ஜே. கே. சிம்மன்சு

ஜோனதன் கிம்பிள் சிம்மன்சு (ஆங்கில மொழி: Jonathan Kimble Simmons) (பிறப்பு: சனவரி 9, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார்.

இவர் 1986 இல் அறிமுகமானதிலிருந்து 200 க்கும் மேற்பட்ட திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பாத்திரங்களில் நடித்ததன் மூலம் இவரது தலைமுறையின் மிகவும் செழிப்பான மற்றும் நன்கு அறியப்பட்ட குணச்சித்திர நடிகர்களில் ஒருவராவார். அத்துடன் அகாதமி விருது, பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

ஜே. கே. சிம்மன்சு
ஜே. கே. சிம்மன்சு
2009 இல் ஜே. கே. சிம்மன்சு
பிறப்புஜோனதன் கிம்பிள் சிம்மன்சு
சனவரி 9, 1955 (1955-01-09) (அகவை 69)
கிரோசு பாயின்ட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மான்டானா பல்கலைக்கழகம்
பணி
  • நடிகர்
  • குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1976–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
மிசெல் சூமாக்கர் (தி. 1996)
பிள்ளைகள்2

இவர் 2002 முதல் 2007 ஆம் வரை சாம் ரைமி இயக்கத்தில் வெளியான இசுபைடர்-மேன் (2002), இசுபைடர்-மேன் 2 (2004), இசுபைடர்-மேன் 3 (2007) போன்ற மீநாயகன் திரைப்படங்களில் 'ஜே. ஜோனா ஜேம்சன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜூனோ (2007) போன்ற பல திரைப்படங்களிலும், ஜிம் கோர்டன் என்ற கதாபாத்திரத்தில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட ஜஸ்டிஸ் லீக் (2017), சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) மற்றும் பேட்கேர்ள் (2022) போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பல இயங்குப்பட தொடர்கள், மார்வெல் திரைப் பிரபஞ்ச படங்களான இசுபைடர்-மேன்: பார் பிரம் ஹோம் (2019), இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் (2021) மற்றும் வெனம்: லெட் தேர் பி கார்னேஜ் (2021) உள்ளிட்ட சாம் ரைமி முத்தொகுப்புடன் தொடர்பில்லாத பல்வேறு மார்வெல் ஊடகங்களில் ஜேம்சனாக இவர் மீண்டும் நடித்தார்.

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

Tags:

அகாதமி விருதுஆங்கில மொழிஐக்கிய அமெரிக்காகோல்டன் குளோப் விருதுநடிகர்பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடைஅஸ்ஸலாமு அலைக்கும்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ஏப்ரல் 27மத கஜ ராஜாபாண்டவர்பிரபஞ்சன்ஆண்டு வட்டம் அட்டவணைஇயற்கை வளம்ஏலகிரி மலைதமிழர் கப்பற்கலைதேவநேயப் பாவாணர்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)வீரமாமுனிவர்தாஜ் மகால்குற்றியலுகரம்தமிழ் எண்கள்இந்திய தேசிய சின்னங்கள்பி. காளியம்மாள்ஜவகர்லால் நேருசங்க இலக்கியம்தமிழ் இலக்கியப் பட்டியல்ஜெயம் ரவிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்இராபர்ட்டு கால்டுவெல்மரகத நாணயம் (திரைப்படம்)பித்தப்பைசுந்தர காண்டம்மாசாணியம்மன் கோயில்கிராம ஊராட்சிநிலக்கடலைகினோவாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்தேனீசிறுபாணாற்றுப்படைசப்தகன்னியர்தேவாரம்கொன்றை வேந்தன்ரச்சித்தா மகாலட்சுமிபிரசாந்த்யாதவர்கஞ்சாஅபினிஇந்தியாவின் பசுமைப் புரட்சிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சங்க காலம்வைதேகி காத்திருந்தாள்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிகூத்தாண்டவர் திருவிழாஅகரவரிசைஔவையார் (சங்ககாலப் புலவர்)திருவோணம் (பஞ்சாங்கம்)யாவரும் நலம்ஹரி (இயக்குநர்)திருமணம்பால கங்காதர திலகர்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்வேலு நாச்சியார்குறுந்தொகைமுக்குலத்தோர்தூது (பாட்டியல்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிலம்பரசன்பஞ்சபூதத் தலங்கள்கருக்காலம்திருநாவுக்கரசு நாயனார்இல்லுமினாட்டிதைப்பொங்கல்முலாம் பழம்கபிலர் (சங்ககாலம்)கள்ளர் (இனக் குழுமம்)காற்றுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்அப்துல் ரகுமான்சுய இன்பம்🡆 More