நாடித் துடிப்பு

நாடித் துடிப்பு என்பது இதயம் துடிப்பதால் நாடிகளில் ஏற்படும் தொட்டுணர்வு மூலம் அறியக்கூடிய துடிப்பைக் குறிக்கின்றது.

இது பெரும்பானமையான சந்தர்ப்பங்களில் இதயத்துடிப்பு வீதத்துக்குச் சமனானதாகும். நாடித்துடிப்பு நிமிடத்துக்கு எத்தனை என உடலின் சில பகுதிகளில் மட்டுமே தொட்டு உணரப்படக்கூடியது. இதயத் துடிப்பு நேரடியாக இதயத் துடிப்புமானி மூலம் கேட்டறியப்படுகின்றது. இதயத்துடிப்பு என்பது நிமிடத்துக்கு இதயம் எத்தனை தடவை துடிக்கிறது என்பதன் அளவு ஆகும். சராசரியாக வளர்ந்த நபரின் இதயத் துடிப்பு 70 - 80 துடிப்பு/நிமிடம் ஆக இருக்கும். பொதுவாக, வளர்ந்தோரில் 60 தொடக்கம் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது. நாடித் துடிப்பு இதற்கு மிகையாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் உடல் நலக் கேட்டிற்கான அறிகுறி எனத் தெரிந்து கொள்ளலாம். எனவே நாடித்துடிப்பு ஒரு உயிராதார அறிகுறி ஆகும்.

நாடித் துடிப்பு
நாடித் துடிப்பு
நாடித் துடிப்பு

உடலின் மேற்பகுதியில் நாடி அமைந்துள்ள இடங்களில் மட்டுமே நாடித்துடிப்பு தொட்டுணரப்படமுடியும். இவ்விடங்களில் நாடியை அதன் கீழ் உள்ள அமைப்புடன் (பொதுவாக எலும்பு) விரல் மூலம் சிறிது அழுத்துவதால் நாடித்துடிப்பு அறியப்படுகின்றது. கை மணிக்கட்டு, முழங்காலின் பிற்பகுதி, கழுத்து, முழங்கை உட்பகுதி குதிக்கால் மேற்பகுதி, பாதத்தின் ஒரு பகுதி என்பன நாடித்துடிப்பு அறியக்கூடிய இடங்களாகும்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

இதயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பறம்பு மலைமுதுமலை தேசியப் பூங்காதிராவிட இயக்கம்பெரியாழ்வார்அரிப்புத் தோலழற்சிஇராமலிங்க அடிகள்தெலுங்கு மொழிநெருப்புசங்க காலம்சமந்தா ருத் பிரபுமு. கருணாநிதிமூலம் (நோய்)சிறுகதைமீன் வகைகள் பட்டியல்ம. பொ. சிவஞானம்காம சூத்திரம்அனுஷம் (பஞ்சாங்கம்)விண்டோசு எக்சு. பி.பிரீதி (யோகம்)திட்டக் குழு (இந்தியா)மணிமேகலை (காப்பியம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)கஜினி (திரைப்படம்)தொல்காப்பியம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)சமுத்திரக்கனிஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஜோக்கர்உயிர்மெய் எழுத்துகள்மொழிகள்ளழகர் கோயில், மதுரைவெங்கடேஷ் ஐயர்இந்தியத் தேர்தல்கள் 2024வாணிதாசன்நவதானியம்பெண்களின் உரிமைகள்விளையாட்டுராஜா ராணி (1956 திரைப்படம்)சிறுநீரகம்புதுக்கவிதைவிஜய் (நடிகர்)நேர்பாலீர்ப்பு பெண்வெண்குருதியணுஅறுபது ஆண்டுகள்முத்தரையர்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சிலம்பம்நரேந்திர மோதிஅரண்மனை (திரைப்படம்)பௌத்தம்பிரசாந்த்கம்பராமாயணம்தமிழ் இலக்கணம்மாசாணியம்மன் கோயில்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்அகத்தியர்மாதவிடாய்திருக்குறள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்ஓ காதல் கண்மணிஇந்திய அரசியலமைப்புவிசயகாந்துயானைஆர். சுதர்சனம்சதுரங்க விதிமுறைகள்பெயர்ச்சொல்பாண்டியர்ஜவகர்லால் நேருபெயரெச்சம்கனடாவணிகம்பிரகாஷ் ராஜ்பழனி முருகன் கோவில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்திருமந்திரம்பட்டினப் பாலைகல்விக்கோட்பாடுபள்ளு🡆 More