ஜனக்பூர்

ஜனக்பூர் (Janakpur) நேபாளி: जनकपुर) நேபாள மாநில எண் 2-இல் அமைந்த தனுசா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.ஜனக்பூர் நகரத்தில் புகழ் பெற்ற ஜானகி கோயில் அமைந்துள்ளது.

இந்நகரம் நேபாளத்தின் ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுச் சுற்றுலாத் தலமாகும்.இந்தியாவின் பீகார் - நேபாள எல்லையில் அமைந்த ஜனக்பூர் நகரம், பாட்னாவிலிருந்து 180 கிமீ தொலைவிலும்; அயோத்திலிருந்து 520 கிமீ தொலைவிலும் உள்ளது.

ஜனக்பூர்
जनकपुर
நகரம்
ஜானகி கோயில்
அடைபெயர்(கள்): மிதிலை
குறிக்கோளுரை: சமயம் & பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நகரம்
ஜனக்பூர் is located in நேபாளம்
ஜனக்பூர்
ஜனக்பூர்
நேபாளத்தில் ஜனக்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 26°43′43″N 85°55′30″E / 26.72861°N 85.92500°E / 26.72861; 85.92500
நாடுநேபாளம்
மண்டலம்ஜனக்பூர் மண்டலம்
மாநிலம்நேபாள மாநில எண் 2
மாவட்டம்தனுஷா மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்100.20 km2 (38.69 sq mi)
ஏற்றம்74 m (243 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்169,287
 • அடர்த்தி1,700/km2 (4,400/sq mi)
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
அஞ்சல் சுட்டு எண்45600
தொலைபேசி குறியீடு041
இணையதளம்http://janakpurmun.gov.np

மிதிலையை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டு மன்னர் ஜனகரின் பெயரால், கிபி 18ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்ட ஜனக்பூர் நகரத்தை ஜனக்பூர்தாம் என்றும் அழைப்பர்.

ஜனக்பூர் நகரம் நேபாள தேசியத் தலைநகரம் காட்மாண்டிலிருந்து தென்கிழக்கே 123 கிமீ தொலைவில் உள்ளது.2015ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை 1,69,287 ஆக இருந்தது.

வரலாறு

புனித யாத்திரை தலமான ஜனக்பூர் நகரம் 1805ல் நிறுவப்பட்டது. இந்து தொன்மவியலின் இராமாயணக் காவியத்தில் மன்னர் ஜனகரின் அரண்மனை விதேக நாட்டின் தலைநகரான ஜனக்பூரில் அமைந்திருந்தது.

சீதையின் சுயம்வரத்திற்காக இராமர் முறித்த வில், ஜனக்பூரின் வடமேற்கில் தொல்லியல் ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. ஜனக்பூரில் சீதையின் நினைவாக ஜானகி கோயில் நிறுவப்பட்டுள்ளது.

1950 வரை ஜனக்பூர் சிறு கிராமமாக இருந்தது. பின்னர் வளர்ச்சி அடைந்து நகராட்சியான ஜனக்பூர், 1960 முதல் தனுஷா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாக செயல்படுகிறது.

கி மு 600க்கும் முந்தைய சதபத பிராமண சாத்திரத்தில், மிதிலையின் மன்னர் மாதவ விதேகன் என்பவர் விதேக நாட்டை நிறுவியதாக கூறப்பட்டுள்ளது. கௌதம புத்தரும், மகாவீரரும் ஜனக்பூரில் சிறிது காலம் ஜனக்பூர் நகரத்தில் வாழ்ந்ததாக, பௌத்த, சமண சாத்திரங்கள் கூறுகிறது. மிதிலை பிரதேசத்தில் முக்கிய வணிக மையமாக ஜனக்பூர் நகரம் திகழ்ந்திருந்தது.

புவியியல் & தட்ப வெப்பம்

நேபாளம்|நேபாளத்தின்]] தெற்கு பகுதியில், வெளித் தராய் சமவெளியில், இந்திய எல்லையை ஒட்டி அமைந்த ஜனக்பூர் நகரம் உள்ளது. இந்நகரத்தில் ஏப்ரல் முதல் சூன் வரை கோடைக்காலமும்; சூலை முதல் செப்டம்பர் முடிய மழைக்காலமும்; அக்டோபர் முதல் ஜனவரி முடிய கடுங்குளிர் காலமுமாக உள்ளது.

ஜனக்பூரில் பாயும் முக்கிய ஆறுகள்: தூத்மதி, ஜலாத், ராதே, பாலன் மற்றும் கமலா ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜனக்பூர் விமான நிலையம் (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 22.2
(72)
26.0
(78.8)
31.2
(88.2)
34.8
(94.6)
34.6
(94.3)
34.1
(93.4)
32.5
(90.5)
32.7
(90.9)
32.3
(90.1)
31.7
(89.1)
29.3
(84.7)
25.1
(77.2)
30.5
(86.9)
தினசரி சராசரி °C (°F) 15.6
(60.1)
18.6
(65.5)
23.4
(74.1)
27.7
(81.9)
29.3
(84.7)
30.0
(86)
29.3
(84.7)
29.6
(85.3)
28.8
(83.8)
26.8
(80.2)
22.5
(72.5)
18.0
(64.4)
25.0
(77)
தாழ் சராசரி °C (°F) 9.1
(48.4)
11.3
(52.3)
15.5
(59.9)
20.6
(69.1)
24.0
(75.2)
25.9
(78.6)
26.1
(79)
26.4
(79.5)
25.3
(77.5)
22.0
(71.6)
15.7
(60.3)
10.9
(51.6)
19.4
(66.9)
பொழிவு mm (inches) 11.7
(0.461)
11.4
(0.449)
11.5
(0.453)
52.2
(2.055)
128.3
(5.051)
238.7
(9.398)
487.6
(19.197)
339.4
(13.362)
197.5
(7.776)
63.9
(2.516)
1.9
(0.075)
8.4
(0.331)
1,552.5
(61.122)
ஆதாரம்:

பொருளாதாரம்

நேபாளத்தின் வேகமாக வளரும் நகரஙகளில் ஒன்றான ஜனக்பூரில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளது. சுற்றுலாத் துறை ஜனக்பூரின் முக்கிய வருவாய் ஆகும். மைதிலி மொழி பேசும் பெண்களின் தயாரிப்புகளான, மதுபனி கலைநயத்துடன் கூடிய ஓவியங்கள், மட்பாண்டங்கள் புகழ் பெற்றது.

போக்குவரத்து

ஜனக்பூர் 
ஜனக்பூர் தொடருந்து நிலையத்தில் நிற்கும் தொடருந்து
ஜனக்பூர் 
ஜனக்பூர் வானூர்தி நிலையம்

நேபாள இரயில்வே நிறுவனம், ஜனக்பூர் நகரத்தை இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ஜெய்நகரத்துடன் தொடருந்துகள் மூலம் இணைக்கிறது.

ஜனக்பூர் விமான நிலையம், காட்மாண்டுவுடன் வானூர்திகள் மூலம் இணைக்கிறது.

மக்கள் தொகையியல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜனக்பூர் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 97,776 ஆகும். ஜனக்பூரின் நகரப்புறத்தில் 11 கிராமங்கள் உள்ளது. ஜனக்பூர் நேபாளத்தின் ஆறாவது பெரிய நகரமாகும். இந்நகரத்தில் மைதிலி மொழி முக்கிய மொழியாகவும் மற்றும் நேபாள மொழி, போஜ்புரி மொழி, அவதி மொழி மற்றும் இந்தி மொழிகளும் பேசப்படுகிறது.

கோயில்கள்

ஜனக்பூர் 
இராம-இலக்குமணர்கள் நடுவில் சீதையும், காலடியில் அனுமாரும்
ஜனக்பூர் 
சாத் திருவிழா, ஜனக்பூர்

ஜனக்பூரின் நடுவில் புகழ் பெற்ற ஜானகி கோயில் 1898இல் ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

ஜனக்பூரின் பழையான இராமர் கோயில் கூர்க்கா படைவீரர் அமர் சிங் தாபா என்பவரால் கட்டப்பட்டது. சிறப்பு நாட்களில், இங்குள்ள கங்கா சாகர், தனுஷ் சாகர் போன்ற 200 புனிதக் குளங்களில் மக்கள் கூட்டமாக கூடி நீராடுவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜனக்பூர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Janakpur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஜனக்பூர் வரலாறுஜனக்பூர் புவியியல் & தட்ப வெப்பம்ஜனக்பூர் பொருளாதாரம்ஜனக்பூர் போக்குவரத்துஜனக்பூர் மக்கள் தொகையியல்ஜனக்பூர் கோயில்கள்ஜனக்பூர் இதனையும் காண்கஜனக்பூர் மேற்கோள்கள்ஜனக்பூர் வெளி இணைப்புகள்ஜனக்பூர்அயோத்திஜானகி கோயில்தனுஷா மாவட்டம்நகராட்சிநேபாள மாநில எண் 2நேபாளம்நேபாளிபாட்னாபீகார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மாலை நேரத்து மயக்கம்சுப்பிரமணிய பாரதிஆதம் (இசுலாம்)மண்ணீரல்வல்லினம் மிகும் இடங்கள்மேகாலயாதிருவாதிரை (நட்சத்திரம்)நாயன்மார்செங்குந்தர்சிவனின் 108 திருநாமங்கள்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்வாரிசுஅண்ணாமலையார் கோயில்திருக்குறள்சோழர்அமேசான் பிரைம் வீடியோதிருத்தணி முருகன் கோயில்தேவநேயப் பாவாணர்மியா காலிஃபாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சூரியக் குடும்பம்நாம் தமிழர் கட்சிபூலித்தேவன்இசுலாத்தின் புனித நூல்கள்இன்ஸ்ட்டாகிராம்வில்லங்க சான்றிதழ்ஐஞ்சிறு காப்பியங்கள்முதலாம் உலகப் போர்சகுந்தலாபூக்கள் பட்டியல்வெண்ணிற ஆடை மூர்த்திஅதிமதுரம்அக்கி அம்மைவரலாறுஇராமர்நாலடியார்சுதேசி இயக்கம்தமிழ் எழுத்து முறைகம்பர்பாண்டியர்ஐயப்பன்குண்டலகேசிகாயத்ரி மந்திரம்பள்ளர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்குமரகுருபரர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்விநாயகர் (பக்தித் தொடர்)நுரையீரல் அழற்சிஏக்கர்ஹாட் ஸ்டார்அறுபடைவீடுகள்பூப்புனித நீராட்டு விழாகே. அண்ணாமலைமீன் சந்தைஊராட்சி ஒன்றியம்தலைவி (திரைப்படம்)முக்குலத்தோர்கும்பம் (இராசி)தமிழ் படம் (திரைப்படம்)நாட்டு நலப்பணித் திட்டம்மலேரியாசுற்றுச்சூழல் மாசுபாடுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்விட்டலர்சட் யிபிடிகுடிப்பழக்கம்விளம்பரம்இராவணன்டொயோட்டாகள்ளுவேலுப்பிள்ளை பிரபாகரன்குப்தப் பேரரசுஹஜ்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇளங்கோ கிருஷ்ணன்🡆 More