அன்னூட் சண்டை

ஹன்னூட் சண்டை (Battle of Hannut) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை.

பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து பெல்ஜியத்தை நோக்கி விரைந்தன.

ஹன்னூட் சண்டை
பெல்ஜியம் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி
அன்னூட் சண்டை
அழிக்கப்பட்ட இரு பிரெஞ்சு எஸ்.ஓ.எம்.யு.ஏ. எஸ்35 ரக கவச வண்டிகளை ஜெர்மானிய வீரர்கள் பார்வையிடுகிறார்கள்.
நாள் 12—14 மே 1940
இடம் ஹன்னூட், பெல்ஜியம்
கீழ்நிலை உத்தியளவில் பிரெஞ்சு வெற்றி

மேல்நிலை உத்தியளவில் ஜெர்மானிய வெற்றி

பிரிவினர்
பிரான்சு பிரான்சு
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
நெதர்லாந்து நெதர்லாந்து
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
பிரான்சு ரெனே பிரியூ
  • பிரான்சு கேப்ரியேல் பூகிரேய்ன்
  • பிரான்சு லாங்க்லாய்
நாட்சி ஜெர்மனி எரிக் ஹொயப்னர்
  • ஹோர்ஸ்ட் ஸ்டம்ஃப்
  • யொஹான் யொவாக்கீம் ஸ்டீவர்
பலம்
2 கவச டிவிசன்கள்
20,800 படை வீரர்கள்
600 கவச போரூர்திகள்
2 பான்சர் (கவச)டிவிசன்கள்
25,927 படை வீரர்கள்
618 டாங்குகள்(some sources say 674)
108 பீரங்கிகள்
1,252 aircraft
இழப்புகள்
121 டாங்குகள்,
60 மாண்டவர்
80 காயமடைந்தவர்
49 டாங்குகள் அழிக்கப்பட்டன
111 டாங்குகள் சேதமடைந்தன

மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது இருமுனைத் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மனியின் போர் உபாயத் திட்டமான “மஞ்சள் திட்ட” (ஜெர்மன்: Fall Gelb) த்தின்படி பெல்ஜியம் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதலாகும். இதன் மூலம் பிரான்சின் முதன்மைப் படைப்பிரிவுகளை பெல்ஜியத்திற்கு வரவழைக்க வேண்டும். அவை பெல்ஜியத்தை அடைந்த பின், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மானிய ஆர்மி குரூப் ஏ முக்கியத் தாக்குதல் நடத்த வேண்டுமென்று மஞ்சள் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரெஞ்சு முதலாம் ஆர்மியை பெல்ஜியத்துக்கு இழுக்க மே 12ம் தேதி இரண்டு ஜெர்மானிய கவச டிவிசன்கள் பெல்ஜியத்தின் ஹன்னூட் பகுதியைத் தாக்கின. அவற்றை எதிர்கொள்ள பிரெஞ்சு முதலாம் ஆர்மி விரைந்து வந்து எதிர்த் தாக்குதல் நடத்தியது. இச்சண்டையிலும் மே 15ம் தேதி நடந்த ஜெம்புளூ சண்டையிலும் பிரெஞ்சுப் படைகளே வெற்றி பெற்றன. இவ்விரண்டில் ஜெம்புளூ சண்டையே முக்கியமானது. ஹன்னூட் சண்டை ஜெம்புளூச் சண்டையின் துணைச் சண்டையே (screening action). இச்சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, ஆர்டென் காட்டில் நடந்த முக்கிய ஜெர்மானிய தாக்குதல் வெற்றி பெற்றது. அங்கு பிரெஞ்சு அரண் நிலையை உடைத்து முன்னேறிய ஜெர்மானியப் படைகள் பத்து நாட்களில் ஆங்கிலக் கால்வாயை அடைந்து விட்டன. இதனால் பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டுப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. ஹன்னூட்டிலும் ஜெம்புளூவிலும் பிரெஞ்சுப் படைகள் அடைந்த வெற்றி பயனில்லாமல் போனது.

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Tags:

ஆர்டென் காடுஇரண்டாம் உலகப் போர்நாசி ஜெர்மனிபெல்ஜியம் சண்டைமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

அம்பேத்கர்தமிழ்நாட்டிலுள்ள அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்கடல்மஞ்சும்மல் பாய்ஸ்சிதம்பரம் நடராசர் கோயில்கொடைக்கானல்இராமர்மதுரை வீரன்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)நடுக்குவாதம்முத்தொள்ளாயிரம்சுற்றுச்சூழல்வாதுமைக் கொட்டைஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைபஞ்சாயத்து ராஜ் சட்டம்தினத்தந்திமகேந்திரசிங் தோனிகர்நாடகப் போர்கள்கருமுட்டை வெளிப்பாடுசோழர்முத்துராஜாவீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்ஆளி (செடி)இராமானுசர்புதினம் (இலக்கியம்)அண்ணாமலை குப்புசாமிகல்லீரல்தொல்லியல்கினோவாமுடியரசன்ஏறுதழுவல்தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்சிறுத்தொண்ட நாயனார்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஔவையார்நாட்டார் வழக்காற்றியல்ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்)இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஇந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பட்டியல்கரகாட்டம்மரபுச்சொற்கள்தமிழர்தமிழ் விக்கிப்பீடியாஇராமலிங்க அடிகள்தமிழர் பண்பாடுசிவன்அறுவகைப் பெயர்ச்சொற்கள்முதல் மரியாதைமாத்திரை (தமிழ் இலக்கணம்)சப்ஜா விதைஈ. வெ. இராமசாமிகருக்காலம்கலித்தொகைஅகத்தியர்எட்டுத்தொகை தொகுப்புதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மே 7தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024வெள்ளிவீதியார்மோதிலால் நேருநீக்ரோராஜ்கிரண்பொன்னுக்கு வீங்கிபுனைகதைமுத்துலட்சுமி ரெட்டிபணவீக்கம்காதல் தேசம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இடைச்சொல்இந்திய வரலாறு2024 இந்தியப் பொதுத் தேர்தல்இலங்கையின் பொருளாதாரம்சுடலை மாடன்தொடை (யாப்பிலக்கணம்)நருடோதிராவிசு கெட்🡆 More