தபுந்தா ஹயாங் ஸ்ரீ ஜயனாசா

தபுந்தா ஹயாங் ஸ்ரீ ஜயனாசா (Dapunta Hyang Sri Jayanasa) ஸ்ரீ விஜயப் பேரரசின் முதலாவது மன்னராவார்.

இவரே ஸ்ரீ விஜய அரச பரம்பரையைத் தோற்றுவித்தவரெனக் கருதப்படுகிறது. நற்பேற்றைப் பெறவும் தம்மை அண்டிய பகுதிகளை வெற்றி கொள்ளவும் புனிதப் பயணம் செய்தவராகிய இவரது பெயர் ஸ்ரீ விஜயத்தில் பொ.கா. 7 ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட தொடர் கல்வெட்டுக்களான "சித்த யாத்திரைக் கல்வெட்டுக்களில்" குறிப்பிடப்பட்டுள்ளது. சித்த யாத்திரை (siddha yatra) என்றால் புனிதப் பயணம் என்று பொருள். இவரது ஆட்சி பொ.கா. 671 இற்கும் 702 இற்குமிடையில் நிலவியது.

ஸ்ரீ விஜய மன்னர்கள்
தொடக்கம்
பலெம்பாங்
தபுந்தா ஹயாங் 671–702
ஸ்ரீ இந்திரவர்மன் 702–728
உருத்திர விக்கிரமன் 728–775
பிற்காலம் (சைலேந்திர மரபு)
ஸ்ரீ மகாராஜா 775–(?)
சாவகம்
தரணீந்திரன் 778–782
சமரகரவீரன் 782–792
சமரத்துங்கன் 792–840
சுவர்ண தீபம்
பல புத்திரதேவன் 860–(?)
ஸ்ரீ உதயாத்திய வர்மதேவன் 960–988
ஸ்ரீ சூடாமணி வர்மதேவன் 988–1008
ஸ்ரீ மாற விஜயோத்துங்கவர்மன் 1008–1017
கடாரம்
சங்கிராம விஜயோத்துங்கவர்மன் 1017–1030
ஸ்ரீ தேவன் 1028–(?)
சோழர் ஆட்சியில்
முதலாம் இராசேந்திர சோழன் 1012–1044
முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120
மௌலி மரபினரின் கீழ்
திரைலோகியராஜா 1183–(?)

வாழ்க்கை வரலாறு

பொ.கா. 671 ஆம் ஆண்டு ஸ்ரீ விஜயத்துக்குப் பயணம் செய்து, அங்கேயே ஆறு மாத காலம் தங்கியிருந்த சீன பௌத்தத் துறவியாகிய இ சிங் ஸ்ரீ விஜயத்தின் மன்னர் காட்டிய பெருந்தன்மையாலும், அன்பினாலும், விருந்தோம்பலினாலும் தான் பெரிதும் கவரப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இ சிங் துறவியின் அறிக்கையிற் குறிப்பிடப்படும் அரசர் பலெம்பாங் நகரில் கண்டெடுக்கப்பட்டதான 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, குறிப்பாக பொ.கா. 682 ஐச் சேர்ந்த கெடுக்கான் புக்கித் கல்வெட்டு குறிப்பிடும் மன்னரே என்றும் இரண்டு குறிப்புக்களும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்றும் பிற்காலத்தில் கருதப்பட்டது. எனினும் பின்னர் இக்கல்வெட்டுக்களின் பொருள் கூறுவதில் வரலாற்றாசிரியர்களிடம் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

தபுந்தா ஹயாங் என்ற பட்டங் கொண்ட மன்னர் படகுகளின் மூலம் சித்த யாத்திரை எனப்படும் புனிதப் பயணம் மேற்கொண்டதாக சக ஆண்டு 605 இல், அஃதாவது பொ.கா. 683 இல் எழுப்பப்பட்ட கெடுக்கான் புக்கித் கல்வெட்ட் குறிப்பிடுகிறது. இவர் மினங்கா தம்வான் எனுமிடத்திலிருந்து இருபதாயிரம் படை வீரர்களுடன் புறப்பட்டு மத்தாஜாப் எனுமிடத்தை நோக்கிச் செல்கையில் பல்வேறு பகுதிகளையும் வெற்றி கொண்டார். பங்கா தீவில் கண்டு பிடிக்கப்பட்ட பொ.கா. 686 இன் கொத்தா காப்பூர் கல்வெட்டு, ஜம்பி ஹுலுவில் கண்டுபிடிக்கப்பட்ட பொ.கா. 686 ஐச் சேர்ந்த கராங் பிராஹி கல்வெட்டு, லம்புங்ஙின் தென் பகுதியிற் கண்டு பிடிக்கப்பட்ட பலாஸ் பஸெமாஹ் கல்வெட்டு ஆகிய ஏனைய கல்வெட்டுக்கள் அனைத்துமே சித்த யாத்திரையையும் ஸ்ரீ விஜயப் பேரரசின் வெற்றிகளையும், அஃதாவது ஒரே நிகழ்வையே குறிப்பிடுகின்றன. தபுந்தா ஹயாங் ஜம்பி, பலெம்பாங், தென் லம்புங், பங்கா தீவு என்பவற்றை வெற்றி கொண்டு ஸ்ரீ விஜயப் பேரரசை நிறுவியதாக இக்கல்வெட்டுக்களனைத்திலிருந்தும் அறியப்படுகிறது. அத்துடன் இவர் சாவகத் தீவை நோக்கிப் படையெடுத்துச் சென்றமை மேற்குச் சாவகத்திலிருந்த தருமனகாரா அரசின் வீழ்ச்சிக்குப் பங்களித்தது.

உசாத்துணை

Tags:

சிறீவிஜயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சிலம்பரசன்சேரர்பௌத்தம்தமிழர் நெசவுக்கலைதமிழ் எழுத்து முறைதமிழர் அளவை முறைகள்நற்றிணைவிளையாட்டுஜெயகாந்தன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்ஏலகிரி மலைகண்ணனின் 108 பெயர் பட்டியல்மதீச பத்திரனசேலம்கேரளம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிறுகதைஉன்னை நினைத்துகருக்கலைப்புபுறப்பொருள்அகரவரிசைவிபுலாநந்தர்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்ப் புத்தாண்டுகவலை வேண்டாம்வெண்குருதியணுசப்தகன்னியர்இணையம்சீனிவாச இராமானுசன்பிட்டி தியாகராயர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இங்கிலீஷ் பிரீமியர் லீக்முகம்மது நபிஇந்தியத் தலைமை நீதிபதிகிளைமொழிகள்பாண்டியர்மூவேந்தர்அண்ணாமலை குப்புசாமிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பரதநாட்டியம்திருப்போரூர் கந்தசாமி கோயில்கள்ளர் (இனக் குழுமம்)அபிராமி பட்டர்முலாம் பழம்முதலாம் இராஜராஜ சோழன்கில்லி (திரைப்படம்)காளமேகம்பட்டினப் பாலைகொன்றை வேந்தன்இராவணன்தமிழ் விக்கிப்பீடியாநாம் தமிழர் கட்சிகருக்காலம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்வெந்தயம்ஜோதிகாஅக்கினி நட்சத்திரம்கனடாநயினார் நாகேந்திரன்அறுசுவைசிவனின் 108 திருநாமங்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்விஷால்உணவுகள்ளழகர் கோயில், மதுரைநிதி ஆயோக்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்கூர்ம அவதாரம்அவுரி (தாவரம்)ஐங்குறுநூறுமலேசியாஇட்லர்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்🡆 More