திரைப்படத் திறனாய்வு

திரைப்படத் திறனாய்வு என்பது திரைப்படங்களைத் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பகுத்தாய்ந்து மதிப்பிடுவதைக் குறிக்கும்.

பொதுவாகத் திரைப்படத் திறனாய்வை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று ஊடகத் திறனாய்வு. இது செய்தித் தாள்கள், பிற மக்கள் ஊடகங்களில் ஒழுங்காக இடம்பெறுபவை. மற்றது துறைசார் அறிஞர்களால் திரைப்படக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப் படும் கல்விசார் திறனாய்வுகள். இது பெரும்பாலும் கல்விசார் ஆய்விதழ்களில் வெளிவருகின்றன.

ஊடகத் திறனாய்வு

செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள், இணைய வெளியீடுகள் போன்றவற்றைச் சார்ந்த திரைப்படத் திறனாய்வாளர்கள் பெரும்பாலும் புதிய வெளியீடுகளையே திறனாய்வு செய்கின்றனர். செல்வாக்குள்ள ஊடகங்களில் வெளியாகும் திறனாய்வுகள் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதா இல்லையா என மக்கள் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக இவ்வகைத் திறனாய்வுகள் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்விகளை முடிவு செய்ய வல்லவையாக இருக்கின்றன.

கல்விசார் திறனாய்வு

திரைப்படங்கள் தொடர்பான கல்விசார் திறனாய்வுகள் திரைப்படக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றன. இவ்வகைத் திறனாய்வுகள் ஒரு திரைப்படம் ஏன் சரியாக வருகிறது, எப்படிச் சரியாக வருகிறது, அது குறிக்கும் பொருள், அது மக்கள்மீது கொண்டிருக்கும் தாக்கம் போன்ற விடயங்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றன. இவ்வாறான திறனாய்வுகள் பொதுவாக மக்கள் ஊடகங்களில் இடம்பெறுவது இல்லை. இவை கல்விசார் ஆய்விதழ்களில் அல்லது புலமைசார் கலை இலக்கிய வாசகர்களைக் கொண்ட இதழ்களில் வெளியாகின்றன.

Tags:

திரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கம்பராமாயணம்அகநானூறுதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்வட சென்னை மக்களவைத் தொகுதிபட்டினப் பாலைதங்கம் (திரைப்படம்)இட்லர்சிதம்பரம் நடராசர் கோயில்இன்ஸ்ட்டாகிராம்108 வைணவத் திருத்தலங்கள்தங்கம்புறநானூறுமருதமலைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைவெந்தயம்இந்திய அரசியலமைப்புஆடு ஜீவிதம்கினி எலிமு. வரதராசன்வெ. இராமலிங்கம் பிள்ளைதிருமந்திரம்உயர் இரத்த அழுத்தம்திராவிட மொழிக் குடும்பம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிஆடுஜீவிதம் (திரைப்படம்)புற்றுநோய்மகேந்திரசிங் தோனிகுறிஞ்சி (திணை)இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கிறித்தோபர் கொலம்பசுமுல்லை (திணை)சிறுநீரகம்மலக்குகள்அலீமோகன்தாசு கரம்சந்த் காந்திடி. எம். செல்வகணபதிதருமபுரி மக்களவைத் தொகுதிஉ. வே. சாமிநாதையர்தமிழ் இலக்கணம்பால் கனகராஜ்திருநங்கைபணவீக்கம்இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்நாடாளுமன்ற உறுப்பினர்புவிவெப்பச் சக்திகுருசூரியக் குடும்பம்மூதுரைபாரிநிணநீர்க்கணுதமிழிசை சௌந்தரராஜன்இயேசுவின் இறுதி இராவுணவுநெல்லியாளம்கரும்புற்றுநோய்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்நற்கருணைஅரவிந்த் கெஜ்ரிவால்தைராய்டு சுரப்புக் குறைபிரேமலதா விஜயகாந்த்தொல்காப்பியம்விஜயநகரப் பேரரசுகருத்தரிப்புஅதிமதுரம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இந்தியாமங்கோலியாமுலாம் பழம்இலங்கைமு. கருணாநிதிஇந்திய தேசிய சின்னங்கள்விலங்குகொல்கத்தா நைட் ரைடர்ஸ்உருசியாவாட்சப்சாரைப்பாம்புதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்🡆 More