கேவலாதேவ் தேசியப் பூங்கா

கேவலாதேவ் தேசியப் பூங்கா (Keoladeo National Park, இது முன்பு பரத்பூர் பறவைகள் சரணாலயம் என்று அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவின் கிழக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும்.

முன்பு பரத்பூர் தேசியப் பூங்கா என்று அழைக்கப்பட்ட இது சிறப்பான ஒரு பறவைகள் சரணாலயமாக விளங்குகின்றது. இங்கே உள்ளூர் நீர்ப் பறவைகளுடன், புலம்பெயர்ந்து வரும் நீர்ப் பறவைகளையும் பெருமளவில் காணலாம். சுமார் 29 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கொண்ட இந்தச் சிறிய பூங்காவில் 350 க்கும் மேற்பட்ட பறவைகள் வசிப்பதாக அறியப்படுகிறது. இங்கே ஆண்டு தோறும் புலம் பெயர்ந்து வருகின்ற பறவைகளில் சைபீரியக் கொக்குகள் மிகவும் பிரபலமானவை. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து இப்பகுதிக்கு வரும் இவ் வகைக் கொக்குகள் தற்போது அழியும் நிலையிலுள்ள பறவைகளாகும். இது 1971இல் பாதாகாக்கப்பட்ட உய்விடமாக அறிவிக்கப்பட்டது. இது 1985ஆம் ஆண்டு இந்த பூங்கா யுனெசுகோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

Keoladeo Ghana National Park
கேவலாதேவ் தேசியப் பூங்கா
கியோலேதியோ கானா தேசிய பூங்கா, பரத்பூர், இராசத்தான், இந்தியா
Map showing the location of Keoladeo Ghana National Park
Map showing the location of Keoladeo Ghana National Park
அமைவிடம்பரத்பூர், இராச்சசுத்தான், இந்தியா
அருகாமை நகரம்பரத்பூர், ராஜஸ்தான்
ஆள்கூறுகள்27°10′00″N 77°31′00″E / 27.166667°N 77.516667°E / 27.166667; 77.516667
பரப்பளவு2,873 hectare, 29 km2
நிறுவப்பட்டது10 மார்ச்சு 1982 (1982-03-10)
வருகையாளர்கள்100,000 (in 2008)
நிருவாக அமைப்புஇராஜஸ்தான் மாநில சுற்றுலா வளர்ச்சித் துறை
வகைஇயற்கை
வரன்முறைX
தெரியப்பட்டது1985 (9வது அமர்வு)
உசாவு எண்340
State Partyஇந்தியா
பரத்பூர் மாவட்டம், இராஜஸ்தான்Asia-Pacific
Invalid designation
தெரியப்பட்டது1 அக்டோபர் 1981

உள்ளூர் மக்களால் கேவ்லாதேவ் கானா பூங்கா என அழைக்கபட்டும் இப்பகுதியானது மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் மனிதனால் நிர்வகிக்கப்படும் சதுப்புநிலப்பகுதி ஆகும். இந்த நிலப்பகுதியானது அவ்ப்போது ஏற்படும் வெள்ளத்திலிருந்து பரத்பூரை பாதுகாக்கிறது, கிராம கால்நடைகளுக்கு மேய்ச்சல் பகுதியாகவும் உள்ளது. முன்னதாக இது முதன்மையான ஒரு நீர்ப்பறவை வேட்டைக் களமாக பயன்படுத்தப்பட்டது. 29 km2 (11 sq mi) பரப்பளவு கொண்ட இப்பகுதியின் அடர்ந்த வனமானது உள்ளூர் மக்களால் கானா என்று அழைக்கப்படுகிறது. கானா என்றால் உள்ளூர் மொழியில் அடர்ந்த என்று பொருள். இந்த காட்டில் கம்பீர், பாணகங்கை என்ற இரு ஆறுகள் பாய்கின்றனர இந்த இரு ஆறுகளும் இணையும் இடத்தில் சூரஜ் மால் மன்னர் ஒரு கரையை அமைத்தார். அக்கரை அமைக்கபட்டபிறகு அது ஒரு சதுப்பு நிலமாக மாறியது. இதனால் தான் இது மனிதனால் உருவாக்கபட்ட சதுப்பு நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த மாறுபட்ட வாழ்விடங்களில் 366 பறவை இனங்கள், 379 தாவர இனங்கள், 50 வகை மீன்கள், 13 வகை பாம்புகள், 5 வகையான பல்லிகள், 7 நீர்நிலம் வாழ்வன இனங்கள், 7 ஆமை இனங்கள் மற்றும் பல்வேறு முதுகெலும்பற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான நீர்ப்பறவைகள் இனப்பெருக்கத்திற்காக பூங்காவிற்கு வலசை வருகின்றன. இந்த சரணாலயம் உலகின் அதிகப்படியான பறவைகள் வாழக்கூடிய பகுதிகளில் ஒன்றாகும். மேலும் இங்கே கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பல நீர் பறவைகள் உட்பட பலவகையான பறவைகள் வருகை தருகிறன்றன. அரிய சைபீரியக் கொக்குகள் இந்த பூங்காவுக்கு குளிர்காலத்தில் வலசை வந்து கொண்டிருந்தன ஆனால் 2002க்குப் பிறகு அவை வலசை வருவது நின்றுவிட்டடது. ஆனாலும் அப்பறவை இனம் அழிந்தவிட்டதாக பொருள் கொள்ள முடியாது. உலக வனவிலங்கு நிதியத்தின் நிறுவனர் பீட்டர் ஸ்காட்டின் கூற்றுப்படி, கியோலாடியோ தேசிய பூங்கா உலகின் சிறந்த பறவை பகுதிகளில் ஒன்றாகும்.

மேற்கோள்

Tags:

அருகிவரும் உயிரினங்கள்இந்தியாஇராஜஸ்தான்உலக பாரம்பரியக் களங்கள்கிலோமீட்டர்சைபீரியக் கொக்குதேசியப் பூங்காபரத்பூர் மாவட்டம்பறவை

🔥 Trending searches on Wiki தமிழ்:

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்தெலுங்கு மொழிமகேந்திரசிங் தோனிஇராபர்ட்டு கால்டுவெல்மொரோக்கோபரிதிமாற் கலைஞர்திரிசாஅழகிய தமிழ்மகன்எடப்பாடி க. பழனிசாமிஇந்திய அரசியலமைப்புஹோலிவிசயகாந்துமதராசபட்டினம் (திரைப்படம்)ஈரோடு மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மாவட்டம்பகவத் கீதைகேபிபாராஇந்தியப் பொதுத் தேர்தல்கள்நெடுநல்வாடைமீன்முகம்மது நபியின் இறுதிப் பேருரைஇறைமைஹாட் ஸ்டார்சங்க காலம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சூல்பை நீர்க்கட்டிதென்னாப்பிரிக்காஇந்திய வரலாறுயூடியூப்மதயானைக் கூட்டம்காயத்ரி மந்திரம்இந்திய அரசுவிந்துஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கான்கோர்டுஉயர் இரத்த அழுத்தம்கௌதம புத்தர்மார்ச்சு 28கணினிவெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தோனேசியாமுல்லைப்பாட்டுஇந்திய நாடாளுமன்றம்லோகேஷ் கனகராஜ்திருமந்திரம்யாவரும் நலம்பொது ஊழிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிசிங்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாடு சட்டப் பேரவைஊரு விட்டு ஊரு வந்துஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இரவு விடுதிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்அளபெடைமாணிக்கவாசகர்பி. காளியம்மாள்இடைச்சொல்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஆதம் (இசுலாம்)முக்குலத்தோர்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சிலிக்கான் கார்பைடுபுறநானூறுஉஹத் யுத்தம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்மருத்துவம்பிரபுதேவாமரகத நாணயம் (திரைப்படம்)சீரடி சாயி பாபாஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்சிதம்பரம் மக்களவைத் தொகுதிகாம சூத்திரம்விளையாட்டுகாதல் (திரைப்படம்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்கொள்ளும. கோ. இராமச்சந்திரன்🡆 More