ஜார்ஜ் கோர்டன் பைரன்

லார்டு பைரன் (Lord Byron) 22 சனவரி 1788 முதல் 19 ஏப்ரல் 1824 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஆவார்.

சியார்ச்சு கார்டன் பைரன், ஆறாம் பாரன் பைரன் என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். பிரிட்டனின் உயர்ப்படி பெருமகனார் என்ற சிறப்புக்குரிய இவர் ஓர் அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கலை, இலக்கிய, அறிவுசார் புனைவிய இயக்கத்தின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிரிட்டனின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக பைரன் மதிக்கப்படுகிறார் . இன்றும் இவரது கவிதைகள் பரவலாகப் படிக்கப்படுவனவாகவும், செல்வாக்கு மிக்கனவாகவும் திகழ்கின்றன. டான் யுவான் மற்றும் சைல்டி அரால்டின் புனிதப்பயணம் போன்ற நீண்ட விளக்கக் கவிதைகளும், அவள் அழகில் நடக்கிறாள் போன்ற குறுகிய தன்னுணர்ச்சிப் பாடல்களும் பைரனின் நன்கு அறியப்பட்ட ஆக்கங்களில் சிலவாகும்.

ஜார்ஜ் கோர்டன் பைரன்
ஜார்ஜ் கோர்டன் பைரன்
பிறப்புபைரன் பிரபு
(1788-01-22)22 சனவரி 1788
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு19 ஏப்ரல் 1824(1824-04-19) (அகவை 36)
மெசோலொங்கி, கிரீஸ்
தொழில்கவிஞர், புரட்சியாளர்
கையொப்பம்
ஜார்ஜ் கோர்டன் பைரன்

ஐரோப்பா முழுவதும் பைரன் பயணம் செய்தார். , குறிப்பாக இத்தாலியில் வெனிசு நகரம், ரவென்னா நகரம் மற்றும் பிசா நகரம் ஆகிய இடங்களில் ஏழு ஆண்டுகள் வசித்துள்ளார். அங்கு அவரது நண்பரும் கவிஞருமான பெர்சி பைசே செல்லியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது . ஓட்டோமான் பேரரசு எனப்படும் உதுமானியப் பேரரசுக்கு எதிரான கிரேக்க சுதந்திரப்போரில் பைரன் பிற்கால வாழ்வில் சில காலம் பங்கேற்றார். இதற்காக கிரேக்க மக்கள் பைரனை ஒரு தேசியத் தலைவராக மதித்தனர் . 1824 ஆம் ஆண்டு மிசோலோங்கி நகராட்சியில் இருந்தபோது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பைரன் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 36 ஆகும்.

பெரும்பாலும் பைரன் மிகவும் பகட்டானவர் என்றும் இழிவானவர் என்றும் விவரிக்கப்பட்டார். ஆடம்பரம், ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஏராளமான காதல்கள், வதந்திகள், கடன்கள், மோசமான தொடர்புகள் போன்றவைகளால் பைரனின் வாழ்வில் போற்றுதல்களும்ம் தூற்றுதல்களும் நிறைந்திருந்தன . சட்டப்படியாக பைரனுக்கு இருந்த ஒரே மகளான அடா லோவெலசு மிகச்சிறந்த கணிப்பொறி நிரலாளர் என்று போற்றப்படுகிறார். சார்லசு பாப்பேச்சின் கனக்கீட்டு இயந்திரத்திற்குத் தேவையான குறிப்புகளைக் கொடுத்தவர் அடா லோவெலசு என்றும் கூறப்படுகிறது . எலிசபெத் மெடோரா லெய்க், அலெக்ரா பைரன் உள்ளிட்டவர்கள் பைரனுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தைகள் ஆவர். அலெக்ரா பைரன் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போனார்.

இளமைக்காலம்

ஜார்ஜ் கோர்டன் பைரன் 
பைரனின் தாயார் கேத்தரீன் கார்டன். படம் - தாமசு சிடீவார்ட்சன்

லார்டு பைரன் 1788 ஆம் ஆண்டு சனவரி 22 இல் இலண்டனில் உள்ள ஓலெசு தெருவிலுள்ள ஒரு வீட்டில் பிறந்தார் என்று அயர்லாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் எத்தெல் கால்பர்ன் மேயன் குறிப்பிடுகிறார். இருப்பினும் இராபர்ட் சார்லசு டல்லாசு அவரது நினைவுகளிலிருந்து பைரன் தென்கிழக்கு இங்கிலாந்தின் தோவர் நகரில் பிறந்தார் என்று கூறுகிறார்.

கேப்டன் யான் மேட் யாக் பைரனுக்கும் அவரது இரண்டாவது மனைவியான கேத்தரீன் கார்டனுக்கும் லார்டு பைரன் மகனாகப் பிறந்தார். கேத்தரீன் கார்டன் இசுக்காட்லாந்தின் அபெர்டீன்சையர் மாகாணத்திலுள்ள கைட்டு தோட்டத்தின் வாரிசான கார்டினல் பீட்டனின் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார் . ஏற்கனவே திருமணமான கார்மார்தான் மாகான நகரின் மணமகளான மார்சனெசை மயக்கி, அவள் தன் கணவனை விவாகரத்து செய்தபிறகு பைரனின் தந்தை அவளை திருமணம் செய்து கொண்டார். பைரனின் தாயரை அவருடைய தந்தை மிருகத்தனமாகவும் குற்றவளியாகவும் கருதி கொடுமைப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இரண்டு மகள்களுக்கு தாயான பின்னர் கேத்தரீன் இறந்துவிட்டார், இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவரே உயிர் பிழைத்து வாழ்ந்தார். அவர் பைரனின் ஒன்றுவிட்ட சகோதரி அகசுடா என்பவராவார். இசுகாட்லாந்தில் இருந்த தனது இரண்டாவது மனைவியின் சொத்துக்களைப் பெறுவதற்காக, பைரனின் தந்தை "கார்டன்" என்னும் கூடுதல் பெயரை சேர்த்துக் கொண்டு யான் பைரோன் கார்டன்" என்று மாறினார். அவர் அவ்வப்போது கைட்டு தோட்டத்தின் யான் பைரன் கார்டன்" என்ற பாணியில் நடந்து கொண்டார். தந்தையின் வழியில் பைரனும் தானே இந்தப் பட்டப்பெயரை ஒரு காலத்தில் பயன்படுத்தினார் அபெர்டீன் பள்ளியிலும் சியார்ச்சு பைரன் கார்டன்" என்று பதிவும் செய்யப்பட்டார். பைரனுக்கு 10 வயதாக இருந்தபோது அவர் தனது குடும்ப இரட்டைப் பட்டப்பெயரை கைவிட்டு லார்டு பைரன் ஆனார்.

துணை கடற்படை அதிகாரியாக இருந்த யான் புல்வேதர் யாக் பைரன் மற்றும் சோபியா ட்ரெவன்சன் ஆகியோர் லார்டு பைரனுடைய தந்தையின் பெற்றோர்களாவர் துணை கடற்படை அதிகாரியான யான் பைரன் உலகளாவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், இவர் மோசமானவன் என்று அழைக்கப்பட்ட 5 ஆம் பாரோன் பைரனின் இளைய சகோதரர் ஆவார்.

1779 ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட இசுகாட்லாந்தின் முதலாம் யேம்சின் பரம்பரையில் வந்தவரான கைட்டின் சியார்ச்சு கார்டனுக்குப் பின்னர் பைரனின் தாய்வழித் தாத்தாவுக்கு சியார்ச்சு கார்டன் பைரன் என்ற பெயர் சூட்டப்பட்டது. புனித மேரில்போன் பாரிசு தேவாலயத்தில் இந்தப் பெயரிடும் நிகழ்ச்சி நடந்தது.

மேட் ஜாக் பைரன் எந்த காரணத்திற்காக முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டாரோ அதே காரணத்திற்காகவே தனது இரண்டாவது மனைவியையும் மணந்தார் , பைரனின் தாயார் தன் புதிய கணவரின் கடன்களை அடைப்பதற்காகத் தனது நிலங்களை விற்க வேண்டியிருந்தது, இதனால் இரண்டு ஆண்டு காலப்பகுதியில் சுமார் £ 23,500 மதிப்புள்ள பெரிய தோட்டம் வீணாகிப் போனது. ஆண்டு வருவாயும் வெகுவாகக் குறைந்தது.தனது கணவரின் கடனாளிகளைத் தவிர்ப்பதற்காக பைரனின் தாயார் கேத்தரின் 1788 ஆம் ஆண்டில் பெருமைமிகு கணவனுடன் பிரான்சிற்குச் சென்றார். ஆங்கில மண்ணில் தனது மகனைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 1787 இல் மீண்டும் இங்கிலாந்திற்கு திரும்பினார். இலண்டனில் உள்ள ஓலெல்சு தெருவில் சனவரி 22 ஆம் தேதி இவர் பிறந்தார்.

1790 ஆம் ஆண்டில் கேத்தரீன், பைரன் தனது குழந்தை பருவத்தை கழித்த அபெர்டீன்சையருக்கு திரும்பினார் . பைரனின் தந்தையும் விரைவில் குயின் தெருவுக்கு வந்து அவ்ர்களுடன் சேர்ந்து கொண்டார். ஆனால் அந்த சோடி விரைவில் பிரிந்தது. கேத்தரின் தொடர்ந்து மனச்சோர்வு அடைந்தார் . கணவர் தொடர்ந்து பணத்தை அவளிடம் இருந்து கடன் வாங்குவதன் மூலம் இச்சோர்வுக்கான காரணத்தை ஓரளவு விளக்க முடியும். கேத்தரீன் தனது கணவரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து கடம்களை அடைத்து தானும் கடனாளியானார். இந்த விடாப்பிடியான கடன்களால் பைரனின் தந்தை பிரான்சிலுள்ள வாலென்சின்னசுக்கு இடம் பெயர்ந்து அங்கு 1791 இல் மரணமடைந்தார்

மோசமான லார்ட் பைரன் எனப்பெயரெடுத்த பைரனின் பெரிய மாமா 1798 ஆம் ஆண்டு மே 21 அன்று இறந்தார், 10 வயதான சிறுவனாக இருந்த பைரன் ரோச்டலேவின் 6 வது பாரோன் பைரன் ஆனார். நாட்டிங்காம்சையரில் இருந்த பூர்வீக வீடு, நியூசுடெட் அபே இவருக்குக் கிடைத்தது. பைரனின் தாயார் கேத்தரீன் பெருமையுடன் அவரை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அபே வீடு ஒரு ஏமாற்றமளிக்கும் நிலையில் இருந்தது. எனவே அங்கு வாழ்வதை விட லார்ட் கிரே டி ரூத்தினுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்தார்.

நியாயம் கிடைக்காதவள் அல்லது சுய சிந்தனை இல்லாத ஒரு பெண் என்று கேத்தரீன் விவரிக்கப்படுகிறார். தனது மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து மூர்க்கத்தனமான பிடிவாதத்தால் அவனது வாழ்வைக் கெடுத்தார். அவளது குடி பழக்கம் பைரனுக்கு வெறுப்பை உண்டாக்கியது. அவளுடைய குள்ளமான , குண்டான உருவத்தை அவர் அடிக்கடி கேலி செய்தார். இதனால் அவளால் அவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கேத்தரீன் ஒருமுறை பழிவாங்கும் நோக்கத்துடன் பைரனை ஒரு நொண்டி என்றும் கேலி செய்துள்ளார் ஆயினும், பைரனின் வாழ்க்கை வரலாற்று நூல் ஆசிரியரான டோரிசு லாங்லி-மூர் 1974 ஆம் ஆண்டு புத்தகத்தில், கேத்தரீனின் பரிவுணர்வு குணங்களை வர்ணிக்கிறார். மதுவின்மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்றாலும் அவளுடைய மகனின் உறுதியான ஆதரவாளராக எப்படி இருந்தார் என்றும் கேம்பிரிட்ச்சிலும் ஆரோவிலும் பைரனுக்காக எவ்வளவு தியாகங்களைச் செய்தார் என்றும் அந்நூலில் விளக்கியுள்ளார்.

லேடி மில்பாங்க் என்று அழைக்கப்பட்ட பைரனின் மாமியார் யூடித் நோயல் 1822 இல் இறந்ததன் பின்னர், அவர் உயிலின்படி இவரது பெயருடன் நோயல் சேர்ந்தது. இதனால் யூடித் நோயலின் அரைபகுதி வீடு மரபுவழியாக இவருக்குக் கிடைத்தது. நோயெல் என்ற பெயரை எடுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்துவதையும் அனுமதிக்கும் ஆணைபத்திரம் இவருக்குக் கிடைத்தது. மேலும், இவருக்குள்ள அனைத்து சிறப்புப் பெயர்களுக்கு முன்னாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் இப்பத்திரம் அவருக்கு வழங்கியது. எனவே இவர் நோயல் பைரன் என்று கையெழுத்திட ஆரம்பித்தார். எனவேதான் இவருக்கான தலைப்பெழுத்துகள் என்.பி என்று குறிப்பிடப்படுகின்றன. இது அவருடைய கதாநாயகன் நெப்போலியன் போனபார்ட்டைக் குறிப்பதாகவும் உள்ளதாகக் கருதுவர்.

ஜார்ஜ் கோர்டன் பைரன் 
மரணப்படுக்கையில் பைரன்

கல்வியும் இளமைக் காதலும்

பைரன் அபெர்டீன் இலக்கண பள்ளியில் ஆரம்பகால கல்விப் படிப்பைப் பெற்றார். பின்னர் 1799 ஆம் ஆண்டு ஆகத்தில் டூல்விச்சில் உள்ள டாக்டர் வில்லியம் கிளென்னியின் பள்ளியில் நுழைந்தார். டாக்டர் பெய்லி கவனிப்பில் வைக்கப்பட்ட பைரன் மிதமான முறையில் பயிற்சிகள் மேற்கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டார். ஆனால் அவரது சிதைந்த பாதத்திற்கு மேலதிகமான முயற்சிகள் மேற்கொள்வதை அவர் தடுக்கவில்லை. 1801 ஆம் ஆண்டில் பைரன் ஆரோவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் சூலை 1805 வரை கல்வி கற்றார். குறிப்பிடத்தக்க ஒரு மாணவராகவும் திறமையற்ற கிரிக்கெட் வீரராகவும் விளங்கிய பைரன் லார்ட்சில் நடைபெற்ற முதல் ஏட்டோனுக்கு எதிராக ஆரோ விளையாடிய கிரிக்கெட் போட்டியில் 1805 ஆம் ஆண்டில் தனது பள்ளிக்காக விளையாடினார் .

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

ஜார்ஜ் கோர்டன் பைரன் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
George Gordon Byron
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஜார்ஜ் கோர்டன் பைரன் இளமைக்காலம்ஜார்ஜ் கோர்டன் பைரன் கல்வியும் இளமைக் காதலும்ஜார்ஜ் கோர்டன் பைரன் மேற்கோள்கள்ஜார்ஜ் கோர்டன் பைரன் புற இணைப்புகள்ஜார்ஜ் கோர்டன் பைரன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிறிஸ்தவம்தமிழ் எழுத்து முறைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்காந்தள்பெயர்உடுமலைப்பேட்டைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அரச மரம்கோவிட்-19 பெருந்தொற்றுஅகத்தியர்சுரைக்காய்அயோத்தி இராமர் கோயில்கலம்பகம் (இலக்கியம்)ஆண்டு வட்டம் அட்டவணைபாண்டியர்ஆறுதிதி, பஞ்சாங்கம்இராவணன்இந்தியாவில் இட ஒதுக்கீடுஅறம்சாத்துகுடிஅவதாரம்பௌத்தம்தேவிகாஇந்திய ரிசர்வ் வங்கிகாம சூத்திரம்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)போயர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மூவேந்தர்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மரவள்ளிபுவிசார்பெழுத்துஅளபெடைகுமரகுருபரர்கண் (உடல் உறுப்பு)பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்வைரமுத்துகுகேஷ்மணிமேகலை (காப்பியம்)முத்துலட்சுமி ரெட்டிகம்பராமாயணத்தின் அமைப்புமலையாளம்கருத்தடை உறைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சச்சின் (திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்ஆகு பெயர்பல்லவர்இன்ஸ்ட்டாகிராம்நிணநீர்க் குழியம்விஜய் (நடிகர்)அதிமதுரம்செவ்வாய் (கோள்)வேதாத்திரி மகரிசியாதவர்மார்க்கோனிஇரட்டைக்கிளவிதாயுமானவர்புதினம் (இலக்கியம்)ருதுராஜ் கெயிக்வாட்சிவனின் 108 திருநாமங்கள்அருணகிரிநாதர்சுயமரியாதை இயக்கம்ஆய்த எழுத்து (திரைப்படம்)புதுக்கவிதைகடல்நற்றிணைசடுகுடுஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்முத்தொள்ளாயிரம்குறுந்தொகைகருச்சிதைவுஅவுரி (தாவரம்)வேளாண்மைதமிழ்த்தாய் வாழ்த்து🡆 More