கியூஷூ

கியூஷூ (九州—ஒன்பது மாகாணங்கள்) ஜப்பானின் நாலு மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாகும்.

35,640 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த கியூஷூவில் 2006 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 13,231,995 மக்கள் வசிக்கின்றனர். இத்தீவு யப்பானின் மூன்றாவது பெரிய தீவாகும்.

九州
கியூஷூ
கியூஷூ
ஜப்பானின் கியூஷூ தீவும் அத்தீவின் மாவட்டங்கள்
புவியியல்
அமைவிடம்கிழக்கு ஆசியா
தீவுக்கூட்டம்ஜப்பானியத் தீவுக்கூட்டம்
உயர்ந்த புள்ளிநக்கடாக்கே
நிர்வாகம்
ஜப்பான்
பகுதிகள்ஃபுக்குவோக்கா, ககோஷிமா, குமமோட்டோ, மியசாக்கி, நகசாக்கி, ஓயிட்டா, சகா
பெரிய குடியிருப்புஃபுக்குவோக்கா (மக். 1,400,000)
மக்கள்
மக்கள்தொகை13,231,995
இனக்குழுக்கள்ஜப்பானியர்கள்

2016 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி, கியூஷூ 12,970,479 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. மேலும் 36,782 சதுர கிலோமீட்டர் (14,202 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

புவியியல்

இத்தீவு மலைப்பாங்கானது. இங்கு யப்பானில் தொழிற்படும் எரிமலையான 1,591 மீட்டர் (5,220 அடி) உயரமுடைய மவுண்ட் அசோ அமைந்துள்ளது. மத்திய கியூஷூவில் கிழக்கு கரையிலும் மவுண்ட் அசோ சூழவும் ஏராளமான வெப்ப நீரூற்றுகள் காணப்படுகின்றன. ஆசிய கண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு யப்பானின் ஹொன்சு தீவிலிருந்து கன்மோன் நீரிணைகளால் பிரிக்கப்படுகின்றது.

கியூஷூ என்ற பெயர் சைகைடாவின் பண்டைய ஒன்பது மாகாணங்களாகிய சிகுசென், சிகுகோ, ஹிசென், ஹிகோ, புசென், பூங்கோ, ஹைகா, ஒசுமி மற்றும் சாட்சுமா என்பவற்றிலிருந்து தோன்றியது. இன்றைய கியுஷு பிராந்தியம் ஏழு மாகாணங்களை உள்ளடக்கிய அரசியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட பிராந்தியமாகும்.

வடக்கு கியுஷு

  • ஃபுகுயோகா ப்ரிபெக்சர்
  • குமாமோட்டோ மாகாணம்
  • நாகசாகி மாகாணம்
  • ஒய்டா ப்ரிபெக்சர்
  • சாகா ப்ரிபெக்சர்

தெற்கு கியூஷு

  • ககோஷிமா மாகாணம்
  • மியாசாகி மாகாணம்
  • ஒகினாவா மாகாணம்

சனத்தொகை

கியூஷு யப்பானின் மக்கள் தொகையில் 10.3 சதவீதத்தை கொண்டுள்ளது. கியூஷுவின் வடமேற்கில் புகுயோகா மற்றும் கிடாக்கியுஷு ஆகிய நகரங்களில் பெரும்பான்மையான மக்கள் வாழ்கின்றனர். மேலும் தென்மேற்கே சசெபோ, நாகசாகி, தெற்கே குமாமோட்டோ மற்றும் ககோஷிமா பரவலாக வாழ்கின்றனர். கிழக்கு கடலோரத்தில் ஓய்டா மற்றும் மியாசாகி ஆகிய நகரங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களில் மக்கள் தொகையில் பொதுவான சரிவைக் காட்டுகிறது. கியூஷுவில் பலமான கட்சியாக முற்போக்கு சனநாயக கட்சி காணப்படுகிறது.  

பொருளாதாரம்

குறிப்பாக மியாசாகி மாகாணம், ககோசிமா மாகாணம் உட்பட கியுஷுவின் பகுதிகள் துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளன. இங்கு முக்கிய விவசாயப் பொருட்களான அரிசி, தேயிலை, புகையிலை, வற்றாளை, மற்றும் சோயா என்பவற்றுடன் பட்டும் பரவலாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தீவு அரிட்டா, இமாரி, சாட்சுமா, கராட்சு உள்ளிட்ட பல்வேறுபட்ட பீங்கான் உற்பத்திக்கு பெயர் பெற்றது. வடக்கில் ஃபுகுயோகா, கிடாக்கியுஷு, நாகசாகி மற்றும் ஓய்டாவைச் சூழவுள்ள பகுதிகளில் கனரக தொழில், வாகனங்கள், ரசாயனங்களின் உற்பத்தி, குறைக்கடத்திகள் உற்பத்தி மற்றும் உலோக பதப்படுத்தல் ஆகிய தொழில்துறை நடவடிக்கைகள் நடைப்பெறுகின்றன. [சான்று தேவை]

கியூஷுவில் நாட்டின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் 2010 ஆம் ஆண்டில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு மிகக் குறைவாகும்.

தெற்கின் எரிமலைப் பகுதியைத் தவிர, தீவின் வடக்கு பகுதியில், பெப்புவைச் சுற்றி குறிப்பிடத்தக்க மண் வெப்ப நீரூற்றுகள் காணப்படுகின்றன. இவை மிகவும் வெப்பமான சூழலில் உயிர்வாழும் திறன் கொண்ட நுண்ணுயிரிகளின் தளமாகும்.

கல்வி

கியூஷுவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்:

தேசிய பல்கலைக்கழகங்கள்

  • கியுஷு பல்கலைக்கழகம்
  • கியுஷு தொழில்நுட்ப நிறுவனம்
  • சாகா பல்கலைக்கழகம்
  • நாகசாகி பல்கலைக்கழகம்
  • குமாமோட்டோ பல்கலைக்கழகம்
  • ஃபுகுயோகா கல்வி பல்கலைக்கழகம்
  • ஓய்தா பல்கலைக்கழகம்
  • மியாசாகி பல்கலைக்கழகம்
  • ககோஷிமா பல்கலைக்கழகம்
  • கனோயாவில் உள்ள தேசிய உடற்தகுதி மற்றும் விளையாட்டு நிறுவனம்
  • ரியுக்யஸ் பல்கலைக்கழகம்

உள்ளூர் அரசாங்கங்களால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்கள்

  • கிடாக்கியுஷு பல்கலைக்கழகம்
  • கியுஷு பல் கல்லூரி
  • ஃபுகுயோகா மகளிர் பல்கலைக்கழகம்
  • ஃபுகுயோகா ப்ரிபெக்சுரல் பல்கலைக்கழகம்
  • நாகசாகி ப்ரிபெக்சுரல் பல்கலைக்கழகம்
  • ஓய்டா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
  • குமாமோட்டோவின் முதன்மை பல்கலைக்கழகம்
  • மியாசாகி நகராட்சி பல்கலைக்கழகம்
  • மியாசாகி ப்ரிபெக்சுரல் நர்சிங் பல்கலைக்கழகம்
  • ஒகினாவா ப்ரிபெக்சுரல் கலை பல்கலைக்கழகம்

முக்கிய தனியார் பல்கலைக்கழகங்கள்

  • ஃபுகுயோகா பல்கலைக்கழகம் - கியூஷுவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம்
  • குமாமோட்டோ காகுன் பல்கலைக்கழகம்
  • ரிட்சுமேகன் ஆசியா பசிபிக் பல்கலைக்கழகம்
  • சீனன் காகுயின் பல்கலைக்கழகம்
  • கியுஷு சாங்யோ பல்கலைக்கழகம்
  • தொழில் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார பல்கலைக்கழகம்

போக்குவரத்து

இந்த தீவு யப்பானின் பெரிய தீவான ஹொன்சுவுடன் கன்மொன் சுரங்கப் பாதைகளினால் இணைக்கப்படுகின்றது. கியூமன் புகையிரத நிறுவனத்தின் சான்யோ ஷிங்கன்சென் மற்றும் ஷிங்கன்சென் அல்லாத புகையிரதங்களும், சாலை போக்குவரத்தும் உண்டு. தீவின் புகையிரத போக்குவரத்து கியூஷு புகையிரத நிறுவனத்தாலும், நிஷிதெட்சு ரயில்வேயினாலும் இயக்கப்படுகின்றது [சான்று தேவை]

மேற்கோள்கள்

Tags:

கியூஷூ புவியியல்கியூஷூ சனத்தொகைகியூஷூ பொருளாதாரம்கியூஷூ கல்விகியூஷூ போக்குவரத்துகியூஷூ மேற்கோள்கள்கியூஷூ2006ஜப்பான்தீவுயப்பான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நெடுநல்வாடை (திரைப்படம்)வரலாறுகண்ணே கனியமுதேசுந்தர காண்டம்சென்னைவி.ஐ.பி (திரைப்படம்)சுமேரியாதேர்தல் நடத்தை நெறிகள்மகேந்திரசிங் தோனிஇசுலாமிய நாட்காட்டிதிருவண்ணாமலைசங்க காலப் புலவர்கள்தாஜ் மகால்தாராபாரதிபொது ஊழிசிறுபஞ்சமூலம்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகம்பராமாயணம்மயங்கொலிச் சொற்கள்மரணதண்டனைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005குண்டூர் காரம்திருநெல்வேலிவி. கே. சின்னசாமிமும்பை இந்தியன்ஸ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சிதம்பரம் மக்களவைத் தொகுதிவட சென்னை மக்களவைத் தொகுதிபூரான்குடியுரிமைகுலுக்கல் பரிசுச் சீட்டுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்கா. ந. அண்ணாதுரைகாயத்ரி மந்திரம்தமிழ் இலக்கியப் பட்டியல்ஆறுமுக நாவலர்ஆற்றுப்படைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்உ. வே. சாமிநாதையர்சேக்கிழார்கம்பர்லியோஅல்லாஹ்குற்றாலக் குறவஞ்சிசுற்றுச்சூழல்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்தற்குறிப்பேற்ற அணிநற்கருணை ஆராதனைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வளர்சிதை மாற்றம்அரசியல்நிதி ஆயோக்விருதுநகர் மக்களவைத் தொகுதிகிராம ஊராட்சிகாடுவெட்டி குருநவதானியம்கபிலர் (சங்ககாலம்)கல்லீரல்தமிழிசை சௌந்தரராஜன்சிந்துவெளி நாகரிகம்பொன்னுக்கு வீங்கிகீழாநெல்லிபெரியாழ்வார்மட்பாண்டம்குற்றியலுகரம்திராவிசு கெட்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஜெ. ஜெயலலிதாபக்கவாதம்விசயகாந்துஅக்பர்வைகோஇந்திய மக்களவைத் தொகுதிகள்அன்மொழித் தொகைதங்கம் தென்னரசுபுறநானூறு🡆 More