பேட்டு குறிப்புகள்பாதரசI சல்பேட்டுவேதிச் சேர்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நானும் ரௌடி தான் (திரைப்படம்)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிஇலங்கைபதினெண்மேற்கணக்குபுங்கைஉப்புச் சத்தியாகிரகம்அரவிந்த் கெஜ்ரிவால்காதல் கொண்டேன்நருடோமுடியரசன்நெடுநல்வாடை (திரைப்படம்)ரவிச்சந்திரன் அசுவின்ஓ. பன்னீர்செல்வம்விஜய் ஆண்டனிவாணிதாசன்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஆசாரக்கோவைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்ஹாலே பெர்ரிமருது பாண்டியர்மூதுரைஅன்புமணி ராமதாஸ்கண்ணாடி விரியன்நெசவுத் தொழில்நுட்பம்இயேசு பேசிய மொழிபாரிஆரணி மக்களவைத் தொகுதிமயக்கம் என்னஇராவணன்இராமர்ஐரோப்பாகுற்றியலுகரம்புலிதேர்தல்வீரப்பன்சிவபெருமானின் பெயர் பட்டியல்கபிலர் (சங்ககாலம்)நவக்கிரகம்நாயன்மார்சுபாஷ் சந்திர போஸ்சித்தார்த்மகாபாரதம்பொன்னுக்கு வீங்கிமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இலிங்கம்சிறுபாணாற்றுப்படைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திகலாநிதி மாறன்உரைநடைதமிழர் பருவ காலங்கள்இயேசுவின் உயிர்த்தெழுதல்பெருங்கடல்உருசியாதிருப்பூர் மக்களவைத் தொகுதிசவ்வாது மலைசைவ சமயம்கலித்தொகைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சென்னைதமிழ் மாதங்கள்நன்னூல்மதராசபட்டினம் (திரைப்படம்)கஞ்சாஆடுஜீவிதம் (திரைப்படம்)விஜய் (நடிகர்)சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்மயில்அமலாக்க இயக்குனரகம்பால்வினை நோய்கள்திருமணம்தமிழச்சி தங்கப்பாண்டியன்சிவாஜி கணேசன்உமாபதி சிவாசாரியர்இன்ஸ்ட்டாகிராம்இரட்டைக்கிளவி🡆 More