ஜேன் ஆடம்ஸ்

ஜேன் ஆடம்சு (Jane Addams, செப்டம்பர் 6, 1860 – மே 21, 1935) அமெரிக்க முன்னோடி குடியிருப்பு சமூகப் பணியாளரும் பொது மெய்யியலாளரும் சமூகவியலாளரும் எழுத்தாளரும் ஆவார்.

இவர் பெண்கள் வாக்குரிமைக்காகவும் உலக அமைதிக்காகவும் போராடிய தலைவர். 1880களில் புகழ்பெற்றிருந்த குடியிருப்பு இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜேன் எல்லன் கேட்சு இசுடாருடன் இணைந்து ஹல் மாளிகை என்ற குடியிருப்பைத் தோற்றுவித்தார். ஏழைகளின் குடியிருப்பில் நடுத்தர மக்கள் குடியேறி இவர்களுடன் அறிவையும் பண்பாட்டையும் பகிரும் இயக்கமே குடியிருப்பு இயக்கமாகும். சிகாகோவின் ஏழை மக்கள் மற்றும் வந்தேறிகள் எதிர்கொண்ட பிரச்சினைகளைத் தீர்க்க பெருமுயற்சி மேற்கொண்டார். வந்தேறிகளுக்கும் பெண்களுக்கும் அமைதியும் கூடுதல் உரிமைகளும் பெற்றுத் தர பாடுபட்டார். 1931ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இந்தப் பரிசை வென்ற முதல் அமெரிக்கப் பெண்மணி இவரேயாவார். இவர் பெண் விழைவோராக இருந்தார். 1935ஆம் ஆண்டு சிகாகோவில் காலமானார்.

ஜேன் ஆடம்சு
ஜேன் ஆடம்ஸ்
பிறப்பு(1860-09-06)செப்டம்பர் 6, 1860
செடர்வில், இலினொய், ஐ.அ.
இறப்புமே 21, 1935(1935-05-21) (அகவை 74)
சிகாகோ, இலினொய், ஐ.அ.
பணிசமூக, அரசியல் செயற்பாட்டாளர், எழுத்தாளர், விரிவுரையாளர், சமூக அமைப்பாளர், பொது அறிவுசீவி
பெற்றோர்ஜான் எச். ஆடம்சு
சாரா வெபர் (ஆடம்சு)
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (1931)
கையொப்பம்ஜேன் ஆடம்ஸ்

ஆரம்பகால வாழ்க்கை

இவர் இல்லினாய்ஸின் சிடார்வில்லில் , செப்டம்பர் 6, 1860 இல் பிறந்தார், ஆங்கில-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த செல்வந்த குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது பெற்றோருக்கு பிறந்த எட்டு குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் எட்டு வயதிற்குள், இவளுடைய நான்கு உடன்பிறப்புகள் இறந்துவிட்டார்கள். இவரின் குழந்தை பருவத்தில் மூன்று சகோதரிகளும் மற்றும் இவரது 16 ஆம் வயதில் வயதில் ஒருவரும் இறந்து விட்டனர். 1863 ஆம் ஆண்டில், ஆடம்ஸுக்கு இரண்டு வயதாக இருந்தபோது, இவரது தாயார் சாரா ஆடம்ஸ் ( நீ வெபர்) இறந்தார். ஆப்போது அவர் ஒன்பதாவது குழந்தையினைப் பெற்றெடுப்பதற்காக கர்ப்பமாக இருந்தார். அதன்பிறகு ஆடம்ஸை பெரும்பாலும் இவரது மூத்த சகோதரிகள் கவனித்து வந்தனர்.

ஆடம்ஸ் தனது குழந்தைப் பருவத்தை வெளியில் விளையாடுவதற்கும், வீட்டில் நூல்கள் வாசிப்பது மற்றும் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்குச் செல்வது போன்றவற்றின் மூலம் நாட்களை செலவழித்தார். இவளுக்கு நான்கு வயதாக இருந்தபோது, பாட்ஸ் நோய் என அழைக்கப்படும் முதுகெலும்பின் காசநோயால் பாதிக்கப்பட்டார். இது இவரது வாழ்நாள் முழுவதும் அவரின் உடல்நலனில் பிரச்சினைகளை ஏற்படுத்தியது.இந்த நோய் இவரால் மற்ற குழந்தைகளுடன் இயல்பாக பழக இயலாமல் செய்தது.குழந்தையாக இருந்தபோது தான் அசிங்கமாக இருப்பதாக உணர்ந்தார். ஞாயிற்றுக் கிழமைகளில் தான் நல்ல உடை அணிந்து தனது தந்தையுடன் நடந்து செல்லும் போது தனது தந்தைக்கு அது சங்கடத்தை ஏற்படுத்துவது போன்று உணர்வை ஏற்படுத்துவதாக இவர் கருதினார்.

இவரின் தந்தை இல்லினாய்ஸ் குடியரசுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினராக இருந்தார். இல்லினாய்ஸ் மாநில செனட்டராக (1855-70) பணியாற்றினார். பின்னர் செனட்டர் (1854) மற்றும் குடியரசுத் தலைவர் பதவிக்கு (1860) இவரது இவரது நண்பர் ஆபிரகாம் லிங்கனை ஆதரித்தார். இவர் லிங்கனிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்று தனது மேசையில் வைத்திருந்தார். ஆடம்ஸ் குழந்தையாக இருந்த போது அதைப் படித்துப் பார்க்க விரும்பினார். இவரது தந்தை கால்நடைகள் , மாவு மற்றும் மர ஆலைகள்,கம்பளி தொழிற்சாலை மற்றும் விவசாய நிலங்களை வைத்திருந்த தொழிலதிபர் ஆவார். இவர் இரண்டாவது தேசிய வங்கி ஃப்ரீபோர்ட்டின் தலைவராக இருந்தார். ஆடம்ஸுக்கு எட்டு வயதாக இருந்தபோது, 1868 இல் இவர் மறுமணம் செய்து கொண்டார். இவர் அன்னா ஹோஸ்டலர் ஹால்டேமன் என்ம் விதவையினை இரண்டாவதாக மறுமணம் செய்தார்.

உலகில் பயனுள்ள ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பெரிய கனவுகளைத் தனது குழந்தைப் பருவம் முதலாகவே கொண்டிருந்தார்.சார்லஸ் டிக்கின்சின் நூல்களைப் படித்ததிலிருந்தும், தனது தாயின் வளர்ப்பினாலும் இவர் ஏழைகளுக்கு உதவ வேண்டும் எனவும் இவர் தீர்மானித்தார். இதனால் மருத்துவர் ஆக வேண்டும் எனத் தீர்மானித்தார். அப்போது தான் தான் ஏழைகளுடன் இருந்து அவர்களுக்கு உதவ இயலும் என இவர் நினைத்தார். இவர் புனைகதைகளை ஆர்வமுடன் படித்தார்.

ஆடம்ஸின் தந்தை இவரை, உயர்கல்வியைத் தொடர ஊக்குவித்தார், ஆனால் வீட்டிற்கு அருகில் இருந்த,பெண்களுக்கான ஸ்மித் கல்லூரியில் சேர இவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரது தந்தை இல்லினாய்ஸின் ராக்ஃபோர்டில் உள்ள ராக்ஃபோர்ட் பலகலைக் கழகத்தில் சேர்ர்க விரும்பினார்.


மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

ஜேன் ஆடம்ஸ் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜேன் ஆடம்சு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அமைதிஅமைதிக்கான நோபல் பரிசுஐக்கிய அமெரிக்காகுடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்சிகாகோபெண்பெண்கள் வாக்குரிமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் பருவ காலங்கள்வேர்க்குருமருதமலை முருகன் கோயில்வரலாறுசிறுபாணாற்றுப்படைகிழவனும் கடலும்அப்துல் ரகுமான்உலா (இலக்கியம்)அரவான்சிறுதானியம்வளையாபதிஉவமையணிசுப்மன் கில்விஜய் (நடிகர்)இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்மாமல்லபுரம்அவதாரம்காசோலைஇந்திய ரூபாய்கல்விஅபினிதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்மதுரைக் காஞ்சிஇந்திய தேசிய காங்கிரசுபிரியங்கா காந்திதமிழிசை சௌந்தரராஜன்லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்மஞ்சும்மல் பாய்ஸ்தற்கொலை முறைகள்கண் (உடல் உறுப்பு)ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பாவலரேறு பெருஞ்சித்திரனார்கம்பராமாயணம்அம்பேத்கர்குறிஞ்சி (திணை)ஜவகர்லால் நேருதமிழ் எண் கணித சோதிடம்முத்துலட்சுமி ரெட்டிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஉ. வே. சாமிநாதையர்பத்து தலதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்வித்துதசாவதாரம் (இந்து சமயம்)கல்வெட்டுநாலடியார்நீக்ரோஇந்திய நாடாளுமன்றம்பறவைக் காய்ச்சல்தமிழர் நிலத்திணைகள்சென்னைதமிழ்ப் புத்தாண்டுசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இலட்சம்சிவவாக்கியர்வேலுப்பிள்ளை பிரபாகரன்பார்க்கவகுலம்திருவோணம் (பஞ்சாங்கம்)வாட்சப்சேரர்தமிழில் சிற்றிலக்கியங்கள்கபிலர் (சங்ககாலம்)ஆற்றுப்படைநான் அவனில்லை (2007 திரைப்படம்)பெயர்சரத்குமார்ஜலியான்வாலா பாக் படுகொலைபரதநாட்டியம்மழைநீர் சேகரிப்புகொல்லி மலைஷங்கர் (திரைப்பட இயக்குநர்)செங்குந்தர்கொங்கணர்இந்தியக் குடியரசுத் தலைவர்திருப்பாவைஸ்ரீலீலாவிண்டோசு எக்சு. பி.எயிட்சு🡆 More