வில்லியம் வெட்டர்பர்ன்

சர் வில்லியம் வெட்டர்பர்ன் (Sir William Wedderburn), (25 மார்ச் 1838 – 25 ஜனவரி 1918), ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய இந்தியாவின் அரசின் இந்தியக் குடிமைப் பணி அதிகாரி மற்றும் அரசியல்வாதி ஆவார்.

சர் வில்லியம் வெட்டர்பர்ன்
வில்லியம் வெட்டர்பர்ன்
சர் வில்லியம் வெட்டர்பர்ன்
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1893–1900
முன்னையவர்சர் ராபர்ட் டூப்
பின்னவர்அலெக்சாண்டர் வில்லியம் பிளாக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மார்ச் 1838
எடின்பர்க், ஸ்காட்லாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு25 சனவரி 1918(1918-01-25) (அகவை 79)
மெரிடித், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சிலிபரல் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் கல்லூரிஎடின்பர்க் பல்கலைக்கழகம்
தொழில்இந்தியக் குடிமைப் பணி அதிகாரி, அரசியல்வாதி
வில்லியம் வெட்டர்பர்ன்
ஆலன் ஆக்டவியன் ஹியூம் (இடது), தாதாபாய் நௌரோஜி (நடுவில்), சர் வில்லியம் வெட்டர்பர்ன் (வலது)

அவரது பணிக்காலத்தில் இந்திய வேளாண்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வங்கித் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர முயற்சித்தார். இவரது முயற்சிகளுக்கு ஆங்கிலேய நிர்வாகாத்தினர் முட்டுகட்டைகள் போட்டதால், அரசுப் பணியிலிருந்து விலகி, இந்திய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் ஆலன் ஆக்டவியன் ஹியூம் ஆகியவர்களுடன் இணைந்து 1885ல் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பை பம்பாய் நகரத்தில் நிறுவி, இந்தியர்களுக்கான சுயாட்சி அரசை நிறுவ உதவினார்.


பணிகள்

1860ல் இந்தியக் குடிமைப் பணியில் சேர்ந்த வில்லியம் வெட்டர்பர்ன், சிந்து மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் பம்பாய் மாகாண அரசின் செயலளர் பதவியிலும், 1885 முதல் பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியவர். 1887ல் பம்பாய் மாகாண அரசின் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்திய வேளாண் குடிமக்கள் அநியாய வட்டிக்கு கடன் பெற்று, பின்னர் கடனை தீர்ப்பதற்கு படும் துயரங்களை நீக்க வேண்டி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை நிறுவ பாடுபட்டவர். மேலும் இந்தியா நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகளை நிறுவி, அதன் மூலம் இந்தியர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த பாடுபட்டவர்.

இந்திய மக்கள் நவீன அரசியலை கற்றுக் கொள்வதற்கு வசதியாக, தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் ஆலன் ஆக்டவியன் ஹியூம் ஆகியவர்களுடன் இணைந்து 1885ல் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பை நிறுவ பாடுபட்டார். வில்லியம் வெட்டர்பர்ன், 1889-1890 ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். கோபால கிருஷ்ண கோகலேவுடன் நெருங்கிப் பழகியவர்.

வில்லியம் வெட்டர்பர்ன் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக 1893 முதல் 1900 வரை பணியாற்றியவர்.

வெளிட்ட நூல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

வில்லியம் வெட்டர்பர்ன் பணிகள்வில்லியம் வெட்டர்பர்ன் வெளிட்ட நூல்கள்வில்லியம் வெட்டர்பர்ன் மேற்கோள்கள்வில்லியம் வெட்டர்பர்ன் வெளி இணைப்புகள்வில்லியம் வெட்டர்பர்ன்இந்தியக் குடிமைப் பணிஐக்கிய இராச்சியம்பிரித்தானிய இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்உத்தரகோசமங்கைமார்ச்சு 28இரசினிகாந்துமூசாஅறுசுவைமுத்துக்கு முத்தாக (திரைப்படம்)இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)அப்துல் ரகுமான்ஆசாரக்கோவைமூவேந்தர்அத்தி (தாவரம்)திருக்குர்ஆன்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019பிரித்விராஜ் சுகுமாரன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்ஆசியாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ஆண்டாள்உரைநடைஇந்தியத் தேர்தல் ஆணையம்மீனா (நடிகை)நெடுநல்வாடை (திரைப்படம்)உமறு இப்னு அல்-கத்தாப்ஆசிரியர்காப்பியம்பிரீதி (யோகம்)தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்ஆரணி மக்களவைத் தொகுதிகட்டுரைஇந்திய வரலாறுஅதிமதுரம்ராதாரவி2014 உலகக்கோப்பை காற்பந்துஆத்திரேலியாசுரதாமுத்துராமலிங்கத் தேவர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கலித்தொகைகண்ணப்ப நாயனார்விஷ்ணுகொல்கொதாமு. வரதராசன்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்தைராய்டு சுரப்புக் குறைதி டோர்ஸ்வ. உ. சிதம்பரம்பிள்ளைகொடைக்கானல்இந்தியன் பிரீமியர் லீக்மாமல்லபுரம்அருந்ததியர்செக் மொழிசீரடி சாயி பாபாமாலைத்தீவுகள்பெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தேர்தல் பத்திரம் (இந்தியா)கொல்கத்தா நைட் ரைடர்ஸ்நவதானியம்வாதுமைக் கொட்டைநானும் ரௌடி தான் (திரைப்படம்)தென்காசி மக்களவைத் தொகுதிநம்மாழ்வார் (ஆழ்வார்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தனுசு (சோதிடம்)காயத்ரி மந்திரம்சிறுபஞ்சமூலம்சிவவாக்கியர்மதுரைஅக்பர்லொள்ளு சபா சேசுஇந்திய அரசியலமைப்புகாளமேகம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நாடாளுமன்ற உறுப்பினர்பந்தலூர் வட்டம்🡆 More