இடப்பெயர் ஆய்வு

இடப்பெயர் ஆய்வு என்பது, இடங்களின் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொருள், பயன்பாடு, வகைப்பாடு என்பவை பற்றி ஆய்வு செய்யும் துறையாகும்.

இது பொதுவான எல்லா வகையான பெயர்களையும் பற்றி ஆராயும் பெயராய்வுத் துறையின் ஒரு பகுதியாகும்.

இடப்பெயர் என்பது ஒரு ஊர், பிரதேசம், புவி மேற்பரப்பில் உள்ள ஒரு பகுதி அல்லது ஒரு செயற்கை அம்சத்தைக் குறிக்கக்கூடும். ஒரு நிலப்பகுதியை இன்னொரு பகுதியிலிருந்து வேறுபடுத்துவதற்காகவே இடப்பெயர்கள் உருவானதாகக் கருதப்படுகின்றது. சில பண்பாடுகளில், இத்தகைய இடப்பெயர்கள், பெரும்பாலான அல்லது எல்லாப் பெயர்களும் உள்ளூர் மொழியில் ஒரு பொருளைக் கொண்டிருக்கும். இத்தகைய பொருள் பொதிந்த பெயர்கள், அவ்விடங்களோடு தொடர்புடைய மக்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் விளக்குகின்ற தன்மை வாய்ந்தவை. இதனால், இடப்பெயர் ஆய்வானது, வரலாறு, மொழியியல், தொல்லியல் போன்ற துறைகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளது.

இடப்பெயர்கள் ஒரு பகுதியின் வரலாற்றுப் புவியியல் குறித்துப் பெறுமதி வாய்ந்த விளக்கங்களைத் தர வல்லவை. 1954ல் எஃப். எம். போவிக்கே என்பார், இடப்பெயர் ஆய்வு குறித்துக் கூறியபோது, இவ்வாய்வுகள் தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த கண்டுபிடிப்புக்களையும் மொழியியல் விதிகளையும் பயன்படுத்துவதுடன், அவற்றை மேம்படுத்துவதற்கும், சோதனை செய்வதற்கும் உதவுகின்றன என்றார். இடப்பெயர்கள் இனக்குழுக்களின் குடியேற்றங்களின் பரம்பற் கோலங்களைக் காட்டுவதோடு நில்லாது புலப் பெயர்வுகளின் காலத்தை அறிந்துகொள்வதிலும் உதவுகின்றன.

புலவர்களும், புராணக்கதை எழுதியோரும் பல இடப்பெயர்களைத் தொடர்பு படுத்தித் தங்கள் கதைகளுக்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இதனால், இவர்கள் ஒருவகையில் இடப்பெயர் ஆய்வுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர் எனலாம். ஆனாலும் இவை அறிவியல் அடிப்படையிலான ஆய்வு அல்ல என்பதால், இவற்றை முறையான இடப்பெயர் ஆய்வாகக் கொள்ள முடியாது. சில சமயங்களில் இடப்பெயரை மையமாகக் கொண்டே இத்தகைய கதைகள் எழுவதும் உண்டு. இடப் பெயர்களின் அமைப்பு, உச்சரிப்பு ஒலி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அப்பெயர்களுக்குப் போலியான பொருள் கூறப்படுவதையும் காணலாம்.

இடப்பெயர் ஆய்வைப்பற்றி 1768 இல் முதலில் குறிப்பிட்டவர், வில்லியம் லெய்ப்னிஷ் என்பவராவார். எக்லி, அடால்பர்க், சிமித், ஸ்டீவார்ட், கார்டினர், உட்லி, டிரையே போன்றவர்கள் இடப்பெயர் ஆய்வுகளுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.

குறிப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்

Tags:

பெயராய்வுபெயர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காதல் தேசம்பிரஜ்வல் ரேவண்ணாகிருட்டிணன்கொடைக்கானல்பழந்தமிழ் இசைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ் இலக்கியம்இந்திரா காந்திஅறுசுவைபிலிருபின்காடழிப்புதமிழ் எண்கள்தஞ்சாவூர்கவிதைஔவையார் (சங்ககாலப் புலவர்)விசயகாந்துதமிழக வரலாறுதிருமங்கையாழ்வார்மரம்சென்னை உயர் நீதிமன்றம்நாயக்கர்மயக்கம் என்னசிவாஜி (பேரரசர்)சிவம் துபேசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நல்லெண்ணெய்காமராசர்பொன்னகரம் (சிறுகதை)பூப்புனித நீராட்டு விழாஆறுமுக நாவலர்ஆந்திரப் பிரதேசம்உயிர்மெய் எழுத்துகள்பீப்பாய்பட்டினப்பாலைநிணநீர்க் குழியம்மெஹந்தி சர்க்கஸ்அகத்திணைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திரிகூடராசப்பர்புங்கைதிருமலை நாயக்கர்தமிழ்நாடு அமைச்சரவைஐஞ்சிறு காப்பியங்கள்சோழர்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)ரா. பி. சேதுப்பிள்ளைஇலட்சம்கொன்றைசீர் (யாப்பிலக்கணம்)நாயன்மார் பட்டியல்மட்பாண்டம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)அகநானூறுதிணைமாதோட்டம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்திய நாடாளுமன்றம்மருதமலை முருகன் கோயில்விடுதலை பகுதி 1சந்தனம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தொல்காப்பியர்பவுல் (திருத்தூதர்)அங்குலம்இந்தியாநாடார்காற்று வெளியிடைபிரபு (நடிகர்)திருவரங்கக் கலம்பகம்பிள்ளைத்தமிழ்கல்லணைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)போயர்ஐங்குறுநூறுவேதம்சிதம்பரம் நடராசர் கோயில்சிறுநீரகம்தரணிபெயர்ச்சொல்🡆 More