சிர்சி

சிர்சி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 அடி (790 மீ) உயரத்தில் உள்ள ஒரு மலைவாசஸ்தலமாகும்.

இங்கு யானைகள், புலிகள், சிறுத்தை மற்றும் தனித்துவமான கருஞ் சிறுத்தைகள் என்பன வசிக்கின்றன. சோண்டா வம்சத்தின் போது சிர்சி கல்யாணப்பட்டனா  என்றும் அழைக்கப்பட்டது. இந்த நகரம் அடர்த்தியான பசுமையான காடுகளாலும், பல நீர்வீழ்ச்சிகளாலும் சூழப்பட்டுள்ளது. இந்த நகரிற்கு அருகில் ஹூப்லி நகரம் அமைந்திருப்பதால் வணிக வாய்ப்புகள் ஏராளமாக கிடைக்கின்றன. இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் பாக்கு உற்பத்தி ஆகும். சிர்சி வாழ் மக்கள் பெருமளவில் கமுகுப் பண்ணைகள் வைத்துள்ளார்கள். இவற்றினால் இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் கோவாவின் தபோலிம் விமான நிலையம் ஆகும்.

புவியியல்

சிர்சி 14.62 ° வடக்கு 74.85 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1860 அடி முதல் 2600 அடி வரை உயரத்தில் உள்ளது. மேலும் இது மேற்கு தொடர்ச்சி மலையின் மையத்தில் அமைந்துள்ளது . சிர்சி பெங்களூரிலிருந்து சுமார் 425 கிலோமீற்றர் (264 மைல்) தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் சிர்சியிலிருந்து 102 கிமீ (63 மைல்) தொலைவில் உள்ள ஹூப்லியில் அமைந்துள்ளது. அகனாசினி நதி சிர்சிக்கு அருகிலுள்ள "டோனிஹல்லா" என்ற இடத்தில் தொடங்கி மேற்கில் அரேபிய கடலை நோக்கி பாய்கிறது. இந்த நதி அதன் பாதையில் பல நீர்வீழ்ச்சிகளையும் உருவாக்குகிறது.

காலநிலை

சிர்சி வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. பருவமழை தாக்கத்திற்கு வலுவாக உட்படுகின்றது. மழைக்காலங்களில் இப்பகுதியில் மிக அதிக மழை பெய்யும். இதன் விளைவாக இப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இப்பகுதி காடுகள் இலையுதிர் ஈரக்காடுகளாகும். பெறுமதி வாய்ந்த மரங்கள் இந்த பிராந்தியத்தின் காடுகளில் காணப்படுகிறது. வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காரணமாக, காடழிப்பு மற்றும் வேட்டையாடுதல் சமீபத்திய ஆண்டுகளில் நடைப்பெறுகின்றன. சிர்சியில் குளிர்கால வெப்பநிலை 15 °C (59 °F) இற்கும் குறைகிறது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 40.2 °C (104.4 °F) ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2.4 °C (36.3 °F) ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

புள்ளிவிபரங்கள்

2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி,  நகர எல்லைக்குள் சிர்சியின் மக்கட் தொகை 62,335 ஆக இருந்தது. மக்கட் தொகையில் 51% வீதமானோர் ஆண்களும், 49% வீதமானோர் பெண்களும் ஆவார்கள்.

சிர்சியின் சராசரி கல்வியறிவு விகிதம் 92.82% ஆகும். இது தேசிய சராசரியான 74.05% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 95.26% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 90.43% வீதமாகவும் காணப்படுகின்றது. சனத்தொகையில் சுமார் 12% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

சிர்சியின் ஹவ்யக ​​பிராமணர்கள் கன்னடத்தின் ஹவ்யகா கன்னட பேச்சுவழக்கில் பேசுகிறார்கள். கிறிஸ்தவர்கள் கன்னடம் மற்றும் கொங்கனி ஆகிய இரு மொழிகளையும், சிர்சியின் முஸ்லிம்கள் கன்னடம் மற்றும் உருது ஆகிய இரு மொழிகளையும், பேசுகிறார்கள்.

பொருளாதாரம்

நகரத்தைச் சுற்றியுள்ள முக்கிய வணிகங்கள் பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. நகரத்தை சுற்றி வளர்க்கப்படும் முதன்மை பயிர் கமுகு ஆகும். இந்த நகரம் “பாக்கு” இன் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகும். இங்கு வளர்க்கப்படும் பாக்குகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏலக்காய் , மிளகு , வெற்றிலை , வென்னிலா போன்ற மசாலாப் பொருட்களுக்கும் இப்பகுதி பெயர் பெற்றது. முக்கிய உணவு பயிர் நெல் ஆகும்.

சான்றுகள்

Tags:

சிர்சி புவியியல்சிர்சி காலநிலைசிர்சி புள்ளிவிபரங்கள்சிர்சி பொருளாதாரம்சிர்சி சான்றுகள்சிர்சிஇந்தியாகருநாடகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாலி (கவிஞர்)கேரளம்அகமுடையார்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஜவகர்லால் நேருதமிழ்விடு தூதுநவதானியம்தொல்காப்பியர்தமிழ்நாடுதிருவள்ளுவர்இராமாயணம்108 வைணவத் திருத்தலங்கள்அரசியல் கட்சிசப்ஜா விதைபுதுமைப்பித்தன்விளம்பரம்கபிலர் (சங்ககாலம்)காயத்ரி மந்திரம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)சிவவாக்கியர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்பர்வத மலைமலையாளம்புதினம் (இலக்கியம்)தனுஷ் (நடிகர்)சதுப்புநிலம்முருகன்தமிழ் இலக்கணம்இந்திய ரிசர்வ் வங்கிஇந்திய உச்ச நீதிமன்றம்மாதவிடாய்காற்று வெளியிடைபுற்றுநோய்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)குறிஞ்சிப் பாட்டுதேர்தல்நான் அவனில்லை (2007 திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுஅரவான்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுதமிழ் மன்னர்களின் பட்டியல்அனுமன்தமிழர் நிலத்திணைகள்பள்ளர்இலட்சம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பெயரெச்சம்எங்கேயும் காதல்சே குவேராவாற்கோதுமைகள்ளர் (இனக் குழுமம்)குலசேகர ஆழ்வார்போக்கிரி (திரைப்படம்)திருவிளையாடல் புராணம்நம்பி அகப்பொருள்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெருஞ்சீரகம்கன்னியாகுமரி மாவட்டம்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுகணையம்முதற் பக்கம்கலிங்கத்துப்பரணிசிவபெருமானின் பெயர் பட்டியல்புதுக்கவிதைரத்னம் (திரைப்படம்)கட்டுவிரியன்வானிலைஜோக்கர்ஜி. யு. போப்சித்தர்வன்னியர்சங்க இலக்கியம்விருமாண்டிகணினிவெட்சித் திணைகவிதைகுடும்பம்பெண் தமிழ்ப் பெயர்கள்🡆 More