எகிப்தின் முதல் வம்சம்

எகிப்தின் முதல் வம்சம் (First Dynasty of Egypt அல்லது Dynasty I) பண்டைய எகிப்தை கிமு 3100 முதல் கிமு 2900 முடிய 200 ஆண்டுகள் ஆண்டது.

இம்முதல் வம்ச மன்னர் நார்மெர் ஆட்சியில் மேல் எகிப்தின் நிலப்பரப்புகளையும், கீழ் எகிப்தின் நிலப்பரப்புகளையும் ஒன்றிணைத்து பண்டைய எகிப்து இராச்சியம் நிறுவப்பட்டது. இவ்வம்சத்தினர் ஆட்சியின் போது பாபிரஸ் எனும் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய எகிப்து
கிமு 3100–கிமு 2900
தலைநகரம்தினீஸ்
பேசப்படும் மொழிகள்எகிப்திய மொழி
சமயம்
பண்டைய எகிப்திய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்வெண்கலக் காலம்
• தொடக்கம்
கிமு 3100
• முடிவு
கிமு 2900
முந்தையது
பின்னையது
எகிப்தின் முதல் வம்சம் முதல் வம்ச ஆட்சிக்கு முந்தைய எகிப்து
[[எகிப்தின் இரண்டாம் வம்சம்]] எகிப்தின் முதல் வம்சம்
எகிப்தின் முதல் வம்சம்
எகிப்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் நிறுவிய நார்மெர் கற்பலகை

முதல் வம்ச மன்னர்களின் ஆட்சியில் பண்டைய எகிப்தின் தலைநகராக தினீஸ் நகரம் விளங்கியது. 2013-இல் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்ககரிமக் காலக்கணிப்பின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஹோர்-அகா-வின் ஆட்சிக் காலம் (கிமு 3218–3035) முதல் துவங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது.

எகிப்தின் முதல் வம்ச ஆட்சியாளர்கள்

பண்டைய எகிப்தின் வரலாற்றின் படி, எகிப்தின் முதல் வம்சத்தின் ஆட்சியாளர்கள் கீழ் வருமாறு:

பெயர் உருவம் குறிப்புகள் ஆட்சிக் காலம்
நார்மெர்
எகிப்தின் முதல் வம்சம் 
கீழ் எகிப்தையும், மேல் எகிப்தையும் ஒன்றிணைத்தவராக கருதப்படுகிறார்.
கிமு 3100
ஹோர்-ஆகா
எகிப்தின் முதல் வம்சம் 
கிமு 3050
ஜெர்
எகிப்தின் முதல் வம்சம் 
54 ஆண்டுகள்
ஜெத்
எகிப்தின் முதல் வம்சம் 
பட்டத்து அரசி மெர்நெய்த்
10 ஆண்டுகள்
டென்
எகிப்தின் முதல் வம்சம் 
இரு முடிகள் அணிந்தவன்
42 ஆண்டுகள்
அட்ஜிப்
எகிப்தின் முதல் வம்சம் 
கிரேக்க வடிவம்:மிபிடோஸ்
10 ஆண்டுகள்
செமெர்கெத்
எகிப்தின் முதல் வம்சம் 
கிரேக்கப் பெயர்: செமெம்பிசெஸ்.
8½ ஆண்டுகள்
குவா
எகிப்தின் முதல் வம்சம் 
கிரேக்கப் பெயர்: பினெட்ச்சஸ், 33 ஆண்டுகள் எகிப்தை ஆண்டவர்
34 ஆண்டுகள்
நெபர்கா
எகிப்தின் முதல் வம்சம் 
மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்தவர்.
கிமு 2900
ஹோரஸ் பேர்டு
எகிப்தின் முதல் வம்சம் 
குறைந்த காலம் ஆட்சி செய்தவர்
கிமு 2900

எகிப்தின் முதல் வம்சத்தின் பார்வோன்கள் குறித்த செய்திகள் சில தொல்லியல் நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்கள் மூலமே அறிய முடிகிறது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பலெர்மோ கல்லின் குறிப்புகள் மூலமே எகிப்தின் முதல் வம்சத்தின் நான்கு ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புகள் மட்டுமே அறியமுடிகிறது.


படக்காட்சிகள்

மனித பலி

முதல் வம்சத்தின் பார்வோன்கள் இறப்பின் ஈமச்சடங்கின் போது நரபலி இடுவது வழக்கமாக இருந்தது. இறந்த மன்னர்களின் சவத்தை பெரும் கல்லறை கட்டி அடக்கம் செய்யும் போது, கழுதை போன்ற சில விலங்கினங்களையும் பலி கொடுத்தனர்.

மறு உலக வாழ்க்கையின் பொருட்டு பார்வோன் டிஜெர் கல்லறையில் 338 மனிதர்கள் மற்றும் விலங்குகள் பலி கொடுத்திருப்பது தொல்லியல் ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளது. என்ன காரணத்தினாலோ இம்முதல் வம்ச மன்னர்களின் காலத்திற்குப் பின்னர் பார்வோன்களின் கல்லறையில் நரபலி மற்றும் விலங்களை பலி கொடுப்பதை நிறுத்தப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

முன்னர்
முதல் வம்சத்திற்கு முந்திய எகிப்து
எகிப்தின் முதல் வம்சம்
கிமு 3100 – கிமு 2890
பின்னர்
எகிப்தின் இரண்டாம் வம்சம்



Tags:

எகிப்தின் முதல் வம்சம் எகிப்தின் முதல் வம்ச ஆட்சியாளர்கள்எகிப்தின் முதல் வம்சம் படக்காட்சிகள்எகிப்தின் முதல் வம்சம் மனித பலிஎகிப்தின் முதல் வம்சம் இதனையும் காண்கஎகிப்தின் முதல் வம்சம்கீழ் எகிப்துநார்மெர்பண்டைய எகிப்துபாபிரஸ்மேல் எகிப்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

கண்ணகிபழனி முருகன் கோவில்இந்தியக் குடியரசுத் தலைவர்திருமலை (திரைப்படம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பெரும்பாணாற்றுப்படையோனிகார்ல் மார்க்சுநீக்ரோஏலாதிஅவதாரம்நாட்டு நலப்பணித் திட்டம்விருமாண்டிசிவம் துபேசிலப்பதிகாரம்புதினம் (இலக்கியம்)இயேசுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்பாம்புநாற்கவிதேசிய அடையாள அட்டை (இலங்கை)ரோசுமேரிநேர்பாலீர்ப்பு பெண்தமிழ் தேசம் (திரைப்படம்)இரட்டைக்கிளவிகணியன் பூங்குன்றனார்மண்ணீரல்யானைதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்சின்னம்மைஆசாரக்கோவைபாசிப் பயறுதமிழில் சிற்றிலக்கியங்கள்நயன்தாராவ. உ. சிதம்பரம்பிள்ளைபல்லாங்குழிஇந்திய அரசியலமைப்புபட்டினப்பாலைஇராவண காவியம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்அண்ணாமலையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இடலை எண்ணெய்அழகர் கோவில்அகத்தியர்கட்டுரைசிங்கம் (திரைப்படம்)கல்வெட்டுசமணம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பொருநராற்றுப்படைமு. வரதராசன்நயினார் நாகேந்திரன்லீலாவதிகாடழிப்புசேரன் (திரைப்பட இயக்குநர்)கலம்பகம் (இலக்கியம்)சுப்மன் கில்சீறிவரும் காளைசேமிப்புநோட்டா (இந்தியா)தமிழ்நாடு அமைச்சரவைதனிப்பாடல் திரட்டுஇரத்தக்கழிசல்உத்தரகோசமங்கைமார்கஸ் ஸ்டோய்னிஸ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்குருதிச்சோகைவரலாறுஉடன்கட்டை ஏறல்ருதுராஜ் கெயிக்வாட்திருக்குர்ஆன்பல்லவர்மாதவிடாய்வித்து🡆 More