எண்ணெய்க் கப்பல்

எண்ணெய்க் கப்பல் என்பது நிலநெய்யைப் பெருமளவில் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பலொன்றைக் குறிக்கும்.

எண்ணெய்க் கப்பல்கள் பொதுவாக இரண்டு வகைப்படுகின்றன. ஒன்று கச்சா எண்ணெய்க் கப்பல் மற்றது முடிவு எண்ணெய்க் கப்பல். கச்சா எண்ணெய்க் கப்பல்கள் எண்ணெய்க் கிணறுகள் இருக்கும் இடத்திலிருந்து கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு ஆலைகளுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. முடிவு எண்ணெய்க் கப்பல்கள், சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்திப் பொருட்களை அவை நுகரப்படும் இடங்களுக்குக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன.

எண்ணெய்க் கப்பல்
ஒரு சிறிய எண்ணெய்க் கப்பல்

எண்ணெய்க் கப்பல்கள் அவற்றில் அளவு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. அளவு அடிப்படையிலான வகைப்பாட்டில் சில ஆயிரம் டன்களைக் (தொன்) கொண்ட உள்நாட்டு அல்லது கரையோரக் கப்பல்கள் முதல் 550,000 டன்கள் எடை கொண்ட பாரிய கப்பல்களை வரை அடங்குகின்றன. எண்ணெய் தாங்கிகள் ஒவ்வொரு ஆண்டும் 2,000,000,000 metric tons (2.2×109 short tons) எண்ணெயைக் கொண்டு செல்கின்றன. எண்ணெயை இடத்துக்கிடம் கொண்டு செல்லும் முறைகளில் குழாய் வழி கொண்டுசெல்வதற்கு அடுத்தபடியான செயல் திறன் கூடிய முறை கப்பல்வழி கொண்டு செல்வதாகும். எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் எண்ணெயைக் கொண்டு செல்வதற்கான செலவு, 1 அமெரிக்க கலன் (3.8 L)க்கு 2 அல்லது 3 ஐக்கிய அமெரிக்க சதங்கள் மட்டுமே.

தற்காலத்தில் சிறப்புப் பயன்பாடுகளுக்கான எண்ணெய்க் கப்பல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கப்பல்களுக்கு, அவை பயணம் செய்யும்போதே எரிபொருள் நிரப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட கப்பல்கள் அவற்றுள் ஒரு வகையாகும். எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய எண்ணெய்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், இவ்வகைக் கப்பல்களுக்கான வடிவமைப்பும், செயற்பாடுகளும் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக உள்ளன.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

தேம்பாவணிஅழகி (2002 திரைப்படம்)புற்றுநோய்மு. வரதராசன்கோயம்புத்தூர் மாவட்டம்அக்கி அம்மைநாளந்தா பல்கலைக்கழகம்கரணம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஆடு ஜீவிதம்மதுரைக் காஞ்சிகள்ளுமீன்பெருங்கடல்நெல்வேதநாயகம் பிள்ளைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிஆசிரியர்உவமையணிகனிமொழி கருணாநிதிபரதநாட்டியம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மருத்துவம்பதினெண் கீழ்க்கணக்குநனிசைவம்தங்கம்மதயானைக் கூட்டம்விவிலிய சிலுவைப் பாதைவாதுமைக் கொட்டைபோக்குவரத்துபந்தலூர் வட்டம்கல்லணைஇந்திரா காந்திஸ்ரீபுலிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்கினி எலிவரைகதைஇந்திய ரூபாய்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சிவன்பழமுதிர்சோலை முருகன் கோயில்பால் கனகராஜ்திரிசாஅகநானூறுமுத்துராஜாசீவக சிந்தாமணிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பாரதிய ஜனதா கட்சிதனுசு (சோதிடம்)சிலம்பரசன்108 வைணவத் திருத்தலங்கள்பேரிடர் மேலாண்மைசிலம்பம்கெத்சமனிஇந்திய நாடாளுமன்றம்ஆடுசூரரைப் போற்று (திரைப்படம்)இன்னா நாற்பதுஅன்னி பெசண்ட்கொங்கு வேளாளர்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்புறநானூறுதிருச்சிராப்பள்ளிஇயேசு காவியம்இரசினிகாந்துகீர்த்தி சுரேஷ்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்கேழ்வரகுநம்ம வீட்டு பிள்ளைராதாரவிசீறாப் புராணம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பொன்னுக்கு வீங்கிம. கோ. இராமச்சந்திரன்கயிறுவெந்தயம்நிதி ஆயோக்🡆 More