பாகம் ஒன்று

டூன்: பாகம் ஒன்று (ஆங்கிலம்: Dune: Part One) 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு ஐக்கிய அமெரிக்க காவிய அறிபுனைத் திரைப்படம் ஆகும்.

இத்திரைப்படம் டெனிசு வில்லெனுவ் ஆல் எழுதி இயக்கப்பட்டுள்ளது. பிராங்க் எர்பெர்ட்டால் எழுதப்பட்ட அதே பெயரிலான 1965 புதினத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. டிமதி சாலமே, ரெபெக்கா பர்குசன், ஆஸ்கர் ஐசக், ஜோஷ் புரோலின், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட், டேவ் பாடிஸ்டா, சுடீவன் மெக்கின்லி ஹென்டர்சன், ஜெண்டயா, சேங் சென், சார்லொட்டு இரம்பிலிங்கு, ஜேசன் மோமோவா, ஹாவியர் பார்டெம் ஆகியோர் நடித்துள்ளனர்.

டூன்: பாகம் ஒன்று
Dune: Part One
பாகம் ஒன்று
இயக்கம்டெனிசு வில்லெனுவ்
தயாரிப்பு
  • மேரி பாரன்ட்
  • டெனிசு வில்லெனுவ்
  • கேல் பொய்டர்
  • ஜோ கரக்கியோலொ சூனியர்
திரைக்கதை
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுகிரெயிக் பிரேசர்
கலையகம்லெஜென்டரி பிக்சர்கள்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 2021 (2021-09-03)(வெனிசு)
அக்டோபர் 22, 2021 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்156 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$165 மில்லியன் (1,180 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$401.8 மில்லியன் (2,873.5 கோடி)

டேவிட் லிஞ்ச்சின் டூன் திரைப்படத்தினைத் தொடர்ந்து இப்புதினத்தினை வைத்து எடுக்கப்பட்ட இரண்டாவது திரைப்படமாகும். மூன்றாவது திரைத் தொகுப்பு ஆகும்.பாரமவுண்ட் பிக்சர்ஸ் ஒரு திரைப்படத்தினை எடுக்கத் துவங்கி தொல்வியடைந்ததை தொடர்ந்து லெஜென்டரி என்டர்டெயின்மென்ட் இத்திரைப்படத்திற்கான உரிமைகளை 2016 ஆம் ஆண்டில் வாங்கியது. பிப்ரவரி 2017 இல் வில்லெனுவ் இயக்குனராக இணைந்தார். திரைப்பிடிப்பு மார்ச்சு முதல் சூலை 2019 வரை பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டது. திரைப்பிடிக்ககப்பட்ட சில இடங்கள் - புடாபெசுட்டு, ஜோர்தான், நோர்வே, மற்றும் அபுதாபி.

டூன் 2020 இறுதியில் வெளியிடப்படுவதாக இருந்தது, ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றினால் தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, 78ஆவது வெனீசு சர்வதேச திரைப்படத் திருவிழாவில் செப்டம்பர் 3, 2021 அன்று வெளியிடப்பட்டது. சர்வதேச வெளியீடு செப்டம்பர் 15, 2021 அன்று நடந்தது. ஐக்கிய அமெரிக்காவில் எச்பிஓ மாக்சில் அக்டோபர் 22 அன்று வெளியானது. பொதுமக்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பினைப்பெற்றது. திரைவண்ணம், இசை, நடிப்பு, திரைபிடிப்பு, இயக்கம் மற்றூம் கதாப்பாத்திரங்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. $165 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், $401 மில்லியன் வருவாயினை ஈட்டியது. 2021 சிறந்த 10 திரைப்படங்களில் ஒன்றாக பல குழுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது, அதில் குறிப்பாக 10 ஆசுக்கர் பரிந்துரைகளைப் பெற்றது, (சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த தழுவிய திரைக்கதை சேர்த்து), அதில் ஆறினை வென்றது: சிறந்த இசை, சிறந்த அசல் இசை, சிறந்த திரை இயக்கம், சிறந்த தயாரிப்பு, சிறந்த திரை வண்ணங்கள், மற்றும் சிறந்த ஒளிப்பதிவு. இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக டூன்: பாகம் இரண்டு, தயாரிப்பில் உள்ளது. நவம்பர் 3, 2023 அன்று வெளியாகவுள்ளது.

வரவேற்பு

பாக்சு ஆபிசு

ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடாவில், இத்திரைப்படம் $108.3 மில்லியன் வருவாயினையும், பிற இடங்களில் $293.5 மில்லியன் வருவாயினையும் ஈட்டி உலகம் முழுவதும் மொத்தம் $401 மில்லியன் வருவாயினை ஈட்டியது.

விமர்சகர்கள்

அழுகிய தக்காளிகள் இணையதளத்தில், 486 விமர்சனங்களில் 83% விமர்சகர்களின் விமர்சனம் நல்லதாக இருந்தது , சராசரி மதிப்பீடு - 7.60/10. இணையதளத்தின் பொது விமர்சனம்: "டூன் சில சமயங்களில் கடினமான புதினத்தினால் தவறினாலும் தயாரிப்பு மற்றும் திரைவண்ணங்களால் பார்ப்பவர்களை பெரிதும் கவர்கிறது." எடையிடப்பட்ட சராசரிகளைப் பயன்படுத்தும் மெடாகிறிடிக் இணையதளத்தில், விமர்சகர்கள் இத்திரைப்படத்திற்கு 100 இற்கு 74 மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள 67 விமர்சனங்களை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் "பொதுவாக பாராட்டப்பட்டுள்ளது". சினிமாசுகோர் பயனர்கள் இத்திரைப்படத்திற்கு "A−" மதிப்பீடினைக் கொடுத்துள்ளனர். (A+ முதல் F வரையிலான மதிப்பீடு பலகையில்) போஸ்டிராக் பயனர்கள் 84% நல்ல மதிப்பீடினைக் கொடுத்துள்ளனர்.(சராசரியாக 4.5/5). மேலும் 66% பயனர்கள் பிறரையும் பார்க்க பரிந்துரைப்பேன் என்று கூறியுள்ளனர்.

விருதுகள்

இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு (அதில் ஆறினை வென்றது), மூனறு கோல்டன் குளோப் விருது (அதில் ஒன்றினை வென்றது), பதினொன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் (அதில் ஐந்தினை வென்றது), பத்து கிறிடிக்சு சாய்சு விருதுகள் (அதில் மூன்றினை வென்றது), இரண்டு ஆக்டா சர்வதேச விருதுகள் (அதில் ஒன்றினை வென்றது), பத்து சாடில்லைட் விருதுகள் (அதில் ஐந்தினை வென்றது), ஒரு கிராமி விருது, ஒரு ஹாலிவுட் மியூசிக் இன் மீடியா விருதுகள் (வென்றது), நான்கு பீபிள்சு சாய்சு விருதுகள், ஒரு சுகிறீன் ஆக்டர்கள் கில்டு விருதுகள், மூன்று டோரியன் விருதுகள் (அதில் ஒன்றினை வென்றது), மற்றூம் ஒரு நிகலோடியன் சிறுவர்கள் தேர்வு விருதுகள் (வென்றது), பரிந்துரைக்கப்பட்டது. அமெரிக்கத் திரைப்பட நிறுவனத்தினால் 2021 இன் சிறந்த 10 திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

பாகம் ஒன்று வரவேற்புபாகம் ஒன்று மேற்கோள்கள்பாகம் ஒன்று வெளியிணைப்புகள்பாகம் ஒன்றுஅறிபுனைத் திரைப்படம்ஆஸ்கர் ஐசக்காவியத் திரைப்படம்ஜெண்டயாஜேசன் மோமோவாஜோஷ் புரோலின்டேவ் பாடிஸ்டாபிராங்க் எர்பெர்ட்ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட்ஹாவியர் பார்டெம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியன் பிரீமியர் லீக்இதயம்நீரிழிவு நோய்இன்குலாப்திணை விளக்கம்தொலைக்காட்சிதமிழச்சி தங்கப்பாண்டியன்கட்டுரைஏப்ரல் 25நீக்ரோசூரைகல்விதமிழ் எழுத்து முறைதமிழக மக்களவைத் தொகுதிகள்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருமுருகாற்றுப்படைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள்ளழகர் கோயில், மதுரைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)உடுமலைப்பேட்டைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்விஷ்ணுஇன்னா நாற்பதுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்திருநெல்வேலிசுரதாசூர்யா (நடிகர்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபறம்பு மலைஇந்தியாவில் பாலினப் பாகுபாடுஅறுசுவையாதவர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகாளமேகம்அஸ்ஸலாமு அலைக்கும்காளை (திரைப்படம்)இடிமழைவெண்பாதீரன் சின்னமலைஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்புங்கைஅனுஷம் (பஞ்சாங்கம்)நிதிச் சேவைகள்உரிச்சொல்மனித வள மேலாண்மைஉரைநடைநாச்சியார் திருமொழிகற்றாழைடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்திரிகடுகம்ஈரோடு தமிழன்பன்புறப்பொருள் வெண்பாமாலைமயில்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுபல்லவர்காடுஅறம்திராவிடர்தமிழர் விளையாட்டுகள்குறவஞ்சிதேவகுலத்தார்கரணம்மதுரை வீரன்ஆண்டு வட்டம் அட்டவணைநாலடியார்பரணி (இலக்கியம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருக்குர்ஆன்இந்தியப் பிரதமர்தமிழ்சுடலை மாடன்கலித்தொகைஇந்தியத் தலைமை நீதிபதிஏலகிரி மலைபரிவர்த்தனை (திரைப்படம்)பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)நவரத்தினங்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்வெற்றிக் கொடி கட்டு🡆 More