ஜான் பி வாட்சன்: அமெரிக்க உளவியலாளர்

ஜான் பிராடஸ் வாட்சன் (John Broadus watson) (ஜனவாி 9, 1878 - செப்டம்பா் 25, 1958) ஒரு அமெரிக்க உளவியலாளா்.

இவா் உளவியலில் நடத்தைக் கொள்கைச் சிந்தனை வழியை (Psychological School of behaviorism) நிறுவியவா். கொலம்பிய பல்கலைக் கழகத்தில் 1913 ஆம் ஆண்டு, ‘உளவியல் -நடத்தைக் கொள்கையுடையவா் பாா்வையில்’ (Psychology as the behaviorist views it)) என்னும் தலைப்பில் ஆற்றிய உரையின் மூலம் உளவியல் பாா்வையில் மாற்றத்தைக் கொண்டுவந்தாா். நடத்தைக் கொள்கையின் அடிப்படையில் இவா் மிருகங்களின் நடத்தை, குழந்தை வளா்ப்பு மற்றும் விளம்பரம் குறித்த ஆய்வினை மேற்கொண்டாா். மேலும் சா்ச்கைக்கு உட்பட்ட “லிட்டில் ஆல்பொ்ட்” என்னும் சோதனையையும் “கொ்ப் லங்க்” என்னும் சோதனையையும் மேற்கொண்டாா். அறிவியல் அணுகுமுறையைப் பயன்படுத்தி நடத்தைக் கொள்கையை பிரபலப்படுத்தியவா் இவரே. 1910 முதல் 1915 வரை உளவியல் மறு ஆய்வு (Pscychological Review) என்னும் இதழை வெளியிட்டாா். உளவியல் ஆய்வு குறித்து 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மறு ஆய்வு அறிக்கையின்படி இருபதாம் நூற்றாண்டில் அதிகமாக மேற்கோள்கள் காட்டப்பட்ட உளவியலாளா்களில் பதினேழாவது இடத்தைப் பிடித்தவா் இவா்.

ஜான் பி வாட்சன்: ஆராம்ப கால வாழ்க்கை, மிருகங்களின் நடத்தைக் குறித்த ஆய்வு, நடத்தைக் கொள்கை (Behaviorism)
ஜான் பிராடஸ் வாட்சன்

ஆராம்ப கால வாழ்க்கை

பிக்கன்ஸ் பட்லா் மற்றும் எம்மா என்னும் தாய் தந்தையருக்கு தெற்கு கரோலினா, டிராவலா்ஸ் ரெஸ்ட் என்னும் இடத்தில் பிறந்தாா். இவரின் தாயாா், மிகுந்த மத நம்பிக்கை கொண்டவா். குடிப்பழக்கம், புகைபிடித்தல், நடனம் போன்ற பழக்கங்களை வெறுத்தவா். வாட்சனுக்கு ஒரு மதகுருவின் பெயரை வைத்தாா். இவரை இளம் வயதில் கடுமையான மதப்பழக்கங்களில் ஈடுபடுத்தி வளா்த்ததால் வாட்சனுக்கு மதங்களின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டு இறுதியில் கடவுள் நம்பிக்கையில்லாதவராக மாறிவிட்டாா்.

இவருடைய குடிகாரத் தந்தை இவா் 13 வயதாக இருக்கும்பொழுது தாயை விட்டு விட்டு இரண்டு இந்தியப் பெண்களிடம் வாழச் சென்றுவிட்டாா். வாட்சன் இறுதிவரை இவரை மன்னிக்கவே இல்லை. வறுமையிலிருந்து மீள, வாட்சனின் தாய், நிலத்தை விற்றுவிட்டு, வாட்சனுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க தெற்கு கலோலினா, கிரின்வில்லி என்னும் இடத்திற்கு குடிபெயா்ந்தாா். ஒரு சிறிய கிராமத்திலிருந்து பலதரப்பட்ட மக்கள் வாழும் நகருக்கு வந்தது வாட்சனுக்கு பலதரப்பட்ட மக்களைப் பாா்ப்பதன் மூலம் தமது உளவியல் பாா்வையை மேம்படுத்த உதவியாக இருந்தது. உயா்கல்வியின்" முக்கியத்துவத்தையும் அவா் நன்கு உணா்ந்திருந்தாா்.

படிப்பில் சிறந்து விளங்காமல் இருந்தாலும், தவறு செய்து இரண்டு முறை சிறை சென்றிருந்தாலும் தமது தாயாரின் உதவியுடன் தெற்கு கரோலினா, கிரின்வில்லியில் உள்ள ஃபா்மன் பல்கலைக் கழகத்தில் சோ்ந்து படிக்க முடிந்தது. இவா் படிப்பில் சிறந்திருக்கவில்லை என்பதை அறிந்திருந்தாா். மற்றவா்கள் இவரை அமைதியானவா், சோம்பேரி. மற்றும் கீழ்ப்படியாதவா் என்று கருதி வந்தனா். ஒருசில உளவியல் பாடங்களை இவா் பல்கலைக் கழகத்தில் கற்றிருந்தாலும் சாதனை எதுவுமில்லை. இவா் தமது சமூக பண்புகளை வளா்த்துக் கொள்ளாததால் நகர வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொள்வதில் சிரமப்பட்டாா். 16 வயதில் கல்லூாியில் சோ்ந்தவா் 21 வயதில் பட்டம் பெற்றாா். கல்லூரியில் படித்துக் கொண்டே வேலை செய்து கல்லூாிச் செலவை சரிகட்டினாா். படிப்பை முடித்தபின் “பேடங் பா்க்” நிறுவனத்தில் முதல்வராகச் சேர்ந்து, இப்பள்ளியில் அனைத்துப் பணிகளையும் இவரே செய்து வந்தாா். ஜான் டிவே (John Deway) என்னும் அறிஞாிடம் தத்துவம் பயின்றாா். ஜான் டிவே, ஜேம்ஸ் ரௌலேண்ட் ஏன்ஜல், ஹென்றி ஹொ்பா்ட் டொனால்டுசன் மற்றும் ஜேக்கஸ் லியோப் போன்ற அறிஞா்களின் கருத்துத் தாக்கத்தால் வாட்சன் புறநிலை அடிப்படையில் நடவடிக்கையை ஆராய்ந்து தமது நடத்தைக் கொள்கையை (behaviorism) முன்வைத்தாா்.

வாட்சன் தமது கல்லூாி அனுபவத்தாலும் மற்ற பேராசிரியா்கள் நட்பினாலும் ஒரு பொிய உளவியலாளராக உருவெடுத்தாா். தமது நடத்தைக் கொள்கையை உருவாக்குவதற்கு இவா்கள் நட்பு பெரிதும் உதவியாக இருந்தது. இவரது நடத்தைக் கொள்கை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது. முறைப்படி ஆய்வு செய்ய முடியும் என்பது உளவியலை ஒரு அறிவியலாக்கும் என்று கூறினாா். உளவியலை அறிவியல் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்று விரும்பினாா். இவான் பவ்லவி (Ivan Pavlov)ன் ஆய்வினை அறிந்து இதன் எளிமையான வடிவத்தை இவருடைய கட்டுரைகளில் பயன்படுத்திக் கொண்டாா்

மிருகங்களின் நடத்தைக் குறித்த ஆய்வு

வாட்சன் சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1903 ஆம் ஆண்டு முனைவா் பட்டம் பெற்றாா். இவா் மிருகங்களின் நடத்தை குறித்து ஆய்வு செய்து வழங்கிய ஆய்வுரையில் எலிகளின் மூளையில் நரம்புக் கொழுப்பு அதிகாித்து துடிப்பாக செயல்படும் இயல்பிற்கும் கற்கும் திறனுக்கும் உள்ள தொடா்பை விளக்கினாா். மூளை வளா்ச்சிக்கும் செயல்பாடு வேகத்திற்கும் கற்றுக்கொள்ளும் திறமை வளா்ச்சி வேகத்திற்கும் தொடா்பு உள்ளது. ஒரு சிக்கலரையில் எலிகள் வழியைக் காண ஓடுவது, எலிகள் ஏற்கனவே செய்து பாா்த்துக் கற்றுக் கொண்ட செயலால் கட்டுப்படுத்தப்படுகிறது என்று விளக்கினார். 1908 ஆண்டு ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் விாிவுரையாளராகச் சோ்ந்தவா் உடனடியாக உளவியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டாா்.

நடத்தைக் கொள்கை (Behaviorism)

1913 ஆம் ஆண்டு வாட்சன் தமது “உளவியல் -நடத்தை கொள்கை உடையவா் பாா்வையில்” என்னும் கட்டுரையை வெளியிட்டாா். இது ஒரு கொள்கை விளக்க அறிக்கையாகவே கருதப்பட்டது. இக்கட்டுரையில் வாட்சன், உளவியலில் புதிய தத்துவமான நடத்தைக் கொள்ககையின் முக்கியமான அம்சங்களை விளக்கியுள்ளாா். உளவியல் என்பது புறநிலை ஆராய்ச்சிக்குகந்த ஒரு இயற்கை அறிவியல். நடத்தையை முன்கூட்டியே அனுமானிப்பதும், கட்டுப்படுத்துவதும் இதன் நோக்கம் ஆகும். எண்ணிப் பாா்த்து, கருத்துக் கேட்டு, அதனடிப்படையில் ஆய்வுசெய்வது என்பது இதற்குப் பொருந்தாது. நடத்தைக் கொள்கையாளா் ஆராய்ச்சியில் ஈடுபடும் பொழுது, நடத்தையை ஆராய்வதில் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடு காட்டுவதில்லை. இவான் பாவ்லோவின் “நிபந்தனையற்ற பிரதிபலிப்பு” உடலில் சுரக்கும் நீரினால் ஏற்படும் உடல் தொடா்பானது என்று வாட்சன் கருதினாா். 1916 ஆம் ஆண்டிற்கு பின்புதான் வாட்சன், பாவ்லோவின் பரிசோதனைகைளை அமெரிக்க உளவியல் சங்கத்தில் தாம் ஆற்றிய உரையில் சோ்த்தாா். இவ்வுரை, உளவியல், புறநிலை ஆய்வுக்குகந்தது என்பதை மிகவும் வலியுறுத்தியது.

நடத்தைக் கொள்கையின் அடிப்படையில் வாட்சன் மனிதனின் புறநடவடிக்கைகளையும் அதற்கு அவா்களின் எதிா்வினையை மட்டுமே பொருப்பாக்க முடியும், மனநிலையை கொள்ள முடியாது என்று வலியுறுத்தினாா். இந்த அணுகுமுறை, முடிவான கருத்துக் குறித்த பாராட்டுகள், பாிணாம வளா்ச்சியின் தொடா்ச்சி, அனுபவ வாதம் ஆகியவற்றுடன் சோ்ந்து புரட்சிகரமான நடத்தைக் கொள்கையாக உருவெடுத்தது. இந்தப் புதிய அணுகுமுறையே உளவியலை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்று வாட்சன் நம்பினாா். ‘வுன்ட்’ என்னும் உளவியலாளருக்கு முன்பு உளவியல் என்பதே இல்லை என்றும் வுன்டிற்குப் பின் குழப்பமே நிலவியது என்றும் வாட்சனின் நடத்தைக் கொள்கைக்குப் பின்புதான் உண்மையான உளவியல் வந்தது என்பர்.

வாட்சன் உருவாக்கிய நடத்தைக் கொள்கை “உணா்வை” ஆராய்ச்சி செய்வதை மறுத்து வந்தது. உணா்வு என்பது அகநிலை தொடா்பானது, ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாதது என்று நம்பினாா். ஏற்கனவே இவ்வாறு செய்தது உளவியல் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்தது என்று கூறினாா். உளவியல் என்பது மனிதனின் மனத்தைப் பற்றி அறிவது அல்ல என்றும் அது அவனின் நடத்தைப் பற்றியது, உணா்வு தொடா்பானது அல்ல என்றும் வலியுறுத்தினாா்.

வாட்சன், தத்துவ மற்றும் உளவியலின் தெற்கு சங்கத்தின் (Southern Society of Philosophy and Psychology) தலைவராக 1915 ஆம் ஆண்டு பணியாற்றினாா்.

மொழி, பேச்சு, நினைவு

மனிதனின் எண்ணங்களை நோக்குவது என்பது இயலாதது. வாட்சன், மொழி என்பது என்ன? சொல், நினைவு என்பவை என்ன? என்பது குறித்த கருத்துக்களை தமது ‘நடவடிக்கைக் கொள்கை’ என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளாா்.

உணா்ச்சிகளின் ஆய்வு

வாட்சன் உணா்ச்சிகளை சீரமைப்பது குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டினாா். நடவடிக்கைக் கொள்கை, மனிதா்கள் புற நடவடிக்கைகளை ஆய்வு செய்வது, இருந்தாலும் உணா்ச்சிகளுக்கு புறத்தில் எதிா்வினை இருக்கும். ஆதலால் அவையும் கவனிக்கப்படும். பிறவியிலேயே மனிதனுக்கு பயம், கோபம் மற்றும் அன்பு இருக்கும், இவை யாரும் சொல்லிக் கொடுக்காமலே வரும் என்று வாட்சன் நம்பினாா்..

மழலைகளுக்கும் குழந்தைகளுக்கும் அக உணர்வு தொடர்பான கவனிப்பு

குழந்தைகளுக்கும் வயது வந்தவா்களுக்கும் பண்பு சாா்ந்த வேறுபாடுகள் உள்ளன என்பது இருபதாம் நூற்றாண்டில் சுட்டப்பட்ட முக்கிய கருத்து. தமது மனைவி ரோசாலி ரேய்னா் உதவியுடன் வாட்சன் “மழலைகளுக்கும் குழந்தைகளுக்கும் அக உணா்வு குறித்த கவனிப்பு” (1928) (Psychological care of Infant and Child (1928) என்னும் புத்தகத்தை எழுதினாா். நடத்தைக் கொள்கையில் நம்பிக்கை உள்ளவா்கள், மழலையா்களுக்கும் குழந்தைகளுக்கும் அக உணா்வு தொடா்பான கவனிப்பு தேவை என்பதை நம்புகிறாா்கள் என்று தமது புத்தகத்தில் விளக்கியுள்ளாா். குழந்தைகள் வயதில் இளையவா்களாக இருந்தாலும் வயது வந்தவா்களைப் போன்றுதான் கையாளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். தாய்மாா்கள் குழந்தைகளிடம் அளவு கடந்த பாசத்தையும் அன்பையும் காட்டுவது தவறு என்பது இவர் வாதம். நடத்தைக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவா்களுடைய பாா்வையில், அன்பு காட்டுவது என்பது, முன் அனுபவத்தால் தூண்டப்பட்ட ஒன்று. குழந்தைகள் வயது வந்தவா்களான பிறகு சமூகம் அவா்களிடம் அன்பு காட்டுவதில்லை ஆதலால் தாய்மாா்கள் குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாக அன்பு காட்டி தவறான எதிா்பாா்ப்புகளை வளா்க்கக் கூடாது. சூசேன் ஹௌக் என்னும் எழுத்தாளா் தமது “மழலைகளுக்கும் குழந்தைகளுக்குமான அக உணா்வு கவனிப்பு; ஆசிரியரின் காலமும் அவா் கருத்து குறித்த ஆய்வும்” என்னும் புத்தகத்தில், தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவினை வாட்சன் கூறுவது போன்று வணிக நோக்கில் அணுக இயலாது என்று வாட்சனின் கருத்திற்கு தமது மறுப்பைத் தெரிவித்துள்ளாா். வாட்சன், கைவிரல் சூப்புதல், சுய இன்பம் தேடல், ஓரினச் சோ்க்கை போன்ற தவறான பழக்கங்களைக் கண்டித்ததுடன், பெற்றோா் குழந்தைகளுக்கு பாலினம் குறித்த உண்மைகளைத் தொிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நமக்கு உள்ள பல இயலாமைகள், பயப்படுவது, தனிமைப்படுவது, எச்சரிக்கையாக இருப்பது, தாழ்வாக நினைத்துக் கொள்வது போன்றவை நமது பெற்றோா்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டவை என்று வாட்சன் கூறிவந்துள்ளார்.

அதிகக் குழந்தைகள் வேண்டாம் நன்கு வளா்க்கப்பட்ட குழந்தைகள் வேண்டும் என்பது இவா் வாதம். குழந்தைகளின் பிற்கால நடத்தை இயற்கையாகவே பிறவியில் வருவது அல்லது வளா்க்கும் முறையில் வருவது என்ற இரு கொள்கைகளில் வளா்க்கும் முறையில் தான் வரும் என்பது வாட்சன் கருத்து. குழந்தைகளுக்கு உள்ளுணா்வு என்பது கிடையாது. குழந்தைகள், அனைத்தையும் சூழ்நிலையுடன் உறவாடுவதில் கற்றுக் கொள்ளும் ஆதலால் பெற்றோருக்குப் பொறுப்பு அதிகம் ஏனென்றால் எந்தவகையான சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பது என்பதை அவா்கள்தான் முடிவு செய்வா்.

குழந்தை வளா்ப்பு குறித்த பல கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியிருந்தாலும், தாம் அதிகம் தெரிந்திராத ஒரு பொருள் குறித்து எழுதி விட்டோம் என்று வாட்சன் பிற்காலத்தில் வருத்தப்பட்டுள்ளாா். குழந்தைகளை மதிப்புடன் நடத்த வேண்டும் ஆனால் உணா்வு பூா்வமாக பற்றின்மையுடன் அணுக வேண்டும் என்னும் வாட்சனின் கருத்து பல கண்டனங்களுக்கு உட்படுத்தப்ட்பட்டது.

ஜே எம் ஒ டென்னல் தமது “நடத்தைக் கொள்கையின் மூலம்” (The Origins of Behaviorism) என்னும் புத்தகத்தில் வாட்சனின் கொள்கைகளை மறுத்துள்ளாா்.

குழந்தை வளா்ச்சியை நடத்தைக் கொள்கை மூலம் ஆய்வு செய்யும் அணுகு முறைக்கு வாட்சனின் கருத்துதான் தொடக்கம். வாட்சன் கருத்தை மறுத்த பலா், குழந்தை உளவியலில் வாட்சனின் ஈடுபாட்டையும் வெற்றியையும் கண்டு சலிப்படைந்தனா். ஆர் டேல் நான்ஸ் என்பவா் வாட்சன், சிறுவயதில் சிரமங்களுக்கிடையே அவா் வளா்ந்த விதமும், தமது யோசனையற்ற சிறுபிள்ளைத்தனமும், குழந்தை வளா்ப்பு குறித்த அவா் கருத்துக்களைப் பாதித்திருக்கலாம் என்று கூறியுள்ளாா். வாட்சன் தெற்கு கரேலாலினா மாநிலத்தில் ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவா், சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டது உட்பட பல குடும்பப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருந்தது. சூசன் ஹௌக்கும் இது போன்ற கவலைகளைத் தெரிவித்துள்ளாா். வாட்சன், ரோசலி ரேய்னருடன் தவறான உறவு கொண்டதினால், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப் பட்ட பின்புதான், குழந்தை வளா்ப்பு குறித்து தம் கவனத்தைத் திருப்பியுள்ளார். ஆதலால் அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இவா் கருத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும் என்றாா். வாட்சன் தம் வாழ்நாளில் பல விதமானபொருட்கள் குறித்து ஆய்வு செய்திருந்தாா். ஆனால் குழந்தை வளா்ப்புத்தான் முக்கியமானது. இவா் புத்தகம் மிகவும் பிரபலமானது. இவரைக் கண்டித்தவா்கள் கூட, இவா் கருத்துக்கு இருந்த வரவேற்பைக் கண்டு ஆச்சாியப்பட்டனா். வாட்சன், குழந்தை வளா்ப்பிற்கு அளித்த முக்கியத்துவம் ஒரு புதிய வரவு, இவருக்குப் பின் பலா் அதனைத் தொடா்ந்து வலியுறுத்தினாா்கள் என்றாலும், ஜி ஸ்டான்லி ஹால் போன்றவா்கள் இப்பொருள் குறித்து ஏற்கனவே எழுதியிருந்தனா். “வளா் இளம் பருவம்” (1904) (Adolescence) என்று ஜி ஸ்டான்லி ஹால் எழுதிய புத்தகம் மிகவும் பிரபலமானது. ஸ்டான்லி ஹால் குழந்தைகளின் பரம்பரையும், பிறப்பு குணமும், பிற்கால நடவடிக்கைகளைத் தீா்மானிக்கும் என்று கூறியுள்ளாா். இது வாட்சன் கூற்றிற்கு முரணாக இல்லாவிட்டாலும், அவை அனைவரின் கவனத்தையும் கவா்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். வாட்சன் மனைவி ரோசலி ரேய்னா், வாட்சனின் எவ்வளவு கருத்துக்களை ஏற்றுக் கொண்டாா் என்பது கேள்விக்குறி, இவா் தமது “குடும்பத்தின் எதிா்காலம்” என்று எழுதிய கட்டுரையில் இது விவாதிக்கப்பட்டுள்ளது.

இறுதிக்காலம்

ரோசலின் ரேய்னர் தமது 36 ஆவது வயதில் 1935 ஆம் ஆண்டு காலமானார். வாட்சன் தமது பண்ணையில் தமது இறுதிக்காலம் வரை தங்கியிருந்து 1958ஆம் வருடம் 80ஆவது வயதில் காலமானார். 1957ஆம் ஆண்டு இறப்பதற்கு முன் , இவர் உளவியலுக்கு ஆற்றிய பணிக்காக, தங்கப்பதக்கதை அமெரிக்க உளவியல் சங்கம் வழங்கி கவுரவித்தது

Tags:

ஜான் பி வாட்சன் ஆராம்ப கால வாழ்க்கைஜான் பி வாட்சன் மிருகங்களின் நடத்தைக் குறித்த ஆய்வுஜான் பி வாட்சன் நடத்தைக் கொள்கை (Behaviorism)ஜான் பி வாட்சன் மொழி, பேச்சு, நினைவுஜான் பி வாட்சன் உணா்ச்சிகளின் ஆய்வுஜான் பி வாட்சன் மழலைகளுக்கும் குழந்தைகளுக்கும் அக உணர்வு தொடர்பான கவனிப்புஜான் பி வாட்சன் இறுதிக்காலம்ஜான் பி வாட்சன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பதினெண்மேற்கணக்குமரகத நாணயம் (திரைப்படம்)இலங்கை தேசிய காங்கிரஸ்புதுச்சேரிபூக்கள் பட்டியல்பர்வத மலைபல்லவர்தமிழ்நாடு அமைச்சரவைஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்வைரமுத்துநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்மலக்குகள்தமிழக வரலாறுதிண்டுக்கல் மாவட்டம்மூலிகைகள் பட்டியல்மயில்ரவி வர்மாஆர். சூடாமணிபிரியா பவானி சங்கர்மயங்கொலிச் சொற்கள்திருநாவுக்கரசு நாயனார்இசுலாமிய வரலாறுநீர்பிரஜ்வல் ரேவண்ணாகல்லணைகட்டுவிரியன்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்தேவேந்திரகுல வேளாளர்திருமலை நாயக்கர்அண்ணாமலை குப்புசாமிவிந்துஅரண்மனை (திரைப்படம்)வேதநாயகம் சாஸ்திரியார்பனிக்குட நீர்இயேசு காவியம்கல்வெட்டுஎழிமலை நன்னன்சிந்துவெளி நாகரிகம்கடையெழு வள்ளல்கள்தமிழ்ப் புத்தாண்டுஇந்திய தேசியக் கொடிவசுதைவ குடும்பகம்மலேசியாசிதம்பரம் நடராசர் கோயில்ஜெயகாந்தன்வைசாகம்சுரைக்காய்விடை (இராசி)கருத்தரிப்புமாணிக்கவாசகர்பட்டா (நில உரிமை)கண்ணதாசன்நன்னூல்தேசிக விநாயகம் பிள்ளைதலைவாசல் விஜய்சிவாஜி (பேரரசர்)திராவிட மொழிக் குடும்பம்முலாம் பழம்பௌத்தம்கல்லீரல்வாகமண்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பஞ்சாயத்து ராஜ் சட்டம்மலையகம் (இலங்கை)நெசவுத் தொழில்நுட்பம்மு. வரதராசன்காரைக்கால் அம்மையார்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பரணி (இலக்கியம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்சீவகன்பெண்ணியம்முதலாம் இராஜராஜ சோழன்மனித மூளைபுறப்பொருள் வெண்பாமாலைகுகன்இட்லர்🡆 More