நிலப்படவரைவியல்

நிலப்படவரைவியல் என்பது, நிலப்படங்கள் தயாரிப்பது தொடர்பான ஆய்வு மற்றும் செயற்பாடுகளுக்கான துறையைக் குறிக்கும்.

முற்காலத்தில் நிலப்படங்கள் பேனாக்களையும், காகிதங்களையும் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டன,ஆனால் கணினித்துறையின் வளர்ச்சியுடன் நிலப்படவரைவியலில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்காலத்தில் வணிகத்தரம் கொண்ட நிலப்படங்கள் பெரும்பாலும் நிலப்படம்வரையும் மென்பொருட்கள் மூலமே உருவாக்கப்படுகின்றன. இவை, கணினி உதவி வரைதல் (CAD) மென்பொருள், புவியியல் தகவல் முறைமை (GIS), சிறப்பு நிலப்பட வரைதல் மென்பொருள் ஆகிய வகைகளுள் ஒன்றைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

நிலப்படவரைவியல்
14 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காலண்டுப் பகுதியைச் சேர்ந்த, மத்திய தரைக் கடல் பகுதியின் வழிகாணல் வரைபடம். காங்கிரசு நூலகத்திலுள்ள நிலப்படங்களில் மிகப் பழைய மூலப் படி இதுவாகும்.

நிலப்படங்கள், இடஞ்சார் தரவுகளுக்கான கட்புலன் கருவிகளாக (visualization tools) இருக்கின்றன. இடஞ்சார் தரவுகள், அளத்தல் மூலம் பெறப்பட்டுத் தகவல்தளங்களில் சேமிக்கப்படலாம். இவற்றைப் பின்னர் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். இந்தத் துறையின் இன்றைய போக்கு, முன்னைய அனலாக் முறையிலிருந்து, கூடிய இயங்கியல் தன்மைகள் கொண்டதும், ஊடுதொடர்பாடல் வசதிகளை வழங்கக்கூடியதும், எண்ணிம முறைகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதுமான வழிமுறைகளை நோக்கிச் செல்கின்றது.

உலகம் அளக்கப்படக் கூடியது மற்றும் அதன்மூலம், நம்பத்தகுந்தவகையில் மெய்யான உலகைப் பிரதிநிதித்துவப் படுத்தலாம் என்ற கருத்துக்களின் அடிப்படையிலேயே நிலப்படவரைவியல் வழிமுறைகள் தங்கியுள்ளன. நிலப்பட ஆக்கம், உயர்தரத்திலான திறமைகளையும், மனப்பாங்கையும் வேண்டிநிற்கிறது. புவியியல் தோற்றப்பாடுகள் தொடர்பான குறியீடுகளின் பயன்பாட்டிலும், குறுக்கப்பட்ட அளவில், பண்பியல் அடிப்படையில் உலகைப் பார்த்துச் செயல்படுவதிலும் இவ்வாறான திறமைகள் தேவைப்படுகின்றன.

Tags:

கணினிகணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்காகிதம்நிலப்படம்புவியியல் தகவல் முறைமைபேனாமென்பொருள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ரீலீலாஅகழ்ப்போர்வாழைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பதுருப் போர்ஈ. வெ. இராமசாமிகன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதன்னுடல் தாக்குநோய்காமராசர்சனீஸ்வரன்கலிங்கத்துப்பரணிஎடப்பாடி க. பழனிசாமிபாரதிதாசன்மக்களாட்சிபுணர்ச்சி (இலக்கணம்)தொழுகை (இசுலாம்)கலாநிதி வீராசாமிசிவம் துபேபாரத ஸ்டேட் வங்கிஇந்தியப் பிரதமர்வினையெச்சம்வானொலிதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்முல்லைப்பாட்டுதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஜவகர்லால் நேருஅளபெடைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கொன்றை வேந்தன்பச்சைக்கிளி முத்துச்சரம்வாணிதாசன்நா. முத்துக்குமார்தொல்லியல்தீநுண்மிஊராட்சி ஒன்றியம்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பூலித்தேவன்பதினெண் கீழ்க்கணக்குதமிழ் மாதங்கள்இந்தியாவின் பொருளாதாரம்சிவகங்கை மக்களவைத் தொகுதிஜோதிகாபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தாஜ் மகால்வியாழன் (கோள்)காயத்ரி மந்திரம்யூடியூப்சூரரைப் போற்று (திரைப்படம்)வாக்குரிமைமார்ச்சு 27நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)பிரேமலதா விஜயகாந்த்கண்ணதாசன்பிள்ளைத்தமிழ்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ் மன்னர்களின் பட்டியல்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிபுற்றுநோய்திருமுருகாற்றுப்படைநீர் மாசுபாடுதமிழ்ப் பருவப்பெயர்கள்இந்தியப் பொதுத் தேர்தல்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்யாதவர்காம சூத்திரம்ஜன கண மனநந்திக் கலம்பகம்கலித்தொகைஒலிவாங்கிராம் சரண்வேலூர் மக்களவைத் தொகுதிஹர்திக் பாண்டியாஜெயகாந்தன்முடியரசன்குண்டூர் காரம்பஞ்சபூதத் தலங்கள்🡆 More