அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali; பிறப்பு: 15 ஆகத்து 1976) எத்தியோப்பிய அரசியலாளர்.
இவர் எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார். 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்பியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது.
அபிய் அகமது அலி Abiy Ahmed Ali | |
---|---|
2018 இல் அபிய் அகமது | |
எத்தியோப்பியாவின் 15-வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 ஏப்ரல் 2018 | |
குடியரசுத் தலைவர் | முலாத்து தெசோமே சாலி-வோர்க் சேவ்தி |
முன்னையவர் | ஐலிமரியாம் தேசாலென் |
எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணியின் 3-வது தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 மார்ச்சு 2018 | |
Deputy | தெமென்னி மெக்கோனென் |
ஒரோமோ சனநாயகக் கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 பெப்ரவரி 2018 | |
Deputy | இலெம்மா மெகர்சா |
முன்னையவர் | இலெம்மா மெகர்சா |
அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் | |
பதவியில் 6 அக்டோபர் 2015 – 1 நவம்பர் 2016 | |
பிரதமர் | ஐலிமரியாம் தெசாலென் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1976 பெசாசா, எத்தியோப்பியா |
அரசியல் கட்சி | ஒரோமோ சனநாயகக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி |
துணைவர் | சினாசு த்யாச்செவ் |
பிள்ளைகள் | 3 பெண்கள், வளர்ப்பு மகன் ஒருவர் |
கல்வி | மைக்ரோலிங்க் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி (BA) கிரீனிச்சுப் பல்கலைக்கழகம் (முதுகலை) ஆசுலாந்து பல்கலைக்கழகம் (MBA) அடிசு அபாபா பல்கலைக்கழகம் (PhD) |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (2019) |
இணையத்தளம் | FDRE Office of the Prime Minister |
Military service | |
பற்றிணைப்பு | எதியோப்பியா |
கிளை/சேவை | எத்தியோப்பிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1991–2010 |
தரம் | லெப். கேணல் |
போர்கள்/யுத்தங்கள் | எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் ஐநா உருவாண்டா பணி எரித்திரிய-எத்தியோப்பியப் போர் |
ஆளும் மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி கட்சி, ஒரோமோ சனநாயகக் கட்சி ஆகியவற்றின் தலைவராக அபிய் அகமது இருந்து வருகிறார். முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான அபிய் அகமது, எத்தியோப்பியத் தலைமையமைச்சர் ஆனது முதல், அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ஒரு பரந்த திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.
அக்டோபர் 2021 இல், அபி 5 அகமது இரண்டாவது முறையாக 5 ஆண்டு காலத்திற்கு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.
அபிய் அகமது எத்தியோப்பியாவில், காப்பியின் தோற்றத்துக்குப் புகழ்பெற்ற, தென்மேற்கேயுள்ள காஃபா மாநிலத்தில் உள்ள பேசாசா என்னும் ஊரில் 1976 ஆகத்து 15 ஆம் நாளன்று பிறந்தார். இவருடைய தந்தையார் அகமது அலி ஓர் ஓரோமோ இனத்தைச் சார்ந்த இசுலாமியர். அம்ஃகாரா இனத்தைச் சேர்ந்த எத்தியோப்பிய மரபு கிறித்துவரான இவருடைய மறைந்த தாய் தெசெட்டா வோல்டே, இவரது தந்தையின் நான்காவது மனைவி ஆவார்.)
அபிய் அகமது அவருடைய தாய்க்கு ஆறாவதும் கடைசியுமான மகன். இவரின் தந்தையாருக்கு இவர் 13 ஆவது மகவு. இவருடைய இளமைக்கால பெயர் அபியோத்து தமிழில்: "புரட்சி"). 1974 இல் நடந்த எத்தியோப்பியப் புரட்சிக்குப் பிறகு இப்படியான பெயர்கள் கொள்வது வழக்கமாக இருந்தது. அப்பொழுது அபியோத்து என்றறியப்பட்ட அபிய் அகமது உள்ளூர் தொடக்கப்பள்ளியில் படித்தார். பின்னர் உயர்நிலை பள்ளிப்படிப்பை அகரோ நகரத்தில் தொடர்ந்தார். பல ஆவணங்களின் படி இவர் கல்வியில் மிகுந்த ஆரவம் கொண்டிருந்தார். பிறருக்கும் கல்வியில் அக்கறை கொள்ளச்செய்தார்.
அபிய் அகமது தன் வருங்கால மனைவி இசீனாசு தயாச்சேவ் என்னும் அம்ஃகாரா இனத்துப் பெண்மணியை எத்தியோப்பிய பாதுகாப்புத் துறையில் இருந்தபொழுது சந்தித்தார். இசீனாசு தயாச்சேவ் கோந்தார் என்னும் மாவட்டத்தில் இருந்து வருபவர். இவர்களுக்கு மூன்று மகள்களும், தத்து எடுத்துக்கொண்ட ஒரு மகனும் உள்ளனர். அபிய் அகமது பன்மொழி பேசுபவர். இவருக்கு அஃபான் ஒரோமோ, அம்ஃகாரி, திகிரினியா, ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசத்தெரியும். இவர் உடலைத் தக்கநிலையில் வைத்திருக்கும் நற்பழக்கமும் ஆர்வமும் கொண்டவர். உடல்நலத்தோடு உளநலமும் முக்கியம் என எடுத்துரைப்பவர். இவர் பெந்தகோசுட்டு கிறித்துவ ஆர்வலர்.
This article uses material from the Wikipedia தமிழ் article அபிய் அகமது, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.