சுந்தரம் சிறீஸ்கந்தராஜா

சுந்தரம் சிறீஸ்கந்தராஜா (Sundaram Sriskandarajah, (10 நவம்பர் 1953- 23 சனவரி 2014) இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆவார்.

பீஜியில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற நீதியரசராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

சுந்தரம் சிறீஸ்கந்தராஜா
S. Sriskandarajah
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி
பதவியில்
சூன் 24, 2011 – சனவரி 23, 2014
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-11-10)நவம்பர் 10, 1953
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
இறப்புசனவரி 23, 2014(2014-01-23) (அகவை 60)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
முன்னாள் கல்லூரிபார்படோசு பல்கலைக்கழகம்

கொழும்பு இந்துக் கல்லூரி

மானிப்பாய் இந்துக் கல்லூரி
வேலைவழக்கறிஞர், நீதிபதி
தொழில்வழக்கறிஞர்

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிறீஸ்கந்தராஜா மானிப்பாய் இந்துக் கல்லூரி, கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார். அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து 1979 இல் சட்டப் படிப்பை முடித்துச் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றினார். 1991 முதல் 1995 வரையிலும் அரச வழக்கறிஞராகவும், செப்டம்பர் 1995 முதல் செப்டம்பர் 1997 வரை மூத்த வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார்.

பொதுநலவாய புலமைப்பரிசில் பெற்று மேற்கிந்தியத் தீவுகளில் பார்படோசு பல்கலைக்கழகத்தில் 1995 இல் சட்ட முதுகலை (சட்ட வரைவு) பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஆகத்து 1997 இல் வட மாகாண மேல் நீதிமன்ற நீதிபதியாக வவுனியாவில் பணியாற்றினார். இக்காலப் பகுதியில் தீவிரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல வழக்குகளை இவர் விசாரித்தார். அக்டோபர் 2000 ஆம் ஆண்டில் மேல் மாகாண மேல்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றார்.

சூன் 24, 2011 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமிக்கப்பட்டார். இடையில் சில காலம் பீஜி தீவுகளில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

வரலாற்றுப் புகழ் மிக்க சில தீர்ப்புகள்

முன்னாள் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்காவின் பதவி நீக்கம் இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேன்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது என இவர் தீர்ப்பளித்திருந்தார். இதனால் இவர் மரண அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தார் என இலங்கை சட்டத்தரணிகள் கூட்டமைப்பு .கூறியிருந்தது.

மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதூர்தீனுக்கு எதிரான மேன்முறையீட்டு வழக்குகளுக்கு அவர் வழங்கிய கட்டளைகள் முக்கியமானதாக கருதப்பட்டது.

மறைவு

சிறிது காலம் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நீதியரசர் சிறீஸ்கந்தராஜா தனது 61 வது அகவையில் 2014 சனவரி 23 இல் கொழும்பில் காலமானார்.

மேற்கோள்கள்

Tags:

சுந்தரம் சிறீஸ்கந்தராஜா வாழ்க்கைக் குறிப்புசுந்தரம் சிறீஸ்கந்தராஜா வரலாற்றுப் புகழ் மிக்க சில தீர்ப்புகள்சுந்தரம் சிறீஸ்கந்தராஜா மறைவுசுந்தரம் சிறீஸ்கந்தராஜா மேற்கோள்கள்சுந்தரம் சிறீஸ்கந்தராஜாஇலங்கைபீஜி

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவருட்பாகாளமேகம்ஆங்கிலம்உளவியல்ஐம்பெருங் காப்பியங்கள்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்மரகத நாணயம் (திரைப்படம்)சட் யிபிடிதிட்டம் இரண்டுகிழவனும் கடலும்முகம்மது நபிதினமலர்ஜோதிகாபாளையத்து அம்மன்ஆற்றுப்படைதமிழ்நாடுஜோக்கர்தமிழ் எண்கள்தேம்பாவணிவைதேகி காத்திருந்தாள்உரைநடைசங்கம் (முச்சங்கம்)பிரகாஷ் ராஜ்இரண்டாம் உலகம் (திரைப்படம்)தினைசுற்றுலாபகத் பாசில்கொடைக்கானல்தேர்தல்தமிழ் இலக்கியம்வீரப்பன்கணையம்தமிழர் பருவ காலங்கள்ஞானபீட விருதுதிருப்பூர் குமரன்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)இயேசுதமிழ்நாடு காவல்துறைவெட்சித் திணைஎட்டுத்தொகைஇராசேந்திர சோழன்மோகன்தாசு கரம்சந்த் காந்திசெம்மொழிஆகு பெயர்இந்தியன் பிரீமியர் லீக்ஐம்பூதங்கள்பிள்ளையார்இன்று நேற்று நாளைஇந்திய உச்ச நீதிமன்றம்முத்துராஜாதொல். திருமாவளவன்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்மாத்திரை (தமிழ் இலக்கணம்)கூலி (1995 திரைப்படம்)பழமொழி நானூறுமூலம் (நோய்)சுந்தர காண்டம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சுற்றுச்சூழல் மாசுபாடுமனித வள மேலாண்மைமரபுச்சொற்கள்அகரவரிசைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இந்தியக் குடியரசுத் தலைவர்கவிதைநீக்ரோதிருவள்ளுவர் ஆண்டுதன்னுடல் தாக்குநோய்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005நம்பி அகப்பொருள்திருக்குறள்அகத்திணைஅத்தி (தாவரம்)கொல்லி மலைஐங்குறுநூறு🡆 More