ஆனந்த் பக்சி

ஆனந்த் பக்சி (Anand Bakshi, 21 சூலை, 1930 - 30 மார்ச், 2002) என்பவர் இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஆவார்.

ஆனந்த் பக்சி
பிறப்பு(1930-07-21)21 சூலை 1930
இராவல்பிண்டி, பாக்கித்தான்
இறப்பு30 மார்ச்சு 2002(2002-03-30) (அகவை 71)
மும்பை, இந்தியா
பணிபாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1945–2002
உறவினர்கள்ஆதித்யா தத் (பேரன்)

பிறப்பு

பாக்கித்தானின் இராவல்பிண்டி நகரில் 1930 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் நாள் பிறந்தார்.

படிப்பும் பணியும்

இவரது படிப்பு பாதியிலேயே நின்றது. இந்திய கடற்படையில் 2 ஆண்டுகளும் ராணுவத்தில் 6 ஆண்டுகளும் பணியாற்றினார். இந்தியா- பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் லக்னோ வந்தார். அங்கு டெலிபோன் ஆப்ரேட்டராக பணியாற்றினார். பின்னர் டெல்லி சென்று மோட்டார் மெக்கானிக் வேலை செய்தார். சிறுவயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். இவரது கவிதைத் தொகுப்புகள் இந்திய ராணுவத்தின் சைனிக் சமாசார் என்ற பத்திரிகையில் வெளிவந்தன. [சான்று தேவை]

திரையுலக பயணம்

ராணுவத்திலிருந்து வெளிவந்த பின்னர் பம்பாயில் இந்தித் திரையுலகில் வாய்ப்புத் தேடி அலைந்தார். நல்ல குரல் வளம் கொண்ட இவர் முதன் முதலாக மோம் கீ குடியா என்ற படத்தில் பாடினார். அடுத்து பாகோம் மே பஹா அயி என்ற பாடலை பாடினார். தன் பலா ஆத்மி திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. 1965 ல் வெளிவந்த ஜப் ஜப் ஃபுல் கிலே என்ற படத்தில் இவர் இயற்றிய பாடல்களின் வெற்றியால் தான் இவருக்கு இந்தித் திரையுலகில் ஒரு அடையாளம் கிடைத்தது. பாடல்கள் எழுதுவதிலும் பின்னணி பாடுவதிலும் இந்தி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி சூழலையும் ஆழ்ந்த உணர்வையும் வெளிப்படுத்தினார்.

பாடல் எழுதிய திரைப்படங்களில் சில

விருதுகள்

சுமார் 600 படங்களில் 4000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 3 முறை (1982, 1996, 2000) பிலிம் பேரின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளைப் பெற்றார்.

மறைவு

ஆனந்த் பக்சி 2002-ஆம் ஆண்டு தமது 72 வது வயதில் மறைந்தார். இவர் இறந்தபின் வெளியான மெகபூபா திரைப்படத்தில் இவருடைய பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆனந்த் பக்சி பிறப்புஆனந்த் பக்சி படிப்பும் பணியும்ஆனந்த் பக்சி திரையுலக பயணம்ஆனந்த் பக்சி பாடல் எழுதிய திரைப்படங்களில் சிலஆனந்த் பக்சி விருதுகள்ஆனந்த் பக்சி மறைவுஆனந்த் பக்சி மேற்கோள்கள்ஆனந்த் பக்சி வெளி இணைப்புகள்ஆனந்த் பக்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மொழிசூல்பை நீர்க்கட்டிவடிவேலு (நடிகர்)காம சூத்திரம்திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்இரசினிகாந்துதிருவள்ளுவர்சிவபெருமானின் பெயர் பட்டியல்இந்திய அரசியல் கட்சிகள்இளையான்குடி மாறநாயனார்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பூரான்கண்ணதாசன்அழகர் கோவில்விருந்தோம்பல்பூஞ்சைவிண்ணைத்தாண்டி வருவாயாவேளாண்மைஇன்னா நாற்பதுசேக்கிழார்முரசொலி மாறன்ஒரு தலை ராகம்ஜெய்சீனாஅன்னை தெரேசாதிரிசாசித்த மருத்துவம்தமன்னா பாட்டியாவட்டார வளர்ச்சி அலுவலகம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்நல்லெண்ணெய்பிரஜ்வல் ரேவண்ணாபக்கவாதம்தீனா (திரைப்படம்)ஜிமெயில்தனியார் கோயில்ஜன கண மனபணவீக்கம்தண்டியலங்காரம்இராமலிங்க அடிகள்சிலப்பதிகாரம்ஸ்ரீகண்ணாடி விரியன்முக்குலத்தோர்விராட் கோலிநாளந்தா பல்கலைக்கழகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்தற்கொலை முறைகள்அருணகிரிநாதர்மறவர் (இனக் குழுமம்)மட்பாண்டம்ஒத்துழையாமை இயக்கம்சூரரைப் போற்று (திரைப்படம்)மயக்கம் என்னநீலகிரி வரையாடுஇன்று நேற்று நாளைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்செப்புஇரட்சணிய யாத்திரிகம்தமிழ் தேசம் (திரைப்படம்)ஆறுமுக நாவலர்அமித் சாபள்ளுகாதல் கோட்டைவெந்து தணிந்தது காடுமுலாம் பழம்இயற்கை எரிவளிவிளம்பரம்மே நாள்பரிதிமாற் கலைஞர்ஜவகர்லால் நேருசங்கம் (முச்சங்கம்)நான்மணிக்கடிகைசிந்துநதிப் பூகாற்றுஇலங்கையின் மாவட்டங்கள்மருமகன் (திரைப்படம்)சிவன்🡆 More