குர்ட் அன்கிள்

குர்ட் ஸ்டீவன் அன்கிள் (Kurt Steven Angle பிறப்பு:டிசம்பர் 9, 1968) என்பவர் ஓர் நடிகர், முன்னாள் தொழில்முறை மற்போர் வீரர் மற்றும் தற்போது இவர் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி அதன் பின்னிருப்பு பணிகளின் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் பெனிசிலிவேனியாவில் உள்ள கிளாரியன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது  தேசிய கல்லூரி தடகள சங்க மிகுகன வாகையாளர் பட்டம் உட்பட பல விருதுகளைப் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு 1995 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக மற்போர் வாகையாளர் போட்டியில் ஃபிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பிரீஸ்டைல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றார்.  தொழில்முறை அல்லாத மற்போர் போட்டிகளில் நிறைவெற்றி பெற்றுள்ள நான்கு பேர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் இளையோர் சர்வதேச வாகையாளர் பட்டம், தேசிய கல்லூரி தடகள சங்க மிகுகன வாகையாளர் பட்டம், உலக வாகையாளர் பட்டம் மற்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். 2006 ஆம் ஆண்டில் இவரை மிகச் சிறந்த சூட்டர் மற்போர் வீரர் எனவும் கல்லூரி அளவிலான அனைத்துக் காலத்திற்குமான சிறந்த 15 மற்போர் வீரர்களில் ஒருவர் எனவும் அமெரிக்க மற்போர் சஙகம் அறிவித்தது. 2016 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டு ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார்.

ஆங்கிள் 1996 ஆம் ஆண்டில் தனது முதல் புரோ ரெச்லிங் போட்டியில் கலந்துகொண்டார். பின் டபிள்யூ டபிள்யூ எஃப் (தற்பொழுது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்) உடன் 1998 இல் ஒப்பந்தம் ஆனார். இருந்தபோதிலும் 1999 இல் தான் தனது முதல் போட்டியில் விளையாடினார். 2000 ஆம் ஆண்டில் ஐரோப்பியன் மற்றும் கண்டங்களுக்கிடையேயான வாகையாளர் ஆகிய பட்டங்களை ஒரே சமயத்தில் பெற்றார். நான்கு மாதங்கள் கழித்து 2000 ஆம் ஆண்டிற்கான கிங் ஆஃப் தெ ரிங்  வாகையாளர் ஆனார். பின் அக்டோபரில் டபிள்யூ டபிள்யூ எஃப் வாகையாளர் ஆனார். உலக மற்போர் வாகையாளர் பட்டத்தினை நான்கு முறையும் டபிள்யூ சி டபிள்யூ வாகையாளராக ஒரு முறையும் மற்றும் உலக மிகு கன வாகையாளராக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார். பத்தாவது டிரிபிள் கிரவுண் சாம்பியன் (மூன்றாம் கிரீட வாகையாளர்) மற்றும்  ஐந்தாவது கிராண்ட் சிலாம் வாகையாளராகவும்  வெற்றி பெற்றுள்ளார். மார்ச் 31, 2017 இல் இவர்  ஹால் ஆஃப் ஃபேமாக  அறிவிக்கப்பட்டார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம், சப்பான் மற்றும்  டி என் ஏ ஆகிய மற்போர் போட்டிகளில் விளையாடி இவர் 21 முறை வாகையாளர் பட்டங்களைப் பெற்றுள்ளார். உலக மற்போர் வரலாற்றில் அதிக வாகையாளர் பட்டங்கள் பெற்றவர் எனும் சிறப்பினைப் பெற்றார். இவர் உலக வாகையாளர் பட்டம், உலக மிகு கன வாகையாளர், டபிள்யூ சி டபிள்யூ வாகையாளர், டி என் ஏ உலக மிகு கன வாகையாளர்  மற்றும் ஐ ஜி எஃப் நிறுவனத்தின்  ஐ டபிள்யூ ஜி பி உலக மிகு கன வாகையாளர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். கிங் ஆஃப் தெ ரிங் மற்றும் கிங் ஆஃப் தெ மவுண்டைன்  ஆகிய இரு பட்டங்களைப் பெற்ற ஒரே மற்போர் வீரர் இவர் ஆவார். 2004 ஆம் ஆண்டில் ரெஸ்லிங் அப்செர்வர் நியூஸ்லெட்டர் இவரை ஹால் ஆஃப் பேமாகவும்  நூற்றாண்டின் சிறந்த மற்போர் வீரர் என அறிவித்தது. அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மற்போர் வீரர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். இவருக்கு எதிராக விளையாடியவரும் மற்றும் துறைத்தேர்ந்த மற்போர் வீரரான ஜான் சேனா இவரைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். எந்த சந்தேகமும் அன்றி இவர் ஒரு மிகச் சிறந்த மற்போர் வீரர் ஆவார். ஆனால் இவர் மற்ற வீரர்களைப் போல் அல்லாது தனித்துவத்துடன் இருப்பார். எனக் கூறியுள்ளார்.

சான்றுகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிராம நத்தம் (நிலம்)வியாழன் (கோள்)பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கிருட்டிணன்யாதவர்விசயகாந்துமாநிலங்களவைடி. என். ஏ.சுற்றுச்சூழல் பாதுகாப்புஒன்றியப் பகுதி (இந்தியா)பிள்ளைத்தமிழ்சொல்ரோகிணி (நட்சத்திரம்)இராசேந்திர சோழன்மதுரைக் காஞ்சிஇந்தியாயூடியூப்தாவரம்மெய்யெழுத்துகூத்தாண்டவர் திருவிழாதேவாரம்ஆற்றுப்படைஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மார்க்கோனிஅறிவுசார் சொத்துரிமை நாள்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)சீரடி சாயி பாபாதிருமங்கையாழ்வார்சச்சின் டெண்டுல்கர்தமன்னா பாட்டியாவேற்றுமையுருபுகாளை (திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)மருதம் (திணை)அருணகிரிநாதர்நீர் மாசுபாடுஇசுலாமிய வரலாறுபுதுக்கவிதைஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மரபுச்சொற்கள்திருக்குர்ஆன்எங்கேயும் காதல்கன்னியாகுமரி மாவட்டம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370ஐராவதேசுவரர் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்மதுரை நாயக்கர்சிவாஜி (பேரரசர்)தமிழ்த் தேசியம்ஈ. வெ. இராமசாமிஅவதாரம்மியா காலிஃபாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்செஞ்சிக் கோட்டைதிருநாவுக்கரசு நாயனார்அண்ணாமலையார் கோயில்குலசேகர ஆழ்வார்ஐஞ்சிறு காப்பியங்கள்சித்தர்இந்திய தேசிய காங்கிரசுகுறிஞ்சி (திணை)முத்தொள்ளாயிரம்பொருளாதாரம்இரண்டாம் உலகப் போர்மருது பாண்டியர்அஜித் குமார்அனுஷம் (பஞ்சாங்கம்)சென்னைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சூரரைப் போற்று (திரைப்படம்)தமிழச்சி தங்கப்பாண்டியன்அங்குலம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பறம்பு மலைதிருநெல்வேலிபத்துப்பாட்டுசெக்ஸ் டேப்🡆 More