கிளாசு குயில்

கிளாசு குயில் (Klaas's cuckoo)(கிரைசோகாக்சிக்சு கிளாசு) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு குயில் சிற்றினம் ஆகும்.

கிளாசு குயில்
கிளாசு குயில்
ஆண் குயில்
கிளாசு குயில்
பெண் குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கி. கிளாசு
இருசொற் பெயரீடு
கிரைசோகாக்சிக்சு கிளாசு
(இசுடீபன்சு, 1815)

இது சகாரா கீழமை ஆப்பிரிக்காவின் காடுகள் நிறைந்த பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் குறிப்பிட்ட சிற்றினப் பெயர் கிளாசு, மாதிரி சிற்றினத்தினைச் சேகரித்த கோய்கோயினை கௌரவிக்கிறது.

பெயர்

இந்த சிற்றினத்திற்கு லீ கவ் கவ் தி கிளாசு நினைவாகப் பெயரிடப்பட்டது. 1806-ல் பிரெஞ்சு ஆய்வாளர் பிரான்சுவா லு வைலண்ட், தனது புத்தகமான “ஆப்பிரிக்கப் பறவைகளின் இயற்கை வரலாறு” (Histoire naturelle des oiseaux d'Afrique)-ல் தனது கொய்கோய் வேலைக்காரன் மற்றும் உதவியாளரை அங்கீகரிப்பதற்காக, வகை மாதிரியைக் கண்டுபிடித்த கிளாசு நினைவாகப் பெயரிட்டார். லீ வையலண்ட் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

...என் நண்பன் கிளாசு... நான் உங்களுக்குச் செய்யும் மரியாதையை இங்கே ஏற்றுக்கொள்ளுங்கள்... இயற்கை ஆர்வலர்கள் நான் விவரிக்கப் போகும் இனங்களுக்கு நான் வைக்கும் பெயரைப் பாதுகாத்து, நீங்கள் எனக்குச் செய்த சேவைகளை புனிதப்படுத்தட்டும் : அவர்கள் அவர்களின் பார்வையில் எனது பணிக்கு ஓரளவு மதிப்பு இருந்தது என்பதை இதன் மூலம் எனக்கு நிரூபிக்கவும்.

1815-ல் லீ வைலண்டின் விருப்பத்தின்படி ஜேம்சு பிரான்சிசு இசுடீபன்சால், குக்குலசு கிளாசு என்ற பறவையின் முதல் இருமொழிப் பெயர் பயன்படுத்தப்பட்டபோது. மேலும் கிளாசுக்கான அஞ்சலி தற்போதைய இருசொல் வரை நீடித்தது.

ஒரு இனக்குழுவின் பெயரால் பெயரிடப்பட்ட சிற்றினத்தின் முதல் அறியப்பட்ட நிகழ்வு இந்தப் பறவை ஆகும். உள்ளூர் மக்களின் பெயரால் பறவை இனங்களுக்குப் பெயரிடப்பட்ட ஒரே காலனித்துவ உயிரியலாளர் லு வைலண்ட் ஆவார்.

சரகம்

தென்மேற்கில் மிகவும் வறண்ட பகுதிகளைத் தவிர்த்து, துணை-சகாரா ஆப்பிரிக்கா முழுவதும் இந்த சிற்றினம் காணப்படுகிறது.

விளக்கம்

கிளாசு குயில் 
சர் வில்லியம் ஜார்டினின் "நேச்சுரலிஸ்ட்ஸ் லைப்ரரி: ஆர்னிதாலஜி" (வி. 12, 1853 பதிப்பு) இலிருந்து வில்லியம் சுவைன்சனுக்குப் பிறகு வில்லியம் லிசார்சின் வேலைப்பாடு.

கிளாசு குயில் 16–18 cm (6.3–7.1 அங்குலங்கள்) நீளம் உடையது. இச்சிற்றினத்தில் பால் ஈருமை காணப்படும். ஆண் பறவைகள் பளபளப்பான பச்சை நிற உடலமைப்பு மற்றும் சில அடையாளங்கள் மற்றும் வெள்ளை நிற அடிப்பகுதியுடன் காணப்படும். பெண் குயில்கள் வெண்கல-பழுப்பு நிற உடல், பச்சை நிற இறக்கைகள் மற்றும் மங்கலான வெள்ளை அடிப்பகுதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பறக்கும் போது பார்க்கும்போது, ஆண் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருண்ட முதன்மை இறகுகளுடன் இருக்கும். பெண்கள் பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் கண்களுக்குப் பின் ஒரு சிறிய வெள்ளை நிற இணைப்பு உள்ளது.

குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

கிளாசு குயில் பெயர்கிளாசு குயில் சரகம்கிளாசு குயில் விளக்கம்கிளாசு குயில் குறிப்புகள்கிளாசு குயில் மேற்கோள்கள்கிளாசு குயில்அகணிய உயிரிகுயில் (குடும்பம்)சகாரா கீழமை ஆபிரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெயகாந்தன்கருக்காலம்பரிபாடல்உப்புமாமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்எடப்பாடி க. பழனிசாமிபகத் சிங்முகலாயப் பேரரசுகாய்ச்சல்வைரமுத்துகீழடி அகழாய்வு மையம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைகட்டபொம்மன்திரு. வி. கலியாணசுந்தரனார்அதியமான் நெடுமான் அஞ்சிதிருவண்ணாமலைபங்குச்சந்தைஉவமையணிஉதயநிதி ஸ்டாலின்சங்க காலப் புலவர்கள்வேளாண்மைஇமாச்சலப் பிரதேசம்குறுந்தொகைஏறுதழுவல்பறவைஇந்திய புவிசார் குறியீடுகர்ணன் (மகாபாரதம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மனித மூளைபோதைப்பொருள்பெண்ணியம்கிராம ஊராட்சிராதிகா சரத்குமார்மழைநீர் சேகரிப்புமுதலாம் உலகப் போர்தமிழ்விடு தூதுவியாழன் (கோள்)பணம்நாச்சியார் திருமொழிஎஸ். ஜானகிகருப்பை நார்த்திசுக் கட்டிசமணம்மக்களவை (இந்தியா)நெல்குருத்து ஞாயிறுபாண்டியர்வேளாளர்அகழ்ப்போர்பண்பாடுசீரடி சாயி பாபாஅக்பர்சிவாஜி (பேரரசர்)இந்தியாவின் பண்பாடுவீரமாமுனிவர்வெ. இறையன்புபட்டினப் பாலைகிறிஸ்தவம்ஆண் தமிழ்ப் பெயர்கள்பூரான்திருப்பதிபார்த்திபன் கனவு (புதினம்)சிவாஜி கணேசன்சிலப்பதிகாரம்முதல் மரியாதைமுல்லை (திணை)நண்பகல் நேரத்து மயக்கம்மருந்துப்போலிஇருட்டு அறையில் முரட்டு குத்துவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்மாமல்லபுரம்அண்டர் தி டோம்கண் (உடல் உறுப்பு)கார்லசு புச்திமோன்கர்மாமக்களாட்சிகணிதம்கர்நாடகப் போர்கள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்🡆 More